Posts

Showing posts from 2017
Nadodi Tamilan குர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்கள் சிலர்? - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது. அன்புடன் புகாரி அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து. இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன். ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும். ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள். என் கேள்வி: ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா? எல்லாமே ஆதாரப் பூர்வமானதானே? ஹதீதில் ஆதரப் பூர்வமான என்ற சொல் பயன்படுத்தப் பட்டுவிட்டாலே ஐயம் என்ற ஒரு சொல் அடிக்கடி ஊடாடத்தானே செய்யும். இது ஏன் பலருக்கும் புரிவதில்லை.
*
சகோதரரே....,
பொதுவாக சிம்பிள் ஆக எழுதிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன விதத்தில் குர்ஆனுக்கு முரன்படும் போது மறுப்பதில் என்ன தவறு.? என்று ச…
காசு பணம் மணி துட்டு துட்டு ஓட்டுக்கு காசு பணம் மணி துட்டு துட்டு ஆட்சிக்கு காசு பணம் மணி துட்டு துட்டு வியர்வை இல்லா வெற்றிக்கு காசு பணம் மணி துட்டு துட்டு ஜனநாயகத்துக்கு காசு பணம் மணி துட்டு துட்டு நாடு நாசமாய்ப் போவதற்கு காசு பணம் மணி துட்டு துட்டு அன்புடன் புகாரி
வாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலையாப்பு நண்பர்களே, நாம் இங்கே நம் கருத்துக்களை முன் வைக்கிறோம். ஒருவர் கருத்து மற்றவருக்கு ஏற்புடையதாய் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். இருக்கும்பட்சத்தில் கவலை இல்லை. ஏற்புடையது இல்லாவிட்டால் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது அந்த மாற்றுக் கருத்து என்பது கருத்துக்கு மட்டும்தான், நட்புக்கு இல்லை என்றால் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் உரையாடுபவர்கள் மெல்ல மெல்ல விரோதிகளாய் ஆகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அறியாமை மட்டுமே வெறுப்புக்குக் காரணம். இந்த உலகை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் எல்லோருடனும் உரையாட வேண்டும். எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்பதை ஏற்று மறுப்பதை மறுத்து பின் ஒரு நாள் உணர வேண்டியதை உணர்ந்து ஏற்று என்று தொடர்ந்து செல்ல வேண்டும். அப்படியான அறிதலுக்கும் புரிதலுக்கும் நமக்கு உதவுபவர்கள் நம் நண்பர்கள்தாம். அவர்கள்மீது நாம் வெறுப்பு கொள்வது சரியா என்று சிந்திக்க வேண்டும். நம் கையின் ரேகைகள் ஒரே மாதிரி இருக்காது. எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்? …
சியா- Shia
சுன்னா - Sunnah என்ற பிரிவினர்களுள் உண்மையான.... நல்ல.... சிறந்த.... முஸ்லிம்கள் யார்? அன்புடன் புகாரி
20171228


சியா சுன்னா பிரச்சனையால் பல உயிர் இழப்புக்கள். அவரவர் வழி அவர்கள் போகட்டும் ,அதன் பலனை அவர்கள் அறியட்டும் - நீடூரலி உயிரிழப்புக்குக் காரணம் பரிசுத்தமான மடத்தனம் என்பது என் தாழ்மையாக கருத்து எவனொருவன் குர்-ஆன் சொல்லும் அறத்தை - தர்மத்தை - ஹலாலை உறுதியாகப் பற்றிக்கொண்டு நல்வழியில் செல்கிறானோ அவனே சிறந்தவன், அவனே நல்ல முஸ்லிம், அவனே உண்மையான முஸ்லிம். அப்படியானவன் சியா பிரிவிலும் இருக்கலாம் சுன்னா பிரிவிலும் இருக்கலாம் சியா சுன்னா என்பன திமுக அண்ணா திமுக போன்ற அரசியல் கட்சிகள். இஸ்லாத்தின் பிரிவுகள் அல்ல. அதற்கும் இஸ்லாம் மார்க்கத்தின் அறநெறிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சியா என்பவர்களும் குர்-ஆனையும் நபிபெருமானையும்தான் பின்பற்றிச் செல்கிறார்கள். சியா என்பவர்கள் நபி பெருமானாரின் உறவுகள் சுன்னா என்பவர்கள் நபி பெருமானின் நண்பர்கள் சில நண்பர்கள் உறவுகளாயும் இருக்கிறார்கள் அன்புடன் புகாரி இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது. இணை வைத்தால் அவன் இஸ்லாமியன் அல்ல. இறைவனின் சொல…
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்
துணிந்தவனுக்குத் துக்கமில்லை
துக்கம் வரும் வேளையில் சிரித்தல் சிறப்பு
சிறப்பு என்பது ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் என்பது அறத்தின் மையச் சக்தி
இணையில்லாத சக்தி என்பது இறைவன் அன்புடன் புகாரி
>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை என்பதால் சமூக ஊடகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது. <<< நான் வேறுமாதிரி நினைக்கிறேன் மணி மணிவண்ணன் வாதாடுபவர் தன் ஈகோவால் விடாப்பிடியாய் நின்று விரோதியாய்க்கூட மாறி ஓடிப்போகலாம். ஆனால் அந்தக் கருத்தாடலைக் கேட்போரின் உள்ளத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். அறிதல் ஏற்படும். அதுதான் கருத்தாடலின் பெரும் பலன். எதிர்த்து வாதிடுபவர் ஒருவர் அல்லது இருவர். ஆனால் அறிதல் புரிதலில் மாற்றமடைவோர் பல நூறு பேர். அதோடு இன்னொரு பயனும் எனக்குக் கிடைக்கிறது. ஒரு கருத்தாடலில் இறங்கும்போது எனக்குப் பல தேடல்கள் எழுகின்றன. நான் தேடத் தொடங்குகிறேன். அதனால் என்னையும் நான் வளர்த்துக்கொள்கிறேன். அன்புடன் புகாரி
யாருக்குமே
எதிரியாய் இருக்க
விழைவதில்லை நான்

