மழை


இதழ்களிலிருந்து
நழுவினால் முத்தம்
இதயத்திலிருந்து
நழுவினால் காதல்

மலையிலிருந்து
நழுவினால் அருவி
மேகத்திலிருந்து
நழுவினால் மழை

ஒவ்வொரு முறையும்
ஆனந்தச் சந்தம்
ஒவ்வொரு துளியிலும்
இளமையின் உச்சம்

அலையலையாய்
அஞ்சலெழுதும் கடல்
மேகமாய் எழுந்து
நிலமேனியில்
சில்லென்று பொழியும்
காதல் இச்சுக்கள்
மழை

உடல் முழுவதும்
ஓடும் ரத்தம்
உப்புக்கரித்தாலும்
முத்த எச்சில் மட்டும்
இனிப்பாய் இருப்பது
மனிதருக்கு மட்டுமல்ல
கடலுக்கும்தான்

Comments

மழையைப் பற்றிய அருமையான கவிதை.

//உடல் முழுவதும்
ஓடும் ரத்தம்
உப்புக்கரித்தாலும்
முத்த எச்சில் மட்டும்
இனிப்பாய் இருப்பது
மனிதருக்கு மட்டுமல்ல
கடலுக்கும்தான்//

என்ன சிந்தனை - பாராட்டுகள். ஆழ்ந்து அனுபவித்த சிந்தனை. அனுபவத்தின் வெளிப்பாடு.

//அலையலையாய்
அஞ்சலெழுதும் கடல்
மேகமாய் எழுந்து
நிலமேனியில்
சில்லென்று பொழியும்
காதல் இச்சுக்கள்
மழை//

எளிமையான சொற்களைக் கொண்ட அடிகள். சட்டெனப் புரியும் கவிதை.
துடிப்புகள் சுதிசேர வில்லை எனில் - எங்கு கொட்டுவது நண்பரே !
====
துடிப்புகள் சுதிசேர வில்லை எனில் - எங்கு கொட்டுவது நண்பரே !
====

என் தலையில்தான் உங்கள் கைமுட்டியைக் கூர்தீட்டிக்கொண்டு :)))

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே