பெண்ணுக்குப்
படிப்பெதற்கு என்றார்கள்

தாய் போராடினாள்

சரின்னுட்டு
மார்க்கக் கல்விமட்டும்
போதுமென்றார்கள்

சகோதரன் போராடினான்

சரின்னுட்டு
அஞ்ஞ்சாப்பு வரை
பரவாயில்லை என்றார்கள்

தோழி போராடினாள்

அப்புறம்
இஸ்கூலோட
நின்னுக்கணும்னாங்க

தந்தை போராடினார்

அதெல்லாம் ஒருவழியா
ஓஞ்சி முடிஞ்சு போச்சு
எம்.ஏ எம்.எஸ்.சி பி.ஹெச்டி எல்லாம்
ஆகிப்போச்சு

இப்போ பொதுவெளிகளில்
பொழுதுபோக்கு அம்சங்களில்
பெண்மட்டும் எழுதக்கூடாதுன்னு
ஆரம்பிக்கிறாங்க

இவங்களும்
மாறுவாங்க மாறுவாங்க

மாறலேன்னா
இன்னிக்கு வளரும்
இளைய பெண்கள்
விட்டுடுவாங்களா என்ன 

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