முடிந்ததென்று நினைப்பதெல்லாம்

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   முடிந்துபோவதில்லை
உடைந்ததென்று நினைப்பதெல்லாம்
   உடைந்துபோவதில்லை
வடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   வடிந்துபோவதில்லை
மடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   மடிந்துபோவதில்லை
நடித்ததென்று நினைத்ததெல்லாம்
   நடித்ததின்றிப் போகலாம்
நடிக்கவில்லை என்றதெல்லாம்
   நடித்ததுபோல் ஆகலாம்
எடுத்ததென்று நினைத்ததெல்லாம்
   கொடுத்ததென்று ஆகலாம்
கொடுத்ததென்று நினைத்ததெல்லா
   எடுத்ததுபோல் ஆகலாம்
 
விடிந்ததென்று நினைத்துவிட்டால்
   விடிந்துவிடும் வானம்
கிடைத்ததென்று நினைத்துவிட்டால்
   கிடைத்துவிடும் ஞானம்
படர்ந்ததென்று நினைத்துவிட்டால்
   படர்ந்துவிடும் பாசம்
தொடர்ந்துதென்று நினைத்துவிட்டால்
   தொடர்ந்துவிடும் சொந்தம்

5 comments:

KALAM SHAICK ABDUL KADER said...

மரபு நாரில்
புதுமலர்க் கோத்து
அரிதாய் யாத்தாய்;
அளித்தேன் என் வாழ்த்தாய்

வாழ்க உன்றன் தமிழ்ப்பணி!

Unknown said...

எப்போது இவன் சந்தக் கவிதை எழுதுவான் என்று காத்திருந்து பாராட்டும் என் இனிய நண்பரே கலாம். நீங்கள் சந்தங்களின்மீது கொண்டுள்ள பற்று கண்டு நான் உங்களைப் பாராட்டுகின்றேன்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

உங்களுடையா ஆக்கம்
என்னை போண்றோர்க்கு ஏக்கம்
சிலருக்கோ தாக்கம்
பளருக்கோ ஊக்கம்
நல்லதோர் நோக்கம்
அழகான துவக்கம்

mohamedali jinnah said...

பாயிரம் பல மனதில் நின்றது
உன்னையறிந்து உயர்வாய் வந்தது
சந்தக் கவிதை சந்தனம் பூசியது
சாந்தம் தந்து மனதும் நிறைந்தது

யாத்ததுதான் யாத்தாய் யென் பெயரை ஏன் விட்டாய்
கனலாய் மனம் சுட நீர் ஊற்றி அனைத்திடு
கவிதை மழையில் நனைத்திடு!!

Unknown said...

நன்றி சபீர் மற்றும் நீடூரலியண்ணா