Posts

Showing posts from August, 2016

இந்திய முஸ்லிம்களில் சாதி

கேள்வி:

*எங்கள் ஊர் பக்கம் ராவுத்தர் குடும்பதிலிருந்து மற்ற இன முஸ்லிம்களுக்குப் பெண் கொடுப்பதோ எடுப்பதோ இல்லை. இதைத் தட்டி கேட்ட என்னை "நீ முஸ்லிமே இல்லை" எனக் கூறி சண்டை போட்டனர். யாரிடம் குறையுள்ளது. பல பிரிவுகள் பிரிவினைகள் இருப்பது வருத்தமில்லையா?*

முதலில் ஒரு இஸ்லாமியனைப் பார்த்து இன்னொரு இஸ்லாமியன் நீ முஸ்லிமே இல்லை என்று சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் அவருக்குக் கொடுக்கவில்லை

குடும்பப் பெயர் என்று ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அது ராவுத்தரோ மரைக்காயரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ உயர்வு நான் உயர்வு என்றாலோ இடையில் மண உறவுகள் இல்லை என்றாலோ அந்த நிமிடம் அவர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் இல்லை. அவர்களையே காபிர்கள் என்று அழைப்பார்கள். * மார்க்கம் என்றால் அது சாதிகளை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும் இறைவன் என்றால் அவன் மார்க்கங்களை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும் இனி மற்ற சிந்தனைகளை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்
* இந்த ஜமாத்தார்கள் என்று கூறிக்கொண்டு அடித்துக்கொண்டு ஆளாளுக்குப் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் எவருமே இஸ்லாமியர்கள் இல்லை! ஆனால் ஜமாத்தார்கள் என்ற…
நால்வகை ஹதீதுகள் ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்று முகம்மத் நபி கூறினார் என்பது திர்மிதீயில் உள்ள முதலாவது ஹதீத்.

1. நபிகள் நாயகத்திடமிருந்து நேரடியாக இதைக் கேட்டவர் இப்னு உமர் என்ற நபித்தோழர்.
2. இப்னு உமரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் முஸ்அப் பின் ஸஃது.
3. முஸ்அப் பின் ஸஃதுவிடமிருந்து கேட்டவர் ஸிமாக்.
4. ஸிமாக் என்பாரிடமிருந்து கேட்டவர்கள் இருவர். 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா
5.1. இஸ்ராயீலிடமிருந்து கேட்டவர் வகீவு
5.2. அபூ அவானாவிடமிருந்து கேட்டவர் குதைபா
6.1. வகீவுவிடமிருந்து கேட்டவர் ஹன்னாத்
6.2. குதைபாவிடமிருந்து கேட்டவர் திர்மிதீ
7. ஹன்னாத்திடமிருந்து கேட்டவர் திர்மிதீ

இந்த அறிவிப்பாள…

மனம் போன போக்கில்

வாழ்த்துக்கள் சிந்து!  உன்னை நினைத்துப் பெருமைப் படுவதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்! உன்னைக் கண்டு வளரப்போகும் பெண் வீராங்கனைகளுக்கு இப்போதே மலர் தூவுகின்றேன்! பூப்பந்தாடும் பூ நீ புயல் பந்தாடி வென்றதோ வெள்ளிக் கின்னம்! முதலடியே இத்தனை நெருக்கத்தில் என்றால் உன் அடுத்த அடி எப்படி இருக்கும்? உன்னைக் கண்டாவது இந்தியா மதவிரோதங்களைக் கைவிட்டு சாதியப் பாகுபாடுகளைக் கழுவித் துடைத்துவிட்டு ஊழலை எரித்துவிட்டு பெருமைகொள்ளும் தளங்களில் வளரட்டும் கண்மணி! வாழ்த்துகிறேன் உன்னை மீண்டும் மீண்டும்! இந்த வாழ்த்து உனக்கே உனக்கானதல்ல, உன்னைக் கண்டு உயரப்போகும் அத்தனை நல்வீரப் பெண்களுக்கும்!
(ஒலிம்பிக் வெள்ளிக்கோப்பை வாங்கிய பூப்பந்தாட்டப் புயல்)
* தங்கங்களாகத் தாங்களே இருப்பதால் வெள்ளியும் வெண்கலமும் போதும் என்று நினைத்தார்களோ அல்லது தங்கத்தை ஆண்களுக்கென்று விட்டுவைத்தோம் என்று அடக்கத்தோடும் நக்கலோடும் சொல்லப் போகிறார்களோ                                            * *நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்* ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற மு…

சும்மா

பொது அறத்தைப் 
பெரிதும் போற்றுபவர்கள் 
ஆண்கள் அல்ல
பெண்களே

*
அழுகை
ஒரு மிகப்பெரிய
ஆனந்தம் கொடுந்துயரில் 
இருந்துபாருங்கள்
அழுகையின்
அருமை புரியும்
*

