Posts

Showing posts from October, 2016
20161028 முகநூல்

**
குற்றம் ஒருபோதும் பாதுகாப்பாகாது
இன்னொரு பெரிய குற்றத்திற்கான
வேராகவே அது வளரும்

*

தெற்கு தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

*

மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி
எத்தனைக் கவர்ச்சி
கனடிய
இலையுதிர் காலம்

*

எந்தப் பண்டிகை என்றாலும்
கொண்டாடப் போவது
வணிகர்கள்தாம்

*

பட்டாசுக்கு
நெருப்பு வைக்கும்
பிஞ்சு

பிஞ்சுக்கு
நெருப்பு வைக்கும்
பட்டாசு

வெற்றி யாருக்கு?

*

ஆமாம் உங்களுக்கென்ன RSS தான் இந்துக்கள் ISIS தான் முஸ்லிம் என்று சொல்லிப் பினாத்திக்கொள்வீர்கள். ஒருங்கிணைந்து இவர்களை உண்டு இல்லை என்று ஆக்க முன்வரமாட்டீர்கள். ஒளிந்தோடுவதே உங்கள் வேலை. கேட்டால் பகுத்தறிவு என்பீர்கள் ;-) உண்மையான பகுத்தறிவு ஓரமாய் நின்று அழும், பாவம்!

