தமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா
கடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.
அவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன். நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.
5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.
அவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.
அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றே…