நீதானா அம்மா


என்னைக் கொன்றுபோட
மருத்துவக் கொலைகாரியை
உன் கோட்டைக்குள்ளேயே ஏவியது
நீதானா அம்மா

உன் காதலின் பரிசாகத்தானே
நான் கருவானேன்

என் ஜீவன் மொத்தத்தையும் உருக்கி
உன்னை அம்மாவென்று நான்
பாசம் பொங்க அழைப்பது
உன் காதுகளில்
கேட்கவில்லையா அம்மா

நீ ஆசை ஆசையாய்
ஆண் பிள்ளை கேட்க
மாற்றிக் கருவானது
என் தவறா அம்மா

நான் செய்யாத குற்றத்திற்குத்
தண்டனை
எனக்கு மரணமா அம்மா?

அழுவதற்கென்றே கண்களும்
அடிமைகளாய்க்
குனிவதற்கென்றே தலையும்
ஆணைச் சுமப்பதற்கென்றே
கருவறையும்தான்
பெண்ணினத்தின்
விடுதலையா அம்மா

Comments

Girija Manaalan said…
கருவிலுள்ள சிசுவின்
கண்ணீரைக் காட்டும் கவிதை.
கற்பனையிபோது
கவிஞருக்கு எப்படியோ..
கலங்கிப்போனேன் நான்
கவிதைவரிகளைப் படித்து!

> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
அழுவதற்கென்றே கண்களும்
அடிமைகளாய்க்
குனிவதற்கென்றே தலையும்
ஆணைச் சுமப்பதற்கென்றே
கருவறையும்தான்
பெண்ணினத்தின்
விடுதலையா அம்மா]]

சவுக்கு ...
//உன் காதலின் பரிசாகத்தானே
நான் கருவானேன்//

அப்படியெல்லாம் இல்லை தல

திருமணத்திற்கு முன் ஒரு பொழுது போக்கு: திருமணத்திற்குப் பின் ஒரு கடமை;

அதனாலேயே இப்படியெல்லாம் நடக்கின்றன
//நீ ஆசை ஆசையாய்
ஆண் பிள்ளை கேட்க
மாற்றிக் கருவானது
என் தவறா அம்மா//

கருக்கலைப்பின் எத்தனையோ காரணங்களில் இதுவும் ஒன்று;

ஆனால் இது முதன்மை காரணம் என்று எனக்குத் தோன்றவில்லை தல
//நான் செய்யாத குற்றத்திற்குத்
தண்டனை
எனக்கு மரணமா அம்மா?//

செய்த குற்றம்;

விருப்பம் இல்லாத தாய்தந்தையரை தேர்வு செய்தது
நல்ல படைப்பு தல

ஓட்டுக்கள் போட்டு விட்டேன்
அன்பி சுரேஷ்,

சட்டென வந்து கொட்டும் மழையாக வந்த உங்கள் கருத்துக்கள் என்னை நனைத்தன நண்பரே, நன்றி
சாந்தி said…
அய்யோ வ‌லிக்குது ஆசான்.. அதுவும் பெண் குழ‌ந்தைக்காக‌ நான் த‌வ‌மிருந்த‌ தாய்..:(((
குமுறலான கவிதை! ​தொடருங்கள்!
சீனா said…
அன்பின் புகாரி

கருவிலேயே கருகும் பெண் குழந்தை கேட்கும் கேள்விகளுக்குப் பதில் எந்தத் தாயால் தர முடியும் ?

நல்ல கற்பனை - நல்ல கவிதை

மருத்துவக் கொலை - காதலின் பரிசு - மாறிய கரு - மரண தண்டனை

ம்ம்ம்ம்ம்ம்

நட்புடன் ..... சீனா
பூங்குழலி said…
அழுவதற்கென்றே கண்களும்
அடிமைகளாய்க்
குனிவதற்கென்றே தலையும்
ஆணைச் சுமப்பதற்கென்றே
கருவறையும்தான்
பெண்ணினத்தின்
விடுதலையா அம்மா

அருமையான வரிகள் புகாரி .....
விஷ்ணு said…
கவிதை நல்ல கருத்துடன் ..அருமை அன்பின் புகாரி ...

இறுதி கேள்வி இதயத்தை தொட்டது ....

அன்புடன்
விஷ்ணு ..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே