Posts

Showing posts from July, 2016

20160730

>>>நபி சாதியை ஒழித்தாருன்னு சொல்லிட்டு சாதிஒழிய வேண்டியதில்லைன்னு சொல்றிங்க நன்பர் புகாரி<< நான் சாதி ஒழிய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. சாதி ஒழிந்ததாய் நான் அறியவில்லை என்றுதான் சொல்கிறேன். சாதியை ஒழிப்பது இயலுமா இயலாதா என்பது இருக்கட்டும், ஆனால் சாதிகளுக்கு இடையில் இருக்கும் பாகுபாடுகள் தூள் தூளாக வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன். பாகுபாடுகள் தீர்ந்துவிட்டால், யார் என்ன சாதியானால் யாருக்கு என்ன? அப்படியே இனம் அழியத் தேவையில்லை. ஆனால் இனப்பாகுபாடு அழிந்தே தீரவேண்டும் மொழி அழியக் கூடாது ஆனால் மொழிப்பாகுபாடு அழிய வேண்டும். இப்படியே மனிதர்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகள் எல்லாம் தீய்ந்து கருக வேண்டும். அதற்கு முதலில் கோவிலில் ஆண்டான் அடிமை ஒன்றாய் நின்று வணங்குதல் வேண்டும், மேலோன் கீழோன் ஒரே கல்விநிலையத்தில் பயிலல் வேண்டும், இப்படி ஒரே ஒரே என்ற உயர்வு வேண்டும்
*
>>>பெரியார் இல்லை என்று சொன்ன கான்சப்ட் பிறப்பால் உயர்வு, தாழ்வு மற்றும் மனித அறிவுக்கு சரி என்கிற அளவில் இல்லாத மூடநம்பிக்கைகளை உள்ளடக்கிய கடவுள் கான்சப்ட்.<<< அதனால்தான் எனக்குப் பெரியார…

20160729

* நண்பர்களே, தயவு செய்து இங்கே மதங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைப் பேசாதீர்கள். நான் இணக்கமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று நாளெல்லாம் சிந்தித்து எழுதுகிறேன். மதச்சண்டை போடாதீர்கள். எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அது மதத்தின் குறை இல்லை. மனிதனின் குறை. முதலில் நாம் மாறுவோம். பின் மற்றவர்களை மாற்றுவோம் இந்த உலகை அமைதிப் பூங்காவாக சொர்க்கவெளியாக வாழ்வுச் சோலையாக ஆக்குவோம். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் இங்கே சொல்லுங்கள். நன்றி
* இன்றெழுத்திச் செல்வதுவும் என் கவிதைகளே. வன்முறையைத் தகர்த்தெறியாவிட்டால் அது என்ன கவிதையா? நல்லிணக்கத்தை அள்ளித் தராவிட்டால் அது என்ன கவிதையா? நான் எழுதுவேன், இனியும், இன்னமும் நிறைய எழுதுவேன். வன்முறை என்பது ஓர் அறியாமை. அதை அகற்ற என் கவிதைகள் பல்லாயிரம் விரல்களாய்ப் பல்கிப் பெருகும்
* >>>மதமென்ற அமைப்பு
மனிதன் கண்ட ஆட்சிக்
கான அரசமைப்பு<<< உலகில் மதத்தின் பெயரால் நிகழும் எந்த ஆட்சியும் நல்லாட்சியாய் இருக்கமுடியாது. எல்லா மதங்களையும் அள்ளியணைத்து எல்லா இனங்களையும் ஆரத் தழுவி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானத…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா?

தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பாடிசைப்பார்கள். அதற்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் இஸ்லாமிய மார்கத்திற்கு உகந்ததா? ”தரித்த நறும் திலகமுமே” என்றெல்லாம் வருகிறது. திலகம் என்றெல்லாம் சொல்வது சரியா? இறைவனுக்கு இணைவைப்பதாக ஆகாதா?
தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக நினைக்கிறார்கள் சிலர். அது தவறான கருத்தாகும்.

தாய் சிறந்தவள், தாய்மொழி இனிமையானது, தாய்நாடு நேசம் மிகுந்தது என்று எத்தனையோ விசயங்கள் மனிதனோடு இரண்டறக் கலந்து கிடப்பவை.

ஓர் ஆன்மிகவாதிக்குத் தன் இறைவனோ உள்ளத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கிறான்.

தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றின் மீதான அவன் பற்றும் பாசமும் நேசமும் தன் இறைவனை அவன் எங்கே வைத்திருக்கிறானோ அந்த இடத்திலிருந்து இறக்கிவிட்டுவிட வழியே இல்லை.

அப்படி இறக்கிவிட்டுவிடுமானால், அவனுடையது உண்மையான பக்தியே இல்லை.

