20160803

Ananthi Ananthi >>>என்ன பண்றது சகோ நிறைய வதந்திகள் வந்தா (உண்மை மாதிரி ) நம்பாமல் இருக்க முடியுமா ? தகவலுக்கு நன்றி<<<
நாம் வதந்திகளை நம்பியே பழகிவிட்டவர்கள். உண்மையை அறிய ஒரு முயற்சியும் எடுக்காதவர்கள்.
இந்த ஒரு விசயத்தில் நான் வெள்ளைக்காரன் பக்கம்தான். எதைச் சொன்னாலும் வள்ளுவன் சொன்னதைத் தமிழன் செய்யமாட்டான், ஆனால் பிறப்பிலேயே வெள்ளைக்காரன் அப்படித்தான் செய்வான்.
எச்சொல் யார் யார் வாய் கேட்பினும் அச்சொல்
மெய்ப்பொருள் காண்பதறிவு
அந்த அறிவு தமிழர்களுக்கு மிக மிகக் குறைவுதான்.
அதனால்தான் நாம் மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறோம்!

*
நான் நல்லிணக்கம் பற்றிப் பேச வருகிறேன். சில விச ஜந்துக்கள் தங்கள் விகாரங்களைக் கொண்டு நான் எந்த மதத்தில் இருக்கிறேனோ அதைத் தாக்கி எழுதி என்னைக் கோபப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இப்போது நான் தெளிவாகச் சொல்கிறேன். இன மத மொழி நல்லிணக்கம் உலகில் நிறைவாய் இருக்கிறது. அதுதான் அழுத்தமான உண்மை.
ஆனால் ஓர் அழகிய ஊர் என்றால் அங்கு ஓரிரு பன்றிகளும் இருக்கும் என்ற நியதிப்படி விச ஜந்துக்களும் இருக்கத்தான் செய்யும்.
அவை நல்லிணக்கத்திற்கு எதிராகத்தான் அலப்பறையும் 
அந்த அற்பங்களுக்காக, மனிதர்களே உங்கள் நல்லிணக்க எண்ணங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்.
பொய்முன் உண்மை தோற்காது, தோற்கவும் கூடாது.
சிறந்த ஆன்மிகவாதியும் சிறந்த கடவுள் மறுப்பாளனும் நல்லிணக்கம் ஒன்றையே நாடுவான்.
ஏனைய வெத்து வேட்டுகளை நாம் அறங்கொண்டு அழித்தெறிவோம்.

*
என்னளவில் மொழியும் நிஜம் மார்க்கமும் நிஜம்.
மார்க்கம் என்பது பரிசுத்தமான அறம்.
அறம் எப்படி பொய்யாக முடியும்?

*
Yousuf Syed Faried >>>மார்க்கம் என்பது வழியாக பொருள் கொண்டால் நாத்திகமென்பதென்ன?<<<
வாழ்க்கையை வகுத்துத் தந்து எல்லோரும் இன்புற்றிருக்க வழி சொல்வது மார்க்கம்.
1. நல்லவர்கள் இயல்பாகவே வகுத்த வழியில் செல்வர். அப்படி ஒரு வழி வகுக்கப்படாமலேயே நல்வழியில் தாமே செல்வர்.
2. கெட்டவர்கள் வகுத்த வழிக்கு எதிர் திசையில் செல்வர். வகுத்த வழியில் செல்பவர்களையும் தடுத்துக்கொண்டு நிற்பர்.
3. நல்லவர்களாகவும் இல்லாமல் கெட்டவர்களாகவும் இல்லாமல் இருப்பவர்கள், இங்கும் அங்கும் சாய்ந்தவண்ணமாய் யார் எதை எப்போது சொன்னாலும் அதை அப்போதைக்கு ஏற்றும் மறுத்தும் செல்பவர்களாகவும் நிறைய ஐயங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பர்.
மார்க்கத்தில் வகுத்த வழியை மனிதர்களைக் கட்டாயம் கடைபிடிக்கச் செய்யவேண்டும்.
இல்லாவிட்டால் வகுத்த வழி செயல்பாட்டில் இல்லாமல் உலகம் அழிவை நோக்கியே செல்லும்.
2. இரண்டாம் வகையினருக்குக் கடவுள் பக்தி அவசியம் வேண்டும். நாட்டின் சட்டங்களும் வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாது.
1. முதலாமவர்களுக்கு கடவுள் பக்தி இருந்தால் நல்லது. ஆனால் கட்டாயம் இல்லை. நாட்டின் சட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சரியாகத்தான் நடப்பர்.
3. மூன்றாமவர்களுக்கு கடவுள் பக்தி வரவே வராது. அரசின் சட்டங்களும் தோற்றுப் போகும். கடவுள் பக்தி வந்துவிட்டால், மார்க்க அறிவு பெற்றுவிட்டால், இரண்டாமவர்களாய் மாறிவிடுவார்கள்.
இதில் கடவுள் மறுப்பாளர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
மூன்று நிலைகளிலும் இருக்கிறார்கள்.
ஆகவே கடவுள் மறுப்பாளர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அரைகுறைகள் இருக்கிறார்கள். கேடுகெட்டவர்களும் இருக்கிறார்கள்.

*
சிறந்த ஆன்மிகவாதியும் சிறந்த கடவுள் மறுப்பாளனும் நல்லிணக்கம் ஒன்றையே நாடுவான்.

