அல்லவை அழகாய் ஒதுங்கிக்கொள்ளும்


குப்பையில் கிடந்தாலும்
மாணிக்கம் மாணிக்கம்தான்
சேற்றில் முளைத்தாலும்
செந்தாமரை செந்தாமரைதான்

பூஜையறையும் கழிப்பறையும்
ஒரே வீட்டில்தான்
இதயமும் மலக்குடலும்
ஒரே யாக்கையில்தான்

அமுதும் நஞ்சும்
பாற்கடலில்தான்
புழுவும் வண்ணச் சிறகுகளும்
பட்டாம் பூச்சிதான்

கண்களில் தெளிவிருந்தால்
காண்பவற்றுள் இனிமை தெரியும்

நல்லவை தேடினால்
அல்லவை அழகாய் ஒதுங்கிக்கொள்ளும்

Comments

nidurali said…
கவிதை என்பது வாக்கியங்கள் போலத்தான்
நல்ல கவிதை நல்ல வாக்கியமாகும்

நிச்சயமாக ஞானங்கள்(நன் நெறிகள்) கவிதைகளில் இருக்கிறது

--நபிமொழிகள்
----------------
இது நல்ல கவிதை, நல்ல வாக்கியமாகும்

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

மகளின் பிறந்தநாள் வாழ்த்து