Posts

இணக்கம்  இணக்கம் அதற்கு  என்  வணக்கம்
மனதோடு மனதாக  வாழாத வாழ்வெல்லாம்  மரணத்தின் சுவடுகள்
அறம் என்பது 
அன்பு அல்ல கருணை அல்ல இணக்கம் அல்ல இன்பம் அல்ல
ஆனால்
அறம் இருந்தால் 
மட்டுமே
இவை யாவும்  எல்லோருக்கும் கிட்டும்

அந்த  மகத்துவமே  அறம்
இணக்கம் கேட்டேன்
ஈட்டி எறிகிறார்கள்

அறம் சொன்னேன்
அடிக்க வருகிறார்கள்

அன்பு போற்றுகிறேன்
அசராமல் தூற்றுகிறார்கள்

உன்வழி உனக்கு என்றேன்
எங்கள் வழி
கொடுஞ்சொல் என்கிறார்கள்

என்வழி எனக்கு என்றேன்
உனக்கு வலி தருவோம்
என்கிறார்கள்

கவிஞர் புகாரி
இந்த உலகம்  வன்முறையற்றுப் போக  ஒரு சிறு கல்லையாவது  நாம் நகர்த்துவோமே
புலன்களைச் சாகடித்து
பக்தி என்ற பெயரில்
புதைவதை
இறைவன் விருப்பவில்லை
புலன்களின் தாகங்களை 
அற வழியில் மகிழ்விப்பதே 
அற வாழ்க்கை
அன்பு அறம் அறிவு  இந்தக் கலவை  கலையும்போதெல்லாம்  வாழ்க்கை  கலைந்துவிடும்
கவிதை எனக்குத்
தொழில் இல்லை
பொழுதுபோக்கு இல்லை என் இதயப்போக்கு
சாவே இல்லாதது
சாவு மட்டுமே

சாவில்  சாவிருந்தால்தான்
அது நல்லது

நீரில்
நீரில்லாவிட்டால்
என்னாகும்?

சாவில்லாச் சாவோ
ஆகப்பெரும்  கொடுமையானது

என்னில்
நானில்லாமல் போவேன்
அது நன்று

சாவில்
சாவில்லாமல் போயின்
அதுவே
சாவிலும் சாகாச் சாவு

’சா’வில் ‘சா’ விருக்கிறது
மொழி இலக்கணத்
தமிழெழுத்தில்

சாவுக்குத்தான் சாவே இல்லை
மனித வாழ்க்கைத்
தலையெழுத்தில்

கவிஞர் புகாரி

நீதானா அது நீதானா

Image
நீதானா அது நீதானா

இருளைப் பார்த்துப்
பயம்கொள்ளாதீர்

இருள்
வெளிப்படையானது
வெளிச்சம்தான்
மாயமானது
தந்திரமானது

ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சு ஆடும் ஒளி
எங்கே இருந்தது
எங்கிருந்து வெளிப்படுகிறது
என்பது
மாயவித்தையல்லவா

எங்கிருந்தோ சட்டெனத்தொற்றி
பற்றி எரியும் நெருப்பு
ஆகாயத்துள் ஓடி
ஒளியப் பார்க்கிறது

எங்கிருந்தோ திடுமென
மின்னித் தெறிக்கும் நெருப்பு
பூமிக்குள் பாய்ந்து
மறையப் பார்க்கிறது

தன்னை உரித்துக் காட்ட
ஒளிக்கு ஏன்
இத்தனை அச்சம்

கல்லும் கல்லும்
மோதிக் கொண்டால்
உடைந்துதானே
நொறுங்கவேண்டும்
அங்கே நெருப்பு எப்படிச்
சிசுவாகிறது

மரமும் மரமும்
முட்டிக்கொண்டால்
முறிந்துதானே
சிதையவேண்டும்
அங்கே
காட்டுத்தீ எப்படித்
தலைகாட்டுகிறது

உன்
சினத்திற்குள்ளும்
என் சினத்திற்குள்ளும்
பதுங்கிக் கிடப்பது
செந்தீதானோ

சிந்தனைச் செல்கள்
ஒன்றுடன் ஒன்று
உரச உரச
ஞானவொளி எப்படித்
தெறிக்கிறது

கருப்பு மூலமா
அன்றி
நெருப்புதான் மூலமா

வானமே யார் நீ
நீக்கமற நிறைந்திருக்கும்
இருளா
இருட் போர்வைக்குள்
ஒளிந்திருக்கும்
ஒளியா

சூட்சுமமாய்ப்
பேரிருட் கருவோட்டுக்குள்
பேருண்மைக் கனலாய்
பேரமைதிப் பிழம்பாய்
ஓளிந்து மறைந்திருக்கும்
பேரிற…
*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்ட…
>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<

இதில் நியாயம் இல்லையே?


நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்

விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.

வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை

என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.

நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.

ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.

மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.

நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.

தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமா…
Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்

>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<

அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.

பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்

எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.

நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.

பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.

மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு

>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழ…
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல. a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல. H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள். கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா? ஏற்பதல்லவா வளர்ச்சி? அன்புடன் புகாரி

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

https://photos.app.goo.gl/6CCPvh59zWbr1JcZ9

விளையாட்டாகத் தொடங்கினேன். மிகச் சிறப்பாகச் சென்றது.

நட்புகளுக்குள் ஒன்றுபட்டோம். கூட்டாஞ்சோறு சமைத்துக்கொண்டுவந்து என் வீட்டில் ஒன்றுகூடினோம்

ஒவ்வொரு உணவும் ருசியில் மிக உயர்வாக இருந்தது. சிறந்த உணவிற்கு பரிசுகள் வழங்கினோம்

குழந்தைகளை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லியும் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லியும் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடினார்கள் பெண்கள்

தேவாரத்திலிருந்து ஓர் ஆரமாய் சம்பந்தரின் கவிதையை இனிமையாய் தமிழ் உச்சரிப்பு மாறாமல் வாசித்தான் 8 வயது எழில். பரிசு பெற்றான்

பாரம்பரிய நடனமாடியது 8 வயது தெனிஷா, பரிசு பெற்றது

பெண்களெல்லாம் தங்களையும் தங்கள் கணவரையும் தங்கள் குடும்பத்தையும் அறிமுகம் செய்தார்கள் அனைவருக்கும்

முத்தாய்ப்பாக ஈழத் தமிழ் எழுத்தாளர் சிவநயனியின் பாரம்பரிய உணவான மச்சக்கூழ் விருந்து தந்தது ஒரு வித்தியாசமான சிறப்பு. தமிழ்நாட்டின் உணவுகளைச் ருசித்த நாவுகள் மச்சக்கூழை மிச்சமின்றி துழாவிச் சுவைத்தன.

ஆறு மணி நேரம் எப்படிக் கழிந்ததென்ற…
Image
அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச் சொற்களா? இந்த மயக்கம் பலருக்கும் இருக்கிறது! அஹர முதஸ எஸுத்தெல்லாம் ஆடி பஹவன் முடற்றே உஷஹு என்று எழுதினால்தானே கொதிக்க வேண்டும் தமிழன்? தமிழைத் தமிழாகவே எழுதுகிறவனிடம் தனித்தமிழ் என்று லூட்டி அடிக்க (இலூட்டி ;-)) வருவது அழகா? அயல்மொழிப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதினால் என்ன? இதற்காக செலவிடும் நேரத்தை என்ன செய்யலாம்? நான் தமிழ்ப்பற்றாளன் நான் ஒரு நல்ல யோசனை தரட்டுமா? 199 நாடுகளில் தமிழ்ப் பிஞ்சுகள் தமிழே பேசாமல் அழிகின்றன. அவர்களைக் காக்க ஏதேனும் செய்யுங்கள். எங்கள் தமிழ்மொழி என்று ஒரு தொண்டியக்கம் தொடங்கி இருக்கிறேன். அதில் வந்து உறுப்பினர் ஆகுங்கள். தனித்தமிழ் என்று தமிழை அழிக்கப்பாடுவது தேவையற்ற ஒன்று. தமிழே இல்லாமல் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது என்பதை அறியாத அவலம் கொடுமைங்க தமிழரே. அன்புடன் புகாரி
தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?
*
*
மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள 
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள் யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை? இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை
மரபுக்கவிதை மட்டும்
எழுதச் சொல்லிக்
கொன்று கொலையெடுத்தார்கள். விரட்டியடித்து முடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது அவர்களிடமும்
இதைத்தான் சொன்னேன்.
மரபுக்கவிதை வேண்டுமென்றால்
நீங்கள் எழுதுங்கள். குசுப்பும் (குஷ்பு)
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்)
தேவையென்றால்
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள் நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்! தமிழை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்பவர்கள் அப்படியே
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே
தமிழைக் கொன்றெடுப்பவர்கள்
அல்லர் தமிழ்
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு
அயலவன் அத்தனை பேரையும்
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால்
நான் பெரிதும் மகிழ்கிறேன். வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ் மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம்
இன்று நேற்று வந்ததல்ல.
பல நூறு ஆண்டுகளுக்கு…
ரப்பர் தொழிற்சாலை - அழிப்பான் தொழிற்சாலை என்று அமைந்தால் அமங்களம். இரப்பர் தொழிற்சாலை என்றால் பிச்சைக்காரர்கள் தொழிற்சாலை ஆகிவிடும்... - கவியரசு கண்ணதாசன் 😀😀🤣🤣😅😅 * ஒரு பிரபலமான புதுக்கவிதை இரிசி கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
இணைந்த இபாப்பி 😀😀🤣🤣😅😅 #படித்துப்பிடித்தது
199 நாடுகளில்
தமிழ்ப்பிஞ்சுகள்
தமிழே பேசாமல்
அழிகின்றன.
அவர்களைக் 
காக்க
என்ன செய்யலாம்? உங்கள் கருத்துக்களைப் பரிந்துரைத்தால் நலமாக இருக்கும் அன்புடன் புகாரி #எங்கள்தமிழ்மொழி