நெகிழ்வதும், மகிழ்வதும், புகழ்வதும், வாழ்த்துவதும், பாராட்டுவதும், அன்பு செய்வதும், கருணை கொள்வதும், கூடாது என்றால் மனித வாழ்க்கையே கூடாது என்று பொருளாகிவிடும்.

இதனால் யாவருக்கும்.....

எந்த மதத்தில் இருப்பவருக்கும் எவ்வகை இறைமறுப்பில் இருபவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மதங்களில் இருப்போரே நீங்கள் யாவரும் இறைவன் இறைவன் என்று இறைவனையே பாருங்கள். என் மதம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கத் தேவையில்லை. அது உங்களுக்கு இடப்பட்ட ஒரு புனைபெயரைப் போல இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நீங்களாக இறைவனையே நோக்கி இருங்கள். இறைமறுப்பாளரைக் கண்டால் தீண்டத்தகாதோரைக் காண்பதுபோலக் காணாதீர்கள். இறைமறுப்பாளர்களே இறைவனை உங்களைவிட அதிகம் நினைக்கிறார்கள். இறைவன் இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏமாற்றத்தில்தான் பெரும்பாலான இறைமறுப்பாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இறைமறுப்பில் இருப்போரே நீங்கள் யாவரும் பகுத்தறிவே எனக்கான எல்லாம் என்ற நிலையில் மட்டுமே இருங்கள். உண்மையான பகுத்தறிவு எல்லோருக்கும் வாழ்வளிப்பது, எவரையும் கீழானவர்கலாக நினைப்பதல்ல. அப்படி நினைப்பதன் பெயர் அகங்காரம். உங்களுக்கு விகாரமான அகங்காரம் தேவையில்லை, அற்புதனான பகுத்தறிவே தேவை. சிறந்த பகுத்தறிவு என்பது எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் உலக மக்கள், …
என்னை நீ வந்து
கடைசியாய்ச் சந்தித்த நாளில்
பூத்திருந்த குறிஞ்சி
மீண்டும் பூக்கவா நீ
காத்திருந்தாய்

இப்போது வந்த நீ
இன்னுமொரு குறிஞ்சி
பூக்கும் வரையிலாவது
எனக்குள்ளேயே இருக்கும் நீ
என்னுடனேயே இருப்பாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
காய்ந்த சிறகு ஒன்று
என் காலடியில் கிடந்தது

குனிந்து எடுத்து
என் கைகளில் ஏந்தினேன்

ஒரு
முத்தம் பதித்தேன்

அடுத்த நொடி
காய்ந்த சிறகின் மேனி
தங்கநிறமானது

சருகின் உடைந்த ரேகைகளில்
பசுமையின் ஒளி ஏறிச்
சீராகின

ஓரங்களில்
பொன்நிறத் துகள்கள்
உதிரத் தொடங்கின

வெட்டுக்கிளியின்
வகை வகையான
சின்னஞ்சிறு இறக்கைகள்
சடசடவெனப் பலநூறாய் முளைத்தன

அடடா
காய்ந்த சிறகு
ஓவிய அழகில்
ஆகாய வெளியில்
சிலுசிலுவெனப்
பறக்கத் தொடங்கிவிட்டது

அது செல்லும் திசையையே
பார்த்துக்கொண்டு நின்றேன்
ஆச்சரியமாய்

இப்படியே
என் முத்தங்கள் எல்லாம்
பறந்து பறந்து வந்து
உன் இதழ்களையே சேருமானால்

உனக்கல்லாத
என் முத்தங்களை
நான் எப்படித்தான்
பத்திரப்படுத்தி வைப்பேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

20160726

மனிதர்களை யாசிக்க விடாமல் ஈகையை அள்ளி வழங்கச் சொல்கிறது இஸ்லாம். அதற்கான பயிற்சியும் மன உறுதியும் ரமதான் மாதத்தில் வழங்கப்படுகிறது. எல்லாமே மனிதர்களைக் கொண்டுதான் மனிதர்களுக்குச் செய்யப்படுகின்றன . கட்டளை மட்டும்தான் இறைவனுடையது, காரியமெல்லாம் மனிதர்களுடையதுதான். இது சரி இது பிழை என்பதைத்தான் இறைவன் நறுக்கென்று சொல்லிமுடிக்கிறான். அதுதான் அறம், அன்பு, அறிவு!
* >>>இருப்பவர்கள் உதவ ஈகை உடன் செல்வம் வேண்டும் அதனால் இது பெருங்கொடை ஆனால் செல்வமே இல்லாத எவருக்கும் ஈகை செய் என்று சொன்ன அல்லா தந்துள்ள செல்வங்கள் அறம், அன்பு, அறிவு ஆனால் நமக்கு இவை செல்வம் சென்று தெரிவதில்லை உண்மையில் இம்மூன்றும் தான் முக்கிய கொடைகள் என்றும் அதன் பண்பு கொடுக்கக்கொடுக்க வளரும் இயல்புடையது. கண்ணுக்குத் தெரியாமல் நம்பிக்கை எனும் ஆலவிருட்சமாக வளர அது சுயநலமில்லாத கொடையாக இருக்க வென்டும். (இலட்சுமணன் ஒண்டிப்புதூர் திருமூர்த்தி)<<<< அருமை. உண்மையில் இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதோடு நபிபெருமானார் வரலாற்றில் ஒரு சம்பவம். நபிபெருமானாருக்குப் போர் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அந்தக் கட்…