அவ்வண்ணமே
எழுதாமலும்
என்னால்
இருக்க இயலுவதில்லை

என்னை
நான் விரித்து எழுதினால்
எங்கிருந்தெல்லாமோ
தோட்டாக்களோடு
நிரம்பி வருகிறார்கள்
நண்பர்கள்

என்ன செய்ய முடியும்
நான்
எழுதிக்கொண்டேதான்
இருப்பேன்

அறம்
எழுத வந்தவனுக்கு
பயம் இருக்கக் கூடாது

தர்மம்
பேச வந்தவனுக்கு
தயக்கம் இருக்கக் கூடாது

ஹலால்
வலியுறுத்த வந்தவனுக்கு
வார்த்தை சுருங்கக் கூடாது

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்

ஜனநாயகச் சட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் சமம். இஸ்லாமிய சட்டத்தில், வாளும் கற்களும்தான் பதில் - (In a democratic constitution law, everyone are equal. In a Islamic Law, sword and stones are the answer.)

என்று ஒரு நண்பர் வாட்சப் உரையாடல் ஒன்றில் சொன்னார். அவருக்காக ஒரு நீண்ட பதில் எழுத வேண்டியதாயிற்று. இதை எழுத உதவிய பலரின் எழுத்துக்களுக்கும் என் நன்றி. இதோ என் பதில்:

இஸ்லாம் பற்றிய எந்தத் தெளிவும் இந்த வரிகளில் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி. 
1
ஒரு நாட்டின் மந்திரியும் செருப்பு தைக்கும் கூலியும் தோளோடு தோள் நின்று தொழுவார்கள். இது ஜனநாயகமா?


2  ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் என்று எவன் வேண்டுமோ எப்போது வேண்டுமோ பள்ளிவாசலுக்குள் நுழையலாம். இது ஜனநாயகமா?


3  இந்தியாவில் அகிம்சை என்றாலே என்போன்றோருக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது மகாத்மா காந்தியைத்தான். அந்த அகிம்சாமூர்த்தி இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது பிரதிநிதியாய் வந்த உமர் பின் கத்தாப் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. ”உமர் அவர்களைப் போன்ற நேர்மையானத…
காந்தி சிரிக்கிறார்
மக்கள் அழுகிறார்கள்
கையில் 500, 1000

மோடி நவம்பர் 2016
நான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

கணினி முற்றங்களில் - தமிழே
நீயொரு கோடி நிலா

முகநூல் முகப்புகளில் - தமிழே
நீயொரு தேவதை நாட்டியம்

டிவிட்டர் இழைகளில் - தமிழே
நீயொரு ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில் - தமிழே
நீயொரு தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே
நீயோர் ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில் - தமிழே
நீயோ நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழே தமிழே

அன்று நீ சங்கத் தமிழ்
இன்று நீ டிஜிட்டல் தமிழ்

நாளை வரும் நவீனத்திலும்
நீயே தமிழே தாயே

உனக்கு என்
தலையாய முத்த வணக்கம்


****


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்த…
அத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. நான் இப்படி பதில் எழுதி இட்டேன்.

