கவிஞன் என்பவன்...


தனக்குள்
எரியும் நெருப்பைத்
திரியில் ஏற்றும் எரிமலை

புழுக்கள்
நிறைந்த பூமியைச்
சலிக்கத் தெரிந்த சல்லடை

அனுபவ
ரத்தம் திரித்து
பாலாய்ச் சுரக்கும் மார்பு

மொழியின்
வேர்கள் உலுக்கி
பூக்கள் கொட்டும் காம்பு

உணர்வின்
விரல்கள் விரித்து
உழலும் உயிர்க்கு மருந்து

நிலவும்
வாழ்க்கை வழக்கில்
தலைமுறை கடந்த தீர்ப்பு

மறுக்கும்
தரையை மிதித்து
பறக்கத் தெரிந்த பறவை

Comments

நீங்கள் சொல்வது போல் எவன் எழுதுகிறானோ அவனே உண்மையான் கவிஞன். இதில் சந்தேகமில்லை.
ஒரு சுயதரிசனம் காணச் செய்யும் விமரிசனமாய் இருக்கும் உங்கள் கருத்துக்கு என் நன்றி ஜான் பீட்டர்..

மீண்டும் மீண்டும் வருக
உங்களின் அற்புதக் விமரிசனங்களால் என் கருத்துக்கூட்டை நிறைக்க!

எழுதப்படும்போது கவிதை உணரப்பட்டுத்தான் வெளிவருகிறது.

ஆயினும் முழுவதும் இறக்கிவைத்துவிட்ட நிறைவு கவிஞனுக்கு வருவதில்லை.

எழுதப்பட்டது வாசிக்கப்பட்டு சரியாக உணரப்படும்போதுதான் கவிஞன் நிறைவின் உச்சிமுடியைத் தொட்டுப் பார்க்கிறான்.

அன்புடன் புகாரி
பூங்குழலி said…
தனக்குள்
எரியும் நெருப்பைத்
திரியில் ஏற்றும் எரிமலை

மொழியின்
வேர்கள் உலுக்கி
பூக்கள் கொட்டும் காம்பு

அருமை
புன்னகையரசன் said…
அருமை ஆசான்...--
பிரார்தனைகளுடன்...
M.I.B
Saran said…
அற்புதம்!

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே