சுயமறிதல்


என்
தோகையையே
நான் விரிக்காதவன்

என்
நகங்களையே
நான் அணியாதவன்

ஏமாளியல்ல
இதயம் உள்ளவன்
கோமாளியல்ல
கருணை உள்ளவன்

மனிதநேயத்தோடு
நின்றால் கேலி
பித்தலாட்டத்தோடு
நின்றால் கைத்தட்டல்

உலகம் வினோதமானது
ஆனால்
நான் நானாக இருத்தல்தான்
எனக்கு இயல்பானது
இதய சுகமானது

Comments

சுயமறிதல் மிகவும் கடினமான செயல். மாறிக்கொண்டே வரும் கால கட்டத்தில், உலகில், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் இயலாத போது, தனித்து நின்று செயலாற்ற வேண்டும்.

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே