20161206 முகநூல்


எத்தனைதான் போராடினாலும் இத்தனை உயரம் வரமுடியுமா?
அவமானங்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுத்த நெஞ்சுரமும் வைராக்கியமும் உச்சம்!
பாறையிலும் முளைக்கலாம் பயிர்
நெருப்பில் முளைக்க முடியுமா?
ஜெ ஒரு வரலாறு!
அஞ்சலிகள்!

*

விவசாகிகளையும் கொன்னாச்சு 
பொங்கலையும் பொசுக்கியாச்சு. 

இனி என்ன 
கார்ப்பரேட் கொண்டாட்ட தினங்களை அறிவித்து 
அரசு விடுமுறை தரப்போவதுதான் மீதம்!

*


காதலி என்பவள் ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி. ஒருநாள் ஒன்றும் இல்லாமல் போய்விடுவாள்
ஆசைப்படும் பெண் என்பவள் 2000 ரூபாய் நோட்டு மாதிரி. பயன்படுத்தவே முடியாது
மனைவி என்பவள் 100 ரூபாய் நோட்டு மாதிரி. பாக்க அலட்சியமா தெரியும் ஆனால் எப்பவும் எல்லாத்துக்கும் அவள்தான் உத்திரவாதம்

*

மதம் என்பது வாழ்வைச் சரிசெய்ய வந்த சட்டங்கள் போன்றவை. சட்டங்கள் ஏழைகளுக்குப் பாதுகாப்பைத் தரவேண்டும். பெரும்பாலும் சட்டங்களை யார் வளைப்பார்கள்? அரசியல் வாதிகளும் அதிகாரவர்க்கமும்தானே? அதைக் கொண்டு யாரை அடக்குவார்கள்? ஏழைகளைத்தானே?
குற்றம் சட்டத்தின் மீதா அல்லது அரசியல் அதிகார துர்பிரயோகத்தின் மீதா என்று சிந்தித்துக்கொள்ளுங்கள்.

*
எந்த மதமும் அந்த மதத்தினரால் சரியாகப் புரிந்துகொள்ளப் படாததாய் இருக்கிறது.
எந்த மதமும் அடுத்த மதத்தினரால் புரிந்துகொள்ளவே முயற்சி செய்யக்கூடாது என்ற எண்ணங்களைக் கொண்டிருக்கிறது.
எந்த மதமும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால் தவறான பொருள் கூறப்படுவதாய் இருக்கிறது.
இவை அத்தனைக்குமே காரணம், மனிதர்களின் அறியாமைகளும் விகாரங்களும்தான்.

*
இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் இந்தியா என்றோ அழிந்துபோயிருக்கும்
கிருத்தவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் யூதம் என்றோ தீய்ந்துபோயிருக்கும்
முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்
தீவிரவாதம் லாபநோக்குடைய வியாபாரம்
வல்லரசுகள் நல்ல வியாபாரிகள்
தீவிரவாதத்தை உருவாக்கிச் சந்தைக்குக் கொண்டுவராவிட்டால் வல்லரசுகளின் பிழைப்பு நாறிப்போகும்
தீவிரவாதத்தை வல்லரசுகள் விரும்புவதைப் போல உலக மக்கள் யாவரும் விரும்பிவிட்டால் ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்
தீவிரவாதம் வெறுக்கும்
மக்களைப் போற்றுவோம்
தீவிரவாதம் உருவாக்கும்
அரசுகளைத் தூற்றுவோம்

*

காந்தி சிரிக்கின்றார்
மக்கள் அழுகிறார்கள்
கையில் 500 1000

*
திருமணம் ஓர் அழகான பந்தம். 
அது தீப்பந்தமாய் ஆகிவிடாதவரை 
அந்த அழகான பந்தத்திற்கு 
நிகரான பந்தமே இல்லை!

*

Kasinathan Annamalai நீங்கள் அவ்வளவுதான், அவ்வளவு தான்,என்று
சொல்வது,மிக சாதாரணமான வார்த்தையாக
படுகிறது,திருமண பந்தம் என்பது,சாதரணமல்ல!
கூடிப்பேசிமுடிவெடுத்து,வாழ வைக்கவேண்டும்,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உண்மை. கூடிப்பேசி வாழவைக்க வேண்டும். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சமரசம் செய்து சேர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும். சில கால அவகாசம் தந்து முடிவு மாறுகிறதா என்று பார்க்க வேண்டும்.
ஆனால் சேர்ந்து வாழ இயலாதவர்களை பொருந்தாதவர்களை சமரசம் செய்கிறேன் என்ற பெயரில் கொடுமைப் படுத்தக் கூடாது.
முயற்சிகளை நீங்கள் எடுக்கவேண்டும். முடிவை அவர்கள் கையில் விட்டுவிடவேண்டும். வாழப் போகிறவர்கள் அவர்கள்தானே?

*

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