9. உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோஉள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ

இந்த வரிகள்தான் கண்ணதாசனை இந்த சினிமாப்பாட்டு எழுத வைத்த கவர்ச்சி வரிகள். கண்ணதாசன் நொறுக்குத் தீனி தின்ற காகிகத்தில் யாரோ எழுதிய சில வரிகளைப் பார்க்கிறார். அதிலிருந்த காய்கள் இவர் மனதைக் கவிதையாய்க் கனியவைக்கின்றன.

கவிஞனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவன் எழுதும் கவிதைகள் சில வேறெவரின் கவிதையையோ வாசித்து பிரமித்ததின் பலனாய் உருவாகும். அப்படியான பாதிப்பில் கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது என்று ஒரு கவிஞனாய் நான் சத்தியம் செய்வேன்.

கவிஞன் என்பவனே நேற்றைய கவிஞனின் தொளேறி நிற்கும் புதிய உயரமானவன்தான். நேற்றைய கவிஞன் இல்லாவிட்டால் இன்றைய கவிஞனின் உயரம் குள்ளமாகவே இருக்கும்.

வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா
உள்ளமிளகாயா ஒருபேச் சுரைக்காயா

இதுதான் கண்ணதாசனை உலுக்கிய வரிகள். நொறுக்குத்தீனி தின்றவர் அப்படியே அதன் சுவையில் சறுக்கி விழுந்தார். ஏன் இதை வளர்த்தெடுத்து காய்களின் ஊர்வலம் ஆக்கக்கூடாது என்று தன் கற்பனை சிட்டைப் பறக்கவிட்டார். ஒருமுறை வைரமுத்து நான்கு வரிகளாய் இக்கவிதையைச் சொன்ன ஞாபகம். இந்தக் கவிதை முழுவதும் கிடைத்தால் நான் பாக்கியசாலியாவேன். அறிந்தோர் எனக்கு அறிவிக்க அன்புடன் பணிகிறேன்.

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்கிறான் தலைவன் தலைவியைப் பார்த்து. அட என்னங்க தன் காதலியைப் பார்த்து இப்படியா மிளகாய் சுரைக்காய் என்று திட்டுவது? பிறகு காதல் எங்கே மலரும் சண்டை முள்தான் மண்டும் அல்லவா? மிளகாய் என்று அவள் குணத்தையும் சுரைக்காய் என்று அவள் உருவத்தையும் கேலிசெய்வதாகவல்லவா இருக்கிறது இந்த வரி என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். காதலி அந்தக்காலத்தவள் தமிழ் அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். இந்தச் சிலேடையெல்லாம் அவளுக்கு பிசுகோத்து.

இந்தக்காலப் பெண்போல் ஆங்கில மீடியத்தில் படித்தவளா அவள்? மிகுந்த உணர்ச்சியில் பொங்கித் ததும்பி தன் காதலைச் சொல்லும்போதுகூட ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் சொல்லும் இன்றைய தூய தமிழ்ப் பெண்ணா அவள்? வள்ளுவன் கம்பன் இளங்கோ போன்றோருக்கும் முந்தைய கவிஞர்களும் நக்கீரன் ஒட்டக்கூத்தன் போன்றோருக்கும் முந்தைய விமரிசகர்களும் உருவாக்கிய பழந்தமிழ் மாதாயிற்றே அவள்?

உள்ளமெலாம் மிளகாயோ என்பதை உள்ளம் எல்லாம் இளகாயோ என்று சரியாகவே அவள் புரிந்துகொள்வாள். அதே போல ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்பதை ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்றும் புரிந்துகொள்வாள். தலைவன் அவள் புரிந்துகொள்வாள் என்ற தைரியத்தில்தான் உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்று பயமின்றி சொல்கிறான். ஒருக்கால் புரியாமல் அவள் நின்றால் அதன் வழியே ஊடல் வரும் அதன்பின் காதல் வரும் அது சொர்க்கம் தரும் என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்.

அதைத்தொடர்ந்து தலைவன் சொல்கிறான் வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ? இதுவரை வானத்து வெண்ணிலவையே காய் காய் என்று கதறிக்கொண்டிருந்துவிட்டு. நீதான் என் வெண்ணிலா என்று தலைவியின் தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் தலைவன். வெள்ளரிக்காய் பிளந்து பார்த்திருக்கிறீர்களா? வேறு எந்தக்காயைப் பிளந்தாலும் அத்தனை அழகான சிரிப்பை நீங்கள் தரிசிக்கவே முடியாது. வெள்ளரிக்காய் பிளந்ததைப்போல் வெண்ணிலவாகிய நீ சிரிக்கமாட்டாயா என்று காதலன் தலைவியிடம் ஒப்புதல் கேட்கிறான். இபோது வெண்ணிலா தன் அருகிருக்கும் தலைவியாகிவிடுகிறாள். ஆண்கள் வசதிக்கேற்ப வர்ணனைகளை மாற்றிக்கொள்வார்க்ள்தானே?

பொம்பள சிரிச்சாப்போச்சு என்பார்களே என்ன பொருள், அவள் சம்மதம் தந்துவிட்டாள் என்று பொருள். பிறகென்ன இவர் கைவரிசையைக் காட்டிவிடுவாரல்லவா? அதுதான் நோக்கம்.

26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்

இவ்விரு வரிகளில் கண்ணதாசன் என்ற வினோத கவிதை மரம் நான்கு காய்களை உலுக்கிக்கொடுத்துவிட்டது. அத்தோடு நிற்கவில்லை இறுதியாய் மேலும் இரு காய்களைத்தர நாளை வருகிறது என் இடுகையில் வழியே!

Comments

அப்பண்ணா மலேசியா said…
ஆஹா !
எங்க ஆண்டு விருந்தில்
இந்த பாடலை போட்டு
மொத்தம் எத்தனை காய்கள்
உண்டு என்று கேட்கபட்டது .
அப்போது
1 2 3 கணக்கு பண்ண
பாடலும் கணக்கா கானா போய்விட்டது
சாதிக் அலி said…
இத்தனைக் காய்களை கவியரசு எழுதியதில் ஒரு இன்பம்
அதை பாடியதைக் கேட்க அந்த இசையில் ஒரு இன்பம்
அதைக் காட்சியாய் பார்த்ததில் கண்ணுக்கு ஒரு இன்பம்
அதை புஹாரி சார் விளக்கியதில் நம் அறிவுக்கு இன்பம்


அது சரி கிடக்கட்டும்.....


இத்தனைக் காய்களையும் போட்டு சாம்பார் வைத்தால்....
அது இன்பமோ இன்பம்....
சாந்தி said…
இந்தக்காலப் பெண்போல் ஆங்கில மீடியத்தில் படித்தவளா அவள்? மிகுந்த உணர்ச்சியில் பொங்கித் ததும்பி தன் காதலைச் சொல்லும்போதுகூட ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் சொல்லும் இன்றைய தூய தமிழ்ப் பெண்ணா அவள்?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..வள்ளுவன் கம்பன் இளங்கோ போன்றோருக்கும் முந்தைய கவிஞர்களும் நக்கீரன் ஒட்டக்கூத்தன் போன்றோருக்கும் முந்தைய விமரிசகர்களும் உருவாக்கிய பழந்தமிழ் மாதாயிற்றே அவள்?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்உள்ளமெலாம் மிளகாயோ என்பதை உள்ளம் எல்லாம் இளகாயோ என்று சரியாகவே அவள் புரிந்துகொள்வாள். அதே போல ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்பதை ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்றும் புரிந்துகொள்வாள். தலைவன் அவள் புரிந்துகொள்வாள் என்ற தைரியத்தில்தான் உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்று பயமின்றி சொல்கிறான். ஒருக்கால் புரியாமல் அவள் நின்றால் அதன் வழியே ஊடல் வரும் அதன்பின் காதல் வரும் அது சொர்க்கம் தரும் என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்.

அதைத்தொடர்ந்து தலைவன் சொல்கிறான் வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ? இதுவரை வானத்து வெண்ணிலவையே காய் காய் என்று கதறிக்கொண்டிருந்துவிட்டு. நீதான் என் வெண்ணிலா என்று தலைவியின் தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் தலைவன். வெள்ளரிக்காய் பிளந்து பார்த்திருக்கிறீர்களா? வேறு எந்தக்காயைப் பிளந்தாலும் அத்தனை அழகான சிரிப்பை நீங்கள் தரிசிக்கவே முடியாது. வெள்ளரிக்காய் பிளந்ததைப்போல் வெண்ணிலவாகிய நீ சிரிக்கமாட்டாயா என்று காதலன் தலைவியிடம் ஒப்புதல் கேட்கிறான். இபோது வெண்ணிலா தன் அருகிருக்கும் தலைவியாகிவிடுகிறாள். ஆண்கள் வசதிக்கேற்ப வர்ணனைகளை மாற்றிக்கொள்வார்க்ள்தானே?

பொம்பள சிரிச்சாப்போச்சு என்பார்களே என்ன பொருள், அவள் சம்மதம் தந்துவிட்டாள் என்று பொருள். பிறகென்ன இவர் கைவரிசையைக் காட்டிவிடுவாரல்லவா? அதுதான் நோக்கம்.

26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
நல்ல ரசிக்கும்படியான விளக்கம்.
விழியன் said…
ரசிக்கும்படியான கட்டுரை
புன்னகையரசன் said…
பலவித சுவைகளில் விளக்கம்... நன்றி ஆசான்...

ஒரு பாடலுக்கு இவ்வளவு விளக்கம்... மிகச் சிறப்பு..
சந்தர் said…
ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகட்கு முன்னர் புதுவை வானோலியில், கவிஞரே இப்பாடலுக்கு விளக்கம் அளித்தது நினைவுக்கு வருகிறது. மீண்டும் நினைவை புதுப்பித்தமைக்கு நன்றி புகாரி. காலத்தாலழியாப்பாடல்.


இது பற்றி எழுதும் போது கவிஞரின் 'ஆட்டனத்தி ஆதிமந்தி' குறுங்காவியத்தின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. பகிர்ந்து கொள்ள ஆசை...


நாற்சாதி பெண்வகையில் இவளே அந்த
... நற்சாதி பதுமினியாள் மெல்லத் தூக்கும்
காற்சாதி மலர்ச்சாதி கண்ணின் சாதி
.. கருங்குவளைப் பூச்சாதி கன்னற் சாதி
பாற்சாதி கைகுவளைப் படைப்பின் சாதி
... ( நினைவில்லை)
மேற்சாதி கீழ்சாதி எதிலும் சேரா
.. வேற்சாதி இவள்சாதி என்றான் சோழன்


அவனுக்கு நிகர் அவனே. என்னை வியக்க வைத்த கவிஞன் அவன்.
இழையை இழுத்ததற்கு மன்னிக்க.
வாழ்க வளமுடன் அப்பண்ணா said…
வணக்கமுங்க
சின்ன குழந்தைகளுக்கு நான் ஆசான்
பெரிசுங்களுக்கு நீங்க ஆசான்
நீங்க
நல்லவரா
கெட்டவரா
என்று சக்திவேல் கேக்குறார்.
நாயகன் படம் இப்பதான் முடிந்தது


வாழ்க வளமுடன்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