*
#####
<வன்முறை இல்லா உலகம் வேண்டும்> வன்முறைக்கு காரணமாக அன்றாடம் உலகில் நடப்பதை தொகுத்து இட்டால் மன்றாடி வேண்டாம் என்கிறீர்கள். இன்றைய காலகட்டத்தில் மதங்கள்தான் வன்முறைக்கு காரணம். அதை முதலில் ஒழிக்கணும்.
#####
வேந்தன் அரசு, ஒரு மிக முக்கியமான விசயத்தை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.
இது காட்டுமிராண்டிக் காலம் இல்லை.
காட்டுமிராண்டிக் காலங்களில் மனிதர்களை நல்வழிப்படுத்த மகான்கள் தோன்றினார்கள். வாழ்க்கையை வகுத்துக்கொடுத்தார்கள்.
அவர்கள் வகுத்துக்கொடுத்தவைகளைக் கொண்டு நாட்டின் சட்டங்களும் வகுக்கப்பட்டன.
முகம்மது நபிபெருமானாரே தானே இறுதி இறைத்தூதர் இனி யாரும் இல்லை என்று கதவுகளை அடைத்துவிட்டார்.
அதன் பொருள் என்னவென்றால், சொல்வதெல்லாம் சொல்லியாச்சு, காட்ட வேண்டிய வழியெல்லாம் காட்டியாச்சு. இனி எல்லாம் உங்கள் கைகளில்தான் என்பதுதான் பொருள்.
கூடவே போலிச்சாமியார்கள், போலிக் கடவுள்கள்தோன்றத் தொடங்கிவிடுவார்கள். அவர்களெல்லாம் பொய் என்பதன் அழுத்தமான முன்னறிவிப்பே முகம்மது நபியவர்கள் செய்தது.
நீங்கள் பகுத்தறியமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள். ஆனால் பகுத்தறிவாளர் என்று மார்மட்டும் தட்டிக்கொள்கிறீர்கள். ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்.
சரி விசயத்துக்கு வருவோம்.
இனி நாம் எல்லோரும் நலமாக இணக்கமாக வன்முறையற்று வாழவேண்டும்.
மார்க்கம் காட்டிய வழியில் சென்றால் இணக்கம், வன்முறை மறுப்பு எல்லாம் தானே வந்து சேரும்.
எனக்கு கடவுளும் வேண்டாம் மார்க்கமும் வேண்டாம் என்று சொல்லி கடவுளை மறுக்கலாம், ஆனால் மார்க்கத்தை உங்களால் மறுக்கவே முடியாது.
ஏன்?
மார்க்கம் என்பது வாழும் வாழ்க்கை நெறி. சிறு உதாரணம் சொல்வதெனில் வள்ளுவரின் குறள்கள் தரும் பாடங்களைப் போன்றன.
அவற்றைக் கொண்டுதான் நாட்டின் சட்டங்கள் உருவாகி இருக்கின்றன. நீங்கள் நாட்டின் சட்டங்களை வேண்டாமென்று சொல்லமுடியாது. அந்த நிலையில் மார்க்கத்தை மறுக்கவே முடியாது.
இனி, நீங்கள் கடவுளை மறுக்கும் மறுப்பாளராய் தாராளமாக இருங்கள், பற்றாளர்களாய் அவர்கள் இருக்கட்டும்.
இருவரும் உண்மையானவர்களாய் மட்டும் இருங்கள்.
இருந்தால் அன்பு அறம் இரண்டும் அருமையாய் இருக்கும்.
மனிதம் போற்றி இணக்கம் கொள்ளுங்கள். சும்மா எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கிண்டல் நக்கல் என்று தொடங்கி வன்முறையில் ஈடுபடாதீர்கள்.
எல்லோரையும் கட்டியணையுங்கள். உங்கள் ரேகை உங்கள் பிள்ளைகளுக்கும் இல்லை.
அவர் ரேகை அவருக்கு உங்கள் ரேகை உங்களுக்கு
அவர் வழி அவருக்கு உங்கள் வழி உங்களுக்கு
எந்த வழியாக இருந்தாலும் அது அமைதி வழியாக வன்முறை அற்ற வழியாக மனிதநேயம் போற்றும் வழியாக இருக்கட்டும்

*
======================
வேந்தன் அரசு <அறங்கொண்டு அழித்தெறிவோம்.> யாரேனும் இதை தவறாக புரிந்துகொள்ளலாம்.
======================
எம் ஜி ஆர் திரைப்படங்களில் ஓர் அரிய தத்துவத்தை முன்வைத்தார். அது காந்திய வழிதான். அதைத்தான் அவர் திரைப்படத்தில் வைத்தார்.
கொடூரமான வில்லன்கள் அவர் படத்தில் நிறைந்து இருப்பார்கள்.
கடைசியில் அவர்கள் யாரையும் கொல்லவே மாட்டார். அத்தனை வில்லன்களையும் திருத்தி மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் செய்வார்.
மன்னிப்புக் கேட்டதும் பாசத்தோடு அள்ளி எடுத்து அணைத்துக்கொள்வார்.
இதன் பெயர்தான் அறங்கொண்டு அழித்தெறிவது.
அழிக்கப்பட வேண்டியது மனிதர்கள் என்றால் அதற்கு வன்முறை தேவை
அழிக்கப்பட வேண்டியன தீய எண்ணங்கள் என்றால் அதற்கு அறம் தேவை.
அறம் தரும் தேவியரே மார்க்கங்கள்

*
இல்லாத கடவுளை நீங்கள்
வணங்கவே வேண்டாம்.
இருக்கும் கடவுளை
வணங்குபவர்களுக்கு முன் 
குரங்குக் குத்தாட்டம் போடாதீர்கள் 


No comments: