ஞானி அறிஞன்

ஞானி என்றால் 
அறிஞன் என்று பொருள்
வேறு ஏதேதோ கற்பனைகளை எல்லாம் 
செய்து கொள்ள வேண்டாம்

*


>>>>பெண், குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<<<<<
இப்படி பெண் மாறுவது தவறு. ஆணை அனாதை ஆக்கிவிட்டால், அவன் மனம் அலையத் தொடங்கும். ஏக்கம் வளர்ந்து அவனை அவன் நல் குணங்களைத் திசை திருப்பும்.
ஓர் ஆணுக்கு தன் ஆயுள் முழுவதும் காதலும் காமமும் வேண்டும். அதை மனைவிதானே தரவேண்டும். தராவிட்டால் வேறு எங்கேயாவதுபோய் பெற்றுக்கொள் என்றுதானே அர்த்தம் ஆகிறது.
பெண்கள் இதைக் கவனமானவும் அக்கறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.
30 வயதுக்கு முன் பெண் அலங்கரித்துக்கொண்டு தன் கணவன் முன் நிற்பது அத்தனை அவசியம் இல்லை. ஆனால் 30க்குப்பின் ஒரு புதுப்பெண்ணைப்போல் தன்னை அலங்கரித்து கணவனின் விழிகளை இழுக்க வேண்டும்.
ஓர் ஆணை பெண் கவர்ந்துவிட்டால் அவன் ஒன்றுமற்ற பெட்டிப்பாம்புதானே?
ஆனால் அப்படி கவராவிட்டால் அவன் பெட்டியைவிட்டு வெளியே வந்த பாம்பு என்று சொல்லத் தேவையே இல்லை.

*


*
Leo Lp இதில் முத்துக்குமாருடன் குடித்தவர்கள் எத்தனை பேர், ஊற்றிக் கொடுத்தவர்கள் எத்தனை பேர்?
>>>>>>>>>>>>>>>>>
இது நல்லா இருக்கு! இப்படிக் கேளுங்கள் நான் உங்கள் உடன் இருப்பேன்.
நான் கனடாவில் வாழும் ஒரு கவிஞன். ஒரு பத்திரிகையாளரைச் சந்திப்பதாகச் சொல்லி இருந்தேன்.
அவரோ பாட்டில் கனவுகளில் மிதந்திருக்கிறார்.
நான் குடிப்பதில்லை என்றதும் அந்தச் சந்திப்பே அவசியம்தானா என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டார்.
ஆக்குகிறவனை அழிக்கத் துடிக்கும் சமுதாயமாக எழுத்துலகம் இருக்கிறது ஊரில்

*
ஜெயமோகன் எனக்கு எதிரியும் இல்லை நண்பரும் இல்லை.
அவர் எழுதுவதில் எது பிடிக்கிறதோ அதைப் பாராட்டுவேன். எது பிடிக்கவில்லையோ அதை விமரிசிப்பேன்.
இங்கே நண்பரின் இழப்புக்கான காரணம் நன்றாகத் தெரிந்தவராகப் பதிவிட்டிருக்கிறார்.
முழுப்பதிவையும் நீங்கள் அவர் தளத்தில் காணலாம்.
நா முத்துக்குமாரை என்னால் இழக்க முடியவில்லை.
நான் அவர் பாடல்களின் ரசிகன்.
அவரைக் கொண்டுபோனது சாராயம்தான் என்றால், இனியும் அது எவருக்கும் நிகழவே கூடாது என்று விரும்புகின்றேன்

*
Swathy Rajan
<<<அறம் என்பதன் பொருள் ஒவ்வொருவர் கலாச்சாரத்தை பொறுத்து வேறுபடுமா? மேலைநாட்டில் பெண்களானாலும் ஆண்களானலும் ஒருத்தருக்கு ஒருவர் என்று வாழ்வதில்லையே?>>>
உலகப் பொது அறம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் முதலில்.
அறம் ஆயிரம்பேர் சொல்வார்கள்.
அத்தனையும் அறம்தான் என்றாலும் அது பொது அறம்போல உயர் மேன்மை கொண்டதாக இருக்கமுடியாது.
அது என்ன பொது அறம்?
உலகில் எல்லோருக்குமான இணக்கமான இனிமையான சிக்கலில்லாத வாழ்க்கைப்பயணத்தை வகுத்துத் தரும் அறம்தான் பொது அறம்.
எந்தக் கலாச்சாரம் ஆனாலும், பொது அறத்துக்கு உள்தான் இருக்க வேண்டும்.
எந்த சாதி எந்த மதம் எந்த இனம் எந்த குழுமம் எதுவாக இருந்தாலும் பொது அறத்துக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்.
ஏனெனில் பொது அறம்தான் உலகம் முழுவதற்குமான மனிதநேயத்தை அள்ளித்தருவது, மனித வாழ்வை மலரச் செய்வது. மண்ணிலேயே சொர்க்கம் காண வழி செய்வது

*





No comments: