கீழூரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா


பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!


பிறகென்ன? காதல் தோல்வி என்ற ஒன்று போதாதா கனவுகளையே வாழ்க்கையாய்க் கொண்ட, எந்தக் கபடமும் அறியாத இளைஞனுக்கு. நொறுங்கிச் சிதறிவிடமாட்டானா

அவளையே பிரதிபளித்த அவனது கண்ணாடி இதயம் உடைந்து தூள் தூளாக.

வாழ்வே படு ஆழமான துக்கங்கள் மட்டுமே நிறைந்த பள்ளமாகிவிடுகிறது அவனுக்கு. அந்த அதலபாதாள பள்ளத்தில் இவனைத் தள்ளிவிட்டுவிட்டு கண்ணீர் கடலுக்குள் இவனை மூழ்கடித்துவிட்டுவிட்டு அவள் மட்டும் எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாமல் முன்பை விட மகிழ்ச்சியாய் உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண்டு வாழ்வைச் சுவைக்கிறாள் என்று புலம்புகின்றான்.

கொடும் துயரம் என்ற பள்ளத்தூரில் இவனைத் பரிதவிக்கவிட்டுவிட்டு உயர் வாழ்வு என்ற மேட்டூரின் கீழே கூட இல்லை மேலேறி (மேலே ஏறி) நின்று கொள்கிறாள் அவள்.

காதல் தோல்வி என்பது பெண்ணுக்கு மட்டும் கிடையாதோ என்று அவன் கலங்குகிறான் துடிக்கிறான் துவள்கிறான். காதல் என்பது ஆணின் ஆயுளை அழிக்கும்

எமனாகத்தான் இருக்கிறது என்று் உறுதியாக நம்புகின்றான்.

இவன் வாழ்வை அழித்துவிட்டு அவள் மட்டும் எந்த மனத்துயரும் இல்லாமல் புதிய வாழ்வைத் தேடிக்கொண்டு மேட்டீரின் மேலேறி நின்று கொண்டால் இவன் என்னதான்

செய்வான்? அவள் இவனை மறந்ததுபோலவே இவன் அவளை மறந்து விலகி புதிய வாழ்வைத் தேடுவதுதானே சரி. பாடலின் நாயகன் என்ன செய்யப் போகிறான்?

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!


அவள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் என் காதல் புனிதமானது. இந்த உலக வாழ்க்கை என்பது துக்கங்களே நிறம்பிய கீழ்மையானதுதான். அதில் உயர்வானதே

காதல் என்ற புனிதம் ஒன்றுமட்டும்தான்.

இந்தக் கீழூரில் வாழ்வதற்கு கிளியைப் போல மொழி பேசும் என் காதலி இல்லை. அவள் இல்லாமல் எனக்கு எதுவுமே இல்லை. எனவே நான் என் மரணத்திற்காகக்

காத்திருக்கிறேன். மரணம் என்ற அந்த மேலூருக்குப் போவதற்கு இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்றுதான் நான் இப்படி ஊர் ஊராய்

அலைந்துகொண்டிருக்கிறேன். அங்கே போய்ச் சேரத்தான் நடந்துகொண்டே இருக்கிறேன் என்று தன் கதையை முடிக்கிறான் காதலிலே தோல்வியுற்ற அந்த வாலியன்.

இந்தச் சூழலை எத்தனை அற்புதமாய் தன் சிலேடைப் பாடல் மூலம் பாடுகிறார் கண்ணதாசன் பார்த்தீர்களா? ஆச்சரியமாய் இல்லை? எங்கே எல்லோரும் கண்ணதாசனுக்கு ஒரு பாராட்டு மடல் எழுதுங்கள் பார்க்கலாம்.

Comments

சீனா said…
ஒருதலைக் காதல் என்பது இதுதானோ - எப்பொழுதும் அக்கரைப் பச்சைதான் நமக்குப் பிடிக்குமோ

நமக்குப் பிடித்தவரைக் காதலிப்பதை விட நம்மை நேசிப்பவரை காதலிப்பது புத்திசாலித் தனம் - அவரும் அப்படி எண்ணாதிருந்தால்

காதல்-தெளிவாகப் பொருள் கூற இயலாத ஒன்று

சிவா - வா வா - ஓடி வா வா - கருத்துக் கூற வா வா
கண்ணதாசனுக்கு பாராட்டு மடலா

போறுபவர்கள் போற்றலும் தூற்றுபவர்கள் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்ற கண்ணதாசன் எதனைப் பற்றியும் கவலைப்பட்டதாக சரித்திரமே இல்லை - தடுமாறும் போதையிலும் கவி பாடும் மேதையவன் எனப் பாராட்டப் பட்டவன் - ஒரு கோப்பையிலே குடி இருந்தவன் - இரணடு மனம் விரும்பியவன் - பல தாரங்களுடன் வாழ்ந்தவன் - அவன் போற்றாத மனிதன் கிடையாது - அவன் திட்டாத மனிதன் கிடையாது - அவன் அழிவதில்லை - நிரந்தரமானவன்.

ஒரு துளி விந்து உடலினுள் புகுந்து ........வாழ்வின் ஆதாரத்தினை ஆட்டுவிக்கும் ஆண்டவன்

அனுபவித்தே அறிவது தான் வாழ்க்கை எனில் ஆண்டவனே நீ எதற்கெனக் கேட்டேன்
சற்றே அருகினில் வந்து மெல்ல நகைத்து அன்பவமென்பதே நான் தான் என்றான்.

அவனைத் தூங்கவிடுங்கள் - அறப்பாடலாக மாறிய கவிதை

பாடாத பாடல் உண்டோ - தொடாத செய்தி உண்டோ - கூறாத நிகழ்வு உண்டோ

போற்றிப் பின் தூற்றுவான் - தூற்றிப் பின் போற்றுவான் - அவன் தான் கண்ண தாசன்

வாழ்வின் இன்ப துன்பங்களை முழுவதுமாக அனுபவித்தவன்

எழுதிக் கொண்டே போகலாம்
Athammohamed said…
உங்கள் எழுத்து என்னை கட்டி போட்டு விட்டது, வேற என்னத்த சொல்ல.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்