7. ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்


ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் தனிமை இன்பம் கனியக்காய்


நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது

வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்

கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.

ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.

அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?

தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்

வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல்

வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம்.

ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாகவே கொண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம்

காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே

கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும்

பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன் தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!

20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்

அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.

Comments

சாந்தி said…
நல்ல விளக்கம்.. நான் வாழக் காய் என்பதை வாழைக்காய் என குழம்பினேன்.:)
செல்வன் said…
கவிஞரின் பாட்டில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.அதுக்கு புகாரி அளிக்கும் விளக்கவுரையிலும் தமிழ் புகுந்து விளையாடுகிறது.சிறப்பான பதிவு.


.பலே பாண்டியா எனும் இந்த திரைப்படம் சிவாஜி நடித்த அருமையான காமடி படம்.தேவிகா ஜோடி.படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையானவை.சிறுவயதில் விடியோ காசட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்து பார்த்தபடம்.

வாழ நினைத்தால் வாழலாம்,வழியா இல்லை பூமியில் எனும் பாடலும் நெஞ்சை தொடும்.

--
செல்வன்

www.holyox.tk
துரை said…
அன்பின் ஆசானுக்கு ,
மிகமுக்கியமான் இழை / இன்றுதான் பார்த்தேன்
மிகவும் அருமை . தொடர்ந்து ஒரு ஆர்வக் கோளாறு / தவறு இருக்கும் / மன்னிக்கவும்


வெண்ணிலாவுக்கு ஒரு வேண்டுகோள் / எச்சரிக்கை :

வெண்னிலவே ,வெண்ணிலவே..

எத்திக்காய் நோக்கினாலும் நீ
இத்திக்காய் மட்டும் இப்போது நோக்காய்

ஆழ்நிலை ஆராய்ச்சியில் ஆசானுக்கும்...
சூழ்நிலை மேய்ச்சலில் நாங்களுக்கும்.......

எஞ்சிய முடிவும் எட்டும்வரை நீ எமக்கு
பிஞ்சிலே பழுத்த எட்டிக்காய்

உன்நிலை காக்கவேண்டுமெனில் நீ
தன்நிலை மறந்தும் இத்திக்காய் நோக்காய்

சேதியது வந்துசேரும் நேரம்வரை நீ
எங்கே காய்கிறாயோ அங்கேகாய்

ஆவலாய் மீறி வந்தலும் இங்கே நீ
ஆவாய் வெறும் காக்காய் !
நெஞ்சிலெ நுழைந்த சுக்காய் !!
பிஞ்சிலே பழுத்த கொடிக்காய் !!!
ஆயிஷா said…
இந்தப் பாட்டில் இத்தனை அர்த்தங்களா? இலக்கியத்தில் ஆர்வம் அதிகமாகின்றது. நல்ல பதிவு ஆசான்.
அன்புடன் ஆயிஷா
பூங்குழலி said…
ரொம்பவே ரசித்து அதை நாங்கள் ரசிக்கவும் தேன் சொட்டச் சொட்டத் தந்திருக்கிறீர்கள் .என் அப்பா சின்ன வயதில் இந்த பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த போது இதிலுள்ள காய்களை வரிசையாக சொல்லித் தந்தது நினைவிருக்கிறது .

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே