சின்ன இதழ்களோ செம்பவளம்


சின்ன இதழ்களோ
செம்பவளம்

சுற்றுமிரு
வண்ண விழிகளோ
வண்டினம்

பெண்ணேயுன்
புன்னகை
எவ்வகைப் பூவினம்

கண்டதும்
என்மனம் இல்லையே
என்வசம்

2 comments:

Anonymous said...

எவிடேப்போய் மானசம்:-)

அன்புடன் என் சுரேஷ்

அன்புடன் புகாரி said...

அன்பின் சுரேஷ்,

மானசம் என்றால் என்ன?

இந்தக் கவிதையை இப்படி மடித்தெழுதியும் வாசிக்கலாம்

சின்ன இதழ்களோ செம்பவளம் சுற்றுமிரு
வண்ண விழிகளோ வண்டினம் பெண்ணேயுன்
புன்னகை எவ்வகைப் பூவினம் கண்டதும்
என்மனம் இல்லையே என்வசம்