துளி ஆசை

மழைத்துளியாய்ப்
பிறந்து

மேக மடிகளிலிருந்து
தொப்புள் கொடியைத்
தொல்லையில்லாமல்
துண்டித்துக்கொண்டு

நழுவி நழுவி
பரந்த ஆகாய வெளியின்
குளிர்ந்த காற்றில்
சறுக்கிக்கொண்டு

அடங்காத ஆவலோடு
குப்புறக் குதித்துத்
தாய் மண் முத்தமிட்டு

அதன்
எச்சிலாய் மீண்டும்
ஐக்கியமாவதைச்
சிந்தித்தாலே சிலிர்க்கிறது

அடுத்ததொரு
சறுக்கு விளையாட்டுக்கு
ஆவலாய்க்காத்திருக்கும்
அழிவில்லாத
அப்படியோர் மழைத்துளியாய்ப்
பிறப்பதே
இந்தக்
கவிதையின் ஆசை

Comments

prabu KUMARAN said…
மனதை ஈர்த்து.. மழையில் நனையவைக்கும் அழகான கவிதை திரு.புகாரி.
-த.பிரபு குமரன்
Selvi Shankar said…
மழைத்துளி மகிழ்வைத்தரும்.
மகிழ்ச்சி மழையில் நனைந்தால்
மண்ணில் நாம் மிதப்பராவோம்

அன்புடன் ..... செல்வி ஷங்கர்
Kanthi said…
விண்ணையும் மண்ணையும்
இணைக்கும் வெள்ளி கம்பிகளைப்பற்றி
எத்தனைக் கவிதைகள் எழுதினாலும்
இரசித்துக்கொண்டே இருக்கலாம், புகாரி!

பிகு : உங்கள் கவிதைகளுக்கு இன்னும் மிகப் பொருத்தமான படங்களை போடக்கூடாதா> :-)

இரசித்த வரிகள்!

பரந்த ஆகாய வெளியின்
குளிர்ந்த காற்றில் சறுக்கிக்கொண்டு
அடங்காத ஆவலோடு
குப்புறக் குதித்துத்
தாய் மண் முத்தமிட்டு
பூங்குழலி said…
தாய் மண் முத்தமிட்டு
அதன் எச்சிலாய் மீண்டும்
ஐக்கியமாவதைச்
சிந்தித்தாலே சிலிர்க்கிறது
அடுத்ததொரு

நன்றாக இருக்கிறது
புன்னகையரசன் said…
நானும் மழைக் காதலன் தான்.... ஆனா இதுவரைக்கும் இப்படி ரசிச்சதில்லை....

கைகளை விரித்து மழையை அரவணைக்க அனுபவிக்க மட்டுமே அறிவோம்...

அருமை ஆசான்....


--
பிரார்தனைகளுடன்...
M.I.B
என் சுரேஷ் said…
அன்புள்ள கவிஞர் புகாரி,

மழையைக் கண்டதும் குடை தேடும் மடையன் எனது மண்டையில் தட்டி உபதேசித்தது இந்த கவிதை, "டேய் மழையையும் காதலி..." - ஓ ... அவளும் என் காதலியா...!! உணர்ந்ததும் மகிழ்ச்சி!

அன்புடன் என் சுரேஷ்
சாந்தி said…
அழகான வர்ணனை...

வேறு அர்த்தம் ஏதும் உண்டா?.. தாய்நாடு தேடுதா என்ன?..
சாந்தி said…
அழகான வர்ணனை...

வேறு அர்த்தம் ஏதும் உண்டா?.. தாய்நாடு தேடுதா என்ன?..
சிவா said…
குளிர்ந்த காற்றில் சறுக்கிக்கொண்டு
அடங்காத ஆவலோடு
குப்புறக் குதித்துத்
தாய் மண் முத்தமிட்டு
அதன் எச்சிலாய் மீண்டும்
ஐக்கியமாவதைச்
சிந்தித்தாலே சிலிர்க்கிறது


ஆகா அருமை ஆசான்...
Govi Selvaraj said…
nalla kavithai

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