அத்தான் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல். ஏனெனில் என் துவக்கப்பள்ளிப் பருவத்தில் வந்த திரைப்படங்களில் எல்லாம் மிக கவர்ச்சியாகக் கதாநாயகிகள் அத்தான் அத்தான் என்றுதான் தன் காதலனையும் கணவனையும் அழைப்பார்கள். அது அப்படியே நெஞ்சில் பசுமையாய்ப் படிந்துவிட்டது.

அத்தான் என்று சொல்லும்போது அது சாவித்திரியாய் இருக்கட்டும் அல்லது பத்மினியாய் இருக்கட்டும், ஒரு வெட்கம் காட்டுவார்கள் பாருங்கள், அது காணக் கண்கொள்ளாக் காட்சி. அப்படியான ஒரு வெட்கத்தை இன்று எந்தக் கதாநாயகியிடம் கண்டுவிடப் போகிறீர்கள்?

அத்தான்...என்னத்தான்... அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னிச் சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

இப்போது அந்த அத்தானைக் கைவிட்ட சைத்தான்கள்

காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை

என்று பாடுகின்றன

இப்போத…
யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே
வெள்ளை என்பது  அழகல்ல  நிறம்
ஆங்கிலம் என்பது  அறிவல்ல  மொழி

கறுப்பு என்பது
நிறமல்ல
பேரண்டம்

தமிழ் என்பது  மொழியல்ல  பண்பாடு


சொர்க்கம் தனியாகவும்
நரகம் தனியாகவும்
இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
சேர்ந்தே இருந்தால்
அது
பூலோகம்

அன்புடன் புகாரி

உண்மைப் பொய்

பொய்
எப்போதோ தன் பெயரை
உண்மை என்று
மாற்றிக்கொண்டுவிட்டது

பெயர்க் குழப்பத்தில்
உண்மையே
தன்னைப் பொய் என்று
அறிமுகம் செய்துகொள்ளும்
கட்டாயத்துக்குள் சிக்கிக்கொண்டு
காலங்கள் கடந்துவிட்டன

உண்மை என்ற
சொந்தப் பெயரில் இருந்த உண்மை
உண்மை என்று
பெயர் மாற்றிக்கொண்ட பொய்யின்
கவர்ச்சியையும் ஆளுமையையும்
தன்னைமறந்து
ரசிக்கத் தொடங்கிவிட்டது

உண்மை என்ற
பெயரில் இருக்கும் பொய்யும்
பெயர் மாற்றிக்கொள்ளாவிட்டாலும்
பொய் என்றே
அழைக்கப்படும் உண்மையும்
ஈர்ப்புக் காதலில்
இரண்டறக் கலந்து
பிரிக்கமுடியாத பந்தங்களாகி
நூறு நூறு ஆண்டுகள்
நெடிது வாழத் தொடங்கிவிட்டன

செயற்கைக் கருத்தருப்பில்
பிளுபிளுவென்று
இவர்களுக்குப் பிறக்கும்
சாத்தான் குட்டிகளால்
ஆக்கப்படுகிறது இவ்வுலகம்

அருந்தவக் குட்டிகளின்
சாடையெல்லாம்
அச்சு அசலாக
உண்மையைப் போலவே
இருக்கின்றன

ஆனால்
உட்சங்கதியெல்லாம்
பொய்யேதான்

அட
அது யாருக்குத் தெரியும்
இப்போது?

அன்புடன் புகாரி
20171217
நம் இந்திய தேசத்திற்கு
ஆங்கிலமே
பொது மொழியெனப்
போதும் போதும்

நடுவண் அரசு
இந்திக்காரனோடு
இந்தியில் உரையாடட்டும்
தமிழனோடு
தமிழில் உரையாடட்டும்
தெலுங்கனோடு
தெலுங்கில்  உரையாடட்டம்

இப்படியே
அத்தனைத்
தாய்மொழியினரோடும்
அவரவர் தாய்மொழியில்
உரையாடட்டும்

தாய் மொழி அறியாதான்
ஆங்கிலத்தில் உரையாடட்டும்

ஆங்கிலமும்
தாய்மொழிகளும்தானே
இந்த தேசத்தின் கல்விமொழிகள்

அதுவன்றி
இந்தியும் ஆட்சிமொழி என்று
சில குரங்குக் கூட்டங்கள்
திணவெடுக்கும்போதுதான்
இந்த தேசத்தின்
பொன்னான தாய்மொழிகள்
நசுக்கப்படுகின்றன
ரத்த ஆறுகள் ஓடுகின்றன