20160724

நிர்வாணம் அழகில்லை ஆடை குறையக் குறைய
கொதித்தெழுந்த உணர்வுகள் குறைந்து குறைந்து
பின் எது வந்து எப்படி நின்றாலும் 
எந்தச் சிலிர்ப்பும் இல்லாமல் வாழ்க்கை
படு சொதப்பலாய் சொத்தையாய் கடுப்பாய்
வெறுப்பாய் பாலைவனமாய் ஆகிவிடும் அறுபதிகளின் படங்களில் வந்த கதாநாயகிகள் தந்த எந்த உணர்வுகளையும் இன்று எந்த கதாநாயகியும் தறுவதில்லை
*
பத்மினிகள் கனவுகளை நிறைத்தார்கள், சரோஜாதேவிகள் கனவுகளில் வாழ்ந்துவிட்டே போனார். இன்று யார் பெயரையும் சொல்ல முடியாது, சதைகள்தான் கனவில் வருகின்றன. அப்படியே திடுக்கிட்டு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு அடச்சே என்ன கெட்ட கனவு என்று படுத்துக்கொள்கிறான் இளைஞன்.
*
யாரைப்பார்த்தாலும் சந்தேகம்படுபவன் அனுபவமோ தெளிந்த அறிவோ வாழ்க்கையில் நம்பிக்கையோ இல்லாதவன். இதோ குற்றவாளி என்று அடையாளப்படுத்திக் கண்டுபிடித்து அவனை மட்டும் கொத்தாக அள்ளிச் சென்று தண்டனை அளிப்பவன் தான் புத்திசாலி, வெற்றியாளன், சமூக சீர்திருத்தவாதி. என் வீட்டில் ஒரு பெண்சில் காணாமல் போய்விட்டது என்று இந்த உலகில் உள்ள எல்லோரும் திருடர்கள் என்று சொல்லும் மடமை கையாலாகாதத் தனத்தால் வெளிப்படுவது. ஒரு திருடனை அடையாளம் கண்டுபிடிக…

20160722

”உன்னுடையது உனக்கு என்னுடையது எனக்கு” என்றுதான் குர்-ஆனிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த மதம் இனம் மொழி எல்லாவற்றையும் மதிக்கச் சொல்கிறது. ஆனால் நாத்திகம் என்ற பெயரில் வன்முறைச் சொற்களை அள்ளி இறைப்பதும் நக்கலடிப்பதும் தங்களைப் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் வறுமையின் காரணம்தான் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதை அனுமதிப்பது வன்முறையை வளர்த்தெடுப்பதே என்று உறுதியாக நம்புகின்றேன்.
*
>>>எப்ப்டிவேண்டுமானாலும் ஆடை அணிய உரிமை இருக்கிறதல்லவா?<<< நிச்சயமாக உண்டு. எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அரசு அனுமதித்தால் ஆடை அணியாமலும் நடக்கலாம். அது அவரவர் விருப்பம் பண்பாடு கலாச்சாரம் வழக்கம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். ஆனால் தான் நிர்வாணமாக நடக்கிறோம் என்பதற்காக முழு ஆடை உடுத்தி இருப்பவர்களை வம்புக்கு இழுப்பது பெரும் தவறு. ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு அவளின் ஆடையிலும் இருக்கிறது என்பதை பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதும் அறிந்த விசயம்தான். பட்டுக்கோட்டை ரோட்டில், கனடா வீதியில் செல்வதுபோல ஒட்டுத் துணியோடு நடக்க…
நபிபெருமானார்
பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார்
பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும் இழந்தார்

வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிபையும்
சிறு வயதிலேயே இழந்தார்

இறுதியாக பெரிய தந்தை அபுத்தாலிபிடம்தான்
முகம்மது நபி வளர்ந்து வந்தார்

சிறுவனாக இருந்த போது ஆடு மேய்த்தார்
வளர்ந்தபின் வணிகம் செய்தார்

இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான
கணவரை இழந்த கதீஜாவை மணந்தார்
இனி ரத்தம்பட்டுச்
சொட்டும்போது
கத்திக்குக்கூட
கருணை வரலாம்
மனிதர்களுக்கு
வரப்போவதில்லை

