ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே


2012 பெட்னா வெள்ளிவிழா கவியரங்கத்தில் பாடிய பாடல். வாழ்வாங்கு வாழ்வதற்காக அமெரிக்கா வந்த ஒரு தமிழன் வருத்தத்தோடு பாடும் தெருப்பாடல். டை கட்டி கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கத் தமிழன் மனம் நொந்தால் சென்னை மெரினாவில் நிற்பதாய் நினைத்து இப்படிப் பாடுவானோ என்ற கற்பனையில் உருவான பாடல்.


ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே - இப்போ
    அத்தனையும் ஒடஞ்சிபோச்சே அமெரிக்காவே
பாசமான ஊரை விட்டேன் அமெரிக்காவே - இப்போ
    படுறபாடு கொஞ்சமில்லே அமெரிக்காவே

காதலிச்சேன் வெள்ளைக்காரி அமெரிக்காவே - அவ
    கழுத்தறுத்துப் போட்டுட்டாளே அமெரிக்காவே
வளைஞ்சி நெளிஞ்சி ஒருத்தன் வந்தான் அமெரிக்காவே - வந்து
    கட்டிக்கலாம் வாரியான்னு கேட்டுட்டானே

வீடு வாங்கி செட்டில் ஆனேன் அமெரிக்காவே - அதை
    வங்கிக்காரன் ஆட்டைபோட்டான் அமெரிக்காவே
காலமெல்லாம் உழைச்ச காசு அமெரிக்காவே - இப்போ
    கடங்காரன் ஆயிப்புட்டேன் அமெரிக்காவே

காலையில வேலையில சேத்துக்கறான் - அந்த
    ராத்திரிக்கே வேலைவிட்டு தூக்கிடறான்
வெள்ளக்காரன் மேனேஜரா இருந்துக்கரான் - நான்
    மேல போனா காலவாரி விட்டுடுறான்

சேந்து படிச்ச பசங்க எல்லாம் அமெரிக்காவே - அங்க
    ஜில்லா கலெக்டர் ஆயிட்டாங்க அமெரிக்காவே
சொந்த ஊரப் போல சொகம் ஏதும் இல்லே - இதை
    சொல்லப் போனாக் கேட்க ஒரு நாதி இல்லே

Comments

நல்லா இருக்குங்க... நன்றி...
அன்பு கவி புகாரி அவர்களின் கவிதை
அற்புதம் ..கருத்து அபாரம் ..எங்க ஊருக்கு வந்து
சங்கதிய அறிஞ்சு அற்புதமா கவி மூலம் கதைத்து விட்டீர்களே
Asan Buhari said…
தளம் வந்த, தேர்வு செய்த, கருத்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே