தீராமல் தணியாமல்
தடையற்றுக்
கொட்டிக்கொண்டிருக்கிறாள்
தண்ணீர்க் கவி வரிகளை
உலகக் கவிதாயினி
நயாகரா

அலுக்காமல் சலிக்காமல்
அறைநொடியும் இமைக்காமல்
ரசித்துச் சிலிர்க்கிறீர்கள்
ரசிகமணி முத்துக்கள்

நான்தான்
நயாகரா ஆகமாட்டேனா

அல்லது 
என் தமிழ்க் கவிதைகள்தாம்
நெஞ்ச நெடு ஓட்டங்களில்
தீர்ந்துபோக வேண்டுமா

இதோ
என் நீள் கவிதைகள்

சீர்மிகு செவிகள்கூடி
சுக நடனம் ஆட ஆட

அரங்க மேடைகளில்
நின்று பொழிந்த பேரருவிகள்

அன்புடன் புகாரி

No comments: