Posts

Showing posts from November, 2011

தமிழினம் நாளை - கனவு 2

அணையப்போகும் சூரியத் திரியில்
நெருப்பேற்றுவான் தமிழன்

சீற்றமிகு சுனாமிகளின் சக்தியில் உரமெடுத்து
பச்சைப்பயிர் வளர்க்கும்
அறிவியல் செய்வான் தமிழன்

தடம்மாறும் நிலத்தட்டுகளின்
தலையில் கொட்டி
பூகம்பத்தை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுவான் தமிழன்

இவைபோல் அறிவியல் சாதனைகளில்
மாற்றங்களை வாழ்வின்
ஏற்றங்களாக்கிக் கொண்டாலும்
நாளைய வீடுகளிலும்
தன் முலை எடுத்துப் பாலூட்டும் தாய்
ஓர் தமிழ்ப்பெண்ணாய் மாத்திரமே இருப்பாள்

தமிழினம் நாளை - கனவு 1

Image
வளைந்த எழில் வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய் கதிரோன் ஒளிர

அவள் கழுத்து ஆரமாய்
கோள்கள் அத்தனையும் கோத்துக்கிடக்க
ஓரமாய் அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய் மோவாயில் மிளிர

செவ்வாய் மட்டும் கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால் கவிதைகள் சொல்ல

அந்தக் கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச் சொற்களேந்த

பேரண்ட வெளிகளெங்கும் தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல் பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க

அட
இதையெல்லாம்விட அதிசயமாய்
அண்டசராசரப் பேரதிசயமாய்
ஆரும் கண்டிராத தேவ அதிசயமாய்
தமிழன் தமிழில் மட்டுமே உரையாடுவான்

மொழி ஒரு வாகனம் மட்டும்தான்

Image
நேற்று நவம்பர் 5, 2011 டொராண்டோவில் எழுத்தாளர் நரசய்யா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை வெற்றுச் சொல்லும் இல்லாத அதே சமயம் மிக இயல்பான பேச்சாக அது இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. தமிழன் புனைவிலக்கியங்களில் காட்டிய அக்கறையை ஆராய்ச்சி இலக்கியங்களில் காட்டவில்லை என்ற உண்மையைப் பல சம்பவங்களின் மூலமாக உணரச்செய்தார்.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் பாரதி, இந்தியாவில் முதலில் விமானம் வாங்கியவர் ஆவுடையப்பச் செட்டியார் என்ற தமிழர், கப்பல் என்பது தெலுங்குச் சொல் என்று பல சுவாரசியமான தகவல்களை அநாயாசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நீயா நானா கோபிநாத் மொழியைப் பற்றி இவரிடம் கேட்டபோது, மொழி ஒரு வாகனம் மட்டும்தான் அதுவே போய்ச்சேரும் இடம் அல்ல என்று கூறியதாகச் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்தததும் நரசய்யாவோடு தனியே உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. ஐயா ஒரு சிறு கேள்வி, உங்கள் கடல்வழி வாழ்வில் எத்தனையோ மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்வதையும் வாழ்வதையும் கண்டிருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள், அவர்கள் சென்ற இடங்களின் தங்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற சொந்த அடையாளங்களைத் தொலைக்காமல் வாழ என்னென்…