இந்தியை
நாடாளுமன்றத்திலிருந்து
முற்று முழுதாக
ஒழித்துக் கட்ட வேண்டும்

தாய்நாட்டில்
தாய் மொழிகள்தான்
தாய்கள்

எந்தத் தாயும்
கண்ணீர் சிந்துதல் கூடாது

உன்
வீடாளும் மொழியே
நாடாளும் மொழியென்று
வீம்படித்தால்
வெற்றுச் சாம்பலாவாய்
எச்சரிக்கை

அன்புடன் புகாரி
20171217

நீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள். அரசியல் பிரிவுகள் எல்லாம் சாதி இல்லை. திமுக, அண்ணா திமுக, விடுதலைச் சிறுத்தை, பஜக எல்லாம் சாதியா? இஸ்லாத்தில் சாதிகளே கிடையாது! அன்புடன் புகாரி
ஓர்
ஓட்டின் விலை
ஐந்து ரூபாயில் தொடங்கி
இன்று  பத்தாயிரம் ரூபாய் ஆயிற்று

நாளை?

மாதா மாதம்
ஐயாயிரம் என்றாகலாம்

அல்லது
இவ்வண்ணமே  பழகிய மக்கள் வருமானமின்றி வாடும்போது

ஒரு மந்திரியைப்
போட்டுத் தள்ளிவிட்டு
இடைத் தேர்தல் நடக்க
ஆவன செய்யலாம்

எதுவும் நடக்கும்
இனி எப்படியும் ஆகும்

ஊழல் என்பது
பன்முகக் கத்தி

அன்புடன் புகாரி 20171216
இரண்டே
சாதிகள்தாம் உண்டு

அறம்-தர்மம்-ஹலால்
வழிநடக்கும் மேலானோர்
ஒரு சாதி

அறமற்ற-அதர்ம-ஹராம்
வழிநடக்கும் கீழானோர்
மற்றொரு சாதி

இதை
நான் சொல்லவில்லை

சாதி
இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்
மேதனியில்
இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

என்று
நல்வழி நூலில்
பழந்தமிழச்சி
ஔவை சொல்கிறாள்
20171214
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில்உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை
சாதிகள்
இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம்

என்றான்
பாரதி

அவன்
கடவுள் நம்பிக்கை
இல்லாதவனும்
அல்லன்

இந்து மதத்தை
எதிர்த்தவனும்
அல்லன்

அன்புடன் புகாரி
மச்சான், நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்டில் குடும்ப அன்பும், 
இஸ்லாம் தரும் அறமும்,
தமிழ் தரும் பண்பாடும்தான். அந்த அரணுக்குள் நுழைவது எளிதல்ல. நாங்கள் இங்கே கனடாவில் ஊரில் வாழ்வதைவிட பாதுகாப்பாக நன்றாகவே வாழ்கிறோம். அன்புடன் புகாரி
Quote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி? பஞ்ச் என்கிறார்கள் சிலர் நச் என்கிறார்கள் சிலர் குறிப்பு என்கிறார்கள் சிலர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் செ. இரா. செல்வக்குமார்
மணி மணிவண்ணன்
Semmal Manavai Mustafa
Ramasami Elanthai
Krishnan Ramasamy
Lion Mansure Pm சொன்னவை: கூற்று
கூற்றுகள்
கூறுகை
கேட்டிகை
மேற்கோள்
கோள்
நறுக்கு நறுக்குத் தெறித்த மாதிரி என்று பாட்டிகூட சொல்வார்கள். கூற்று, நறுக்கு இரண்டும் என் மனப்பக்கம் நெருங்குகின்றன கூற்று என்பதை கூறுகை எனும்போது கொடேசன் என்பதோடு பொருந்துவதாய்ப் படுகிறது Quotes - கூற்றுகள் Best Quotes - நறுக்குகள் Quotation - கேட்டிகை, கூறுகை அன்புடன் புகாரி
>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உடல்ரீதியான பிரச்சனை.<<< நானும் அதைப் பிரச்சினை என்றுதான் சொல்கிறேன். உடல் ரீதியான என்பதைக் காட்டிலும் உளவியல் ரீதியான என்பது மிகவும் சரி. நாம்தான் நம் மருத்துவ அறிவியலால் அவர்களைக் காக்கவேண்டும். >>>அது தானாகவே தோன்றுமொரு ஹார்மோன் மாற்றம். இதையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.<<< சில மாதங்களுக்குமுன் பிறந்த குழந்தை ஒன்றை சமையல் செய்து தட்டில் ஏந்திக்கொண்டு வந்து கூட்டாக நின்று வெட்டித் தின்னக் காத்திருப்பதாக வீடியோக்கள் வந்தன கண்டீர்களா? தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள்? அன்புடன் புகாரி