* அம்மா ஜெயலலிதா மீது போட்ட பொய் வழக்கையும் அவர் முறியடித்து ஊழலே இல்லாத தலைவியாய் பவனி வருகிறார். உங்கள் தலைவரோ (கலைஞர்) ஒரு பைசாவும் ஊழல் செய்யாத கண்ணியமிக்கவர் தமிழ்நாடு இந்த இரு கரைபடியாத அற்புதர்களைக் கொண்டு வளமாக செழுமையாக இந்தியாவில் ஊழலே இல்லாத மாநிலமாக சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது அதன் உண்மையான குடிமகன் நீங்கள் ஒருவரே. ஐயா சாமி, ஆளை விடுங்கள். எனக்கு வேலை நிறைய இருக்கு. வெட்டிப்பேச்சுக்கும் உங்கள் அறமற்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேறு தளம் செல்லுங்கள். என் நேரம் பொன்னானது!
* குடித்துவிட்டுச்
செய்யத் தகுந்த காரியங்கள்
என்னென்ன? குடித்துவிட்டுச் செய்தால்
எந்த எந்தக் காரியங்களைச்
சிறப்பாகச் செய்யலாம்? குடிக்காமல் இருக்கும்போது
செய்யவே முடியாது
ஆனால் குடித்தால் சூப்பராகச் செய்யலாம்
என்னும் காரியங்கள் யாவை?
* தண்ணியடிச்சிட்டு போனபோக்கில் திசையறியாமல் எசகுபிசகா கருத்திடுபவர்கள் என் நட்பு வட்டத்திலிருந்து நீங்களாகவே விலகிக்கொள்ளுங்கள் என்று அன்ப…

பெண்

இயல்பில்
பெண் தனக்கு விருப்பமானவனுக்குத்தான்
பிள்ளை பெற்றுக்கொள்வாள்
மற்ற ஆண்களெல்லாம் வன்முறையைக்கொண்டே
பெண்களை அடையமுடியும் இயல்பில்
ஆண் தனக்குப் பிடித்தமான பல பெண்களுடன்
உல்லாசமாக இருப்பான்
தனக்குப் பிடித்தபெண் மறுத்தால்
வன்முறையில் அடையமுயல்வான் இந்த சிக்கல்களுக்கான தீர்வுதான்
திருமணம் திருமணம் என்பது
ஆண் பெண் உறவுகளுக்கான
பொது அறம் திருமணத்தையே சிக்கலாகப் பார்ப்பதுதான்
இன்றைய காலகட்டம் ஏனெனில்
பெண்ணின் உண்மையான இயல்பும்
ஆணின் உண்மையான இயல்பும்
அங்கே கட்டுப்படுத்தப்படுகின்றன எல்லைமீறிய சுதந்திரத்தையே நேசிக்கும்
இன்றைய அறிவு வளர்ந்த ஆசை மனங்கள்
எந்தக் கட்டுக்குள்ளும் கிடக்க
விரும்பவே இல்லை ஆயினும்
திருமணம் என்கிற
பொது அறம் இல்லாவிட்டால்
மீண்டும் உலகம்
காட்டுமிராண்டித்தனமாகவே
ஆகிப்போகும் வன்முறையையோ
பெண்ணுக்காகவே உருவாகும்
போர்களையோ
யாராலும்
தடுக்கவோ தவிர்க்கவோ
முடியாது இவை
எல்லாவற்றையும்விட
பிள்ளைகள்
தாயுமற்ற தந்தையுமற்ற
அனாதைகளாக
மனோவியாதியுடன் கூடிய
வன்முறையுடன் மட்டுமே
வளர்வார்கள்

ஞானி அறிஞன்

ஞானி என்றால் 
அறிஞன் என்று பொருள்
வேறு ஏதேதோ கற்பனைகளை எல்லாம் 
செய்து கொள்ள வேண்டாம்

*


>>>>பெண், குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<<<<< இப்படி பெண் மாறுவது தவறு. ஆணை அனாதை ஆக்கிவிட்டால், அவன் மனம் அலையத் தொடங்கும். ஏக்கம் வளர்ந்து அவனை அவன் நல் குணங்களைத் திசை திருப்பும். ஓர் ஆணுக்கு தன் ஆயுள் முழுவதும் காதலும் காமமும் வேண்டும். அதை மனைவிதானே தரவேண்டும். தராவிட்டால் வேறு எங்கேயாவதுபோய் பெற்றுக்கொள் என்றுதானே அர்த்தம் ஆகிறது. பெண்கள் இதைக் கவனமானவும் அக்கறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும். 30 வயதுக்கு முன் பெண் அலங்கரித்துக்கொண்டு தன் கணவன் முன் நிற்பது அத்தனை அவசியம் இல்லை. ஆனால் 30க்குப்பின் ஒரு புதுப்பெண்ணைப்போல் தன்னை அலங்கரித்து கணவனின் விழிகளை இழுக்க வேண்டும். ஓர் ஆணை பெண் கவர்ந்துவிட்டால் அவன் ஒன்றுமற்ற பெட்டிப்பாம்புதானே? ஆனால் அப்படி கவராவிட்டால் அவன் பெட்டியைவிட்டு வெளியே வந்த பாம்பு என்று சொல்லத் தேவையே இல்லை.
*

* Leo Lp இதில் முத்துக்குமாருடன் குடித்தவர்கள் எத்தனை பேர், ஊற்றிக் க…