அடுத்த வெட்டுக்குப்
பாயும்முன்
அது
அரைநொடியேனும்
அச்சங் கொள்ளலாம்
மனிதன்
அச்சம் கொள்ளப் போவதில்லை
உள்ளங்களில் கருணை
உயிர்களிடத்து அன்பு
என்ற
செத்தொழிந்த
பழஞ்சொற்ப் பிரயோகங்களை
இனி
எங்கே சென்று தேடுவது
வன்முறை எகிறிப்பாய மனிதம் நடுநடுங்க வானம் இடிந்தால்தான் இனி இங்கே  மாற்றம் நிகழுமா
என்றால்  இனியோர் காலையும் இரத்தம் சொட்டச் சொட்ட
வானமே நீ விடியவேண்டாம் இடிந்தே போ

அன்புடன் புகாரி
20160720

20160719

புத்தர் அப்படித்தான் போதித்தார். கடவுள் இல்லை என்றார். அன்பே கடவுள் என்றார். அன்பால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்றார். ஆசையைக் கொல் என்று எல்லோரையும் துறவியாகச் சொன்னார். ஆனாலும் இந்த உலகம் அன்பால் நிறையவில்லையே. ஆசையைக் கொல்லவில்லையே. எங்கே குறை இருக்கிறது சொல்லுங்களேன்?
* >>>>கடவுளிடம் பயப்படுவது தான் பக்தி என்ற தங்கள் கருத்தை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.
பயம் எங்கு வருகிறதோ அங்கு சிந்தனை வராது. சிந்திக்க மறுப்பதுதான் பக்தி. <<<<< உண்மையைச் சொன்னால் உங்களுக்க்கு ஏன் சிரிப்பு வருகிறது? அப்படியாக அந்த உண்மை இருக்கக் கூடாது என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குற்றப்பத்திரிகைகளை எல்லாம் எங்கோ வாசித்துவிட்டுப் போக ஆசைப்படுகிறீர்களா? நான் கடவுளை நன்புகிறேன் என்றால் என்ன அர்த்தம். கடவுள் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று அர்த்தமா? நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றால் என்ன அர்த்தம் கடவுள் சொல்வதை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்றுதானே அர்த்தம். இங்கே ஒத்துப் போவது யார்? எனக்கு என் அம்மாவிடம் அப்பாவிடம் குருவிடம் பயம் இருந்தது. கல்வியிடம், பரிச்சையிடம், போட்டிகளிடம்,…

20160718

அறம் - அறிவு - அன்பு

இவை மூன்றையும்

முதன்மையாகக் கொண்டு

மனிதநேயம் பாராட்ட வந்தால்

நான் உங்களோடு
எப்போதும் உடன்படுவேன்


*

ஒவ்வொருவரும்
ஏதேனும் ஒன்றில்
அதீத உணர்வுளோடு
கட்டிப்போடப்பட்டுத்தான்
கிடக்கிறார்கள்

அது எதுவானாலும்
சரிதான்
பிழையே இல்லை

ஆனால்
அதில் வைக்கும்
எந்தத் தீவிரமும்
எவ்வகை வன்முறையையும்
தூண்டிவிட்டுவிடவே
கூடாது

கூடவே கூடாது


*


திருடப் போகிறவன் திமிறுபவர்களைத் தீர்த்துக் கட்டுகிறான்

ஊழல் அரசியல்வாதி தட்டிக் கேட்பவனைத் தரைமட்டும் ஆக்குகிறான்

அரசியல் வெற்றிக்கு மதத்தின் உணர்வுகளை குத்தீட்டிகளாய்ப் பயன்படுத்துகிறான்

சொந்தச் சிரங்கை சாதியைத் தீண்டி சொரிந்துவிட்டுக் கொள்கிறான்

இப்படியாய் ஒரு வக்கிர மனிதனின் தகாத செயல்களுக்குத் தடையாய் இருப்பதையெல்லாம் வன்முறையால் அழிக்கிறான்

வன்முறை அழிய ஒரே ஒரு வழிதான் உண்டு

அறம் அறிவு அன்பு என்ற மூன்றையும் பிறந்த நிமிடம் முதலே மரபணுக்களில் பதித்துவிட வேண்டும்.

எப்படிப் பதிக்கலாம் என்று எல்லோரும் சிந்திக்கலாம்
*


அறம் அறிவு அன்பு
கொண்டு வாழ்வதுதான்
தனிமனித ஒழுக்கம்

இரண்டாவது இல்லாவிட்டாலும்
கடைசியைக் கைவிடக்கூடாது

முதலானது
முதன்மையானது
மாற்…