*

எல்லாம் அந்நிய மோகம்தான். உள்ளூர்க் காரன் அரைவேக்காடு வெளிநாட்டுக்காரன் அதிமேதாவி என்பதும், தன் வேரின் பண்பாட்டையே நெருப்பு வைத்துக்கொளுத்தும் பாதையும் இவர்களுடையது. நல்ல இலக்கியக்காரனுக்கு வேர் தன் இலக்கியம்தான் தன் பண்பாடுதான், ஆனால் அவன் ஒரு பறவையாய் உலகமெங்கும் பறந்து ஒப்பீடு செய்து கொண்டு தன் கூட்டை நேச…
பிறந்தநாள்
நீ மலர்ந்த நாள் அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள் உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய் ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே அந்த நாளின்
மேன்மையைக் கொண்டாடு அதைத் தந்த இறைவனிடம்
உன் அன்பை அள்ளிக்
கொட்டு சின்னச் சின்னக்
கண்ணீர் முத்துக்களால்
நன்றிகள் பெருக்கு உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள் இடையிலேயே
தடுக்கி விழுந்துவிடாமல்
அருளப்பட்ட
இறுதிப் படிக்கட்டுவரை
இன்பமாய் இனிமையாய்
உன்னையே நீ பாராட்டி
ஊரறிய உன் வயதைச் சொல்லி
நிதானமாய் ஏறிச் செல் எத்தனைக்
காய்ந்த வயிறுகளை
நிறைக்க இயலுமோ
அத்தனையையும் நிறைத்துக்
கொண்டாடு ஒரே ஒரு
புது நட்பையாவது
பெற்றுப் போற்று கசந்துபோன உறவுகளில்
ஏதோ ஒன்றையாவது
மீட்டெடுத்து அள்ளியணை உன் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
உன் கசடுகளைக் களைந்த
புத்தம் புதியவனாய்ப்
பிறந்து சிரி உன்னாலும்
தீர்மானிக்க முடிந்த
இன்னும்
எத்தனை எத்தனை
உன் பிறந்த நாட்கள்
உன் முன்
உனக்காகக் காத்திருக்கின்றன
பார் மகிழ்
கொண்டாடு குதூகலி
பாம்புகள் நெளிகின்றன
கழுத்துப்பட்டிகளுடன்
பணியிடங்களில் நாற்காலிகளில் அமர்கின்றன
கணினி பார்க்கின்றன
புதுப்பணியாளனின்
மேலான்மைத் திறன்கண்டு
கண்கள் சிவப்பேற
நெளிகின்றன பாம்புகள் வட்டமேசையின் இடையிடையே
ஏராளமான பாம்புகள்
வனப்பான ஆடைகளில்
துடியாகப் பேசுகின்றன கொத்துவது தெரியாமல்
கொத்தத் தெரிந்த பாம்புகளால்
அயராப் பணிசெய்து கிடக்கும்
அபலை எலிகள் அவதியுறுகின்றன
எடு விடு என்கிற
இணைவாய்ப்புத் திட்டத்தால்
விடுபட்டு வீதியில் அலைய
வஞ்சிக்கப்படுகின்றன எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்
ஆப்பிளிலா இருந்தது பாம்புகள்
ஆதாமிலல்லவா இருந்தது பாம்புகள் நாவடிக் கட்டளை ஆங்கிலத்தில்
நடிப்பறியா நடிப்புச் சாதுர்யத்தில்
கரைகண்ட பாம்புகளைக் காண
எங்கே செல்ல வேண்டும் வயல்வெளிப் பாம்புகள்
வெட்டிக்கொண்டு சாகும்
மூர்க்க முட்டாள் பாம்புகள் அலுவலகப் பாம்புகளின் கைகளிலோ
நஞ்சு கக்கும் கோடரியே இருக்கும்
காணும் கண்களுக்கு மட்டும்
வெண்ணிற ஆடை மட்டுமே தெரியும் எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள் ஆப்பிளில் இருந்ததா
அல்லது
ஆதாமில் இருந்ததா பாம்பு இத்தனைப் பாம்புகளின்
முட்டைகளையும் யார்தான் இட்டது
உன்னை நான்
அள்ளியெடுத்ததில்லை
ஆனால்
உன்னை என் உயிருக்குள்
மெத்து மெத்தென்று உணர்கிறேன் 
கண்ணே நீ என்னிடம்
பேசியதே இல்லை
ஆனால்
உன் குரல் எனக்குச் சன்னமாய்
மிக அருகில்
கிசுகிசுப்பாய்க் கேட்கிறது
செல்லம் என்னை உனக்குத் தெரியாது
நான் உன்னைக் கண்டதே இல்லை
ஆனால் உன்மீது நான்
யுகங்களாய் நீண்ட
வெறியன்பு கொண்டிருக்கிறேன்
உயிரே * நேற்று பார்த்த படத்தில் வந்த இந்த வசனம் தந்த பாதிப்பில் I never held you but I feel you
You never spoke but I hear you
I never knew you but I love you
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பயணம் ஒருவழியாய்
முடியத்தான் போகிறது வழியெல்லாம் உதிர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் அள்ளியெடுத்துத்
தங்கமுலாம் பூசிப் பூசி
நினைவுப் பொந்துகளில்
பத்திரப்படுத்தினேன் ஆனால்
நொடிகளில்
தன் பித்தளை முகம் காட்டுவதை
அந்நிமிடங்கள் நிறுத்தவே இல்லை ஆக
நான் தான் போலியாகிப்
பல்லிளித்து நின்றேன் பித்தளை தன் நிசத்தில்
நிமிர்ந்துதான் நின்றது என் நாட்கள்தான் போலி
பித்தளையின் நாட்களோ
அச்சு அச்சு அசல் அசல் வெற்றிபெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கண்ணதாசா அடப்பாவி
கொல்றியடா
இந்தக் கல்வியால் பயனடைபவர்கள்
பெரு நிறுவனர்கள் மட்டுமே நம்மை அவர்களுக்காக
உழைக்கத் தயாராக்குகிறார்கள் வாழ்நாளெல்லாம்
நாம் அவர்களுக்காகவே உழைக்கிறோம் சின்னச் சின்னப் பகுட்டுகளை
ஜென்ம வசதி என்று
வாய்கிழியச் சொல்கிறோம் அறம் வலியுறுத்தும் கல்வி
நம்மிடம் இல்லை இருந்தால் மனிதநேயம் பெருகும்
மனிதம் வாழும் அறம் வலியுறுத்த எதுவந்தாலும்
அதை அப்படியே குறைகூறித்
தூக்கி எறிந்துவிடுகிறோம் தூக்கி எறிந்தால் மட்டுமே
நாம் பகுத்தறிவாளர்கள் என்றுவேறு
சொல்லிக்கொள்கிறோம் மூடநம்பிக்கைகளை அழித்துப்போடும்
கல்வி நம்மிடம் இல்லை எது அறிவு என்று சொல்லித்தரும்
கல்வி நம்மிடம் இல்லை எது உண்மையான வாழ்க்கை என்று
வரையறுக்கும் கல்வி நம்மிடம் இல்லை எல்.கே.ஜி க்குக் கதறிக்கொண்டுபோகும்
பிள்ளையைத் தயார் படுத்தி
படுத்தி எடுத்து அனுப்பிவைக்கும்
பெற்றோர்களின் கண்களில் மிளர்வது
டை கட்டிய உத்தியோகம் மட்டுமே டாக்டராவதைவிட
மனிதனாவது முக்கியம் எஞ்சினியராவதைவிட
நல்லிணக்கம் பயில்வது முக்கியம் வக்கீலாவதைவிட
வன்முறையற்றவனாவது முக்கியம் கணிப்பொறியாளனாவதைவிட
சக உயிர் நேசிப்பவனாவது முக்கியம் கலெக்டராவதைவிட
ஊழலற்றவனாவது முக்கியம் கல்வியே உனக்குக்
கல்வி கற்றுத் தர…
வாழ்க்கைப் பெருந்தீவில் அதிரகசிய மறைபொருள்  மந்திரமென்று எதுவுமே இல்லை
சுவாரசியமான ஓர் உயிர்
கிசுகிசுப்புத் தூரத்திலேயே இணக்கமாய் உன்னோடு  இணைந்திருந்தால்

வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது? அகலமாவது?
அவை அனைத்துக்கும்
ஆழ்கடல் நங்கூரமாய்
ஓர் இரும்பு முற்றுப்புள்ளி
அகற்றமுடியாததாய்
இறக்கப்பட்டிருக்கும் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் கோடிப் பிறப்புகள்  குழுமிப் பூத்திருக்கும்
வேறொரு மாய மந்திர  தேவ தத்துவதும்  இல்லை இந்த வாழ்க்கையில்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
உன்
பிணத்தின் முன்னின்று
அழப்போவது எத்தனை பேர்
என்றெண்ணி
இன்றே வருந்துவது 
மரணத்திற்கு நிகர் இன்று இப்பொழுது
உன்னோடு சிரிப்பவர்களும்
உன்னைச் சிரிக்க வைப்பவர்களும்
போலியானவர்களாய் இருப்பினுங்கூட
அதுதான் பிறப்புக்கு நிகர் சிரி
மகிழ்
பூரித்துப்போ எவனும் உன் மரணத்தில்
உனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு
அழத் தேவையில்லை
அதுவும் இன்று உன்னைக்
கதறக் கதற அழவைத்துவிட்டு அன்று
அறியாமையில்
ஆயிரம் ஆயிரம் சிரிப்பு
இன்று
அறிய அறிய
அழுகை ஒன்றே அவதரிப்பு அந்த
அரைகுறை அறிவை
பூரண அறிவாக்கு
அழாதே எழு சிரி
மகிழ்
பூரித்துப்போ
Whenever I chat with anyone else
I feel like I am not chatting through my own language Whenever I laugh with anyone else
I feel like I am not laughing through my own heart Please don't ever give myself
Back to me Though these seems to me so funny
I like them so much
Love you forever
அதேதான் என் அன்பே உன் குரலில் நான் கரைகிறேன்
உன் குழலில் நான் கரைகிறேன்
உன் விழியில் நான் கரைகிறேன் 
உன் மொழியில் நான் கரைகிறேன்
உன் விரலில் நான் கரைகிறேன்
உன் வளைவில் நான் கரைகிறேன்
உன் இதழில் நான் கரைகிறேன்
உன் தமிழில் நான் கரைகிறேன்
உன் கழுத்தில் நான் கரைகிறேன்
உன் கவியில் நான் கரைகிறேன்
உன் அழகில் நான் கரைகிறேன்
உன் அணைவில் நான் கரைகிறேன் இன்னும் நான் கரைகிறேன்
உன் எதிலும் நான் கரைகிறேன் ஆயினும் என் அன்பே
இத்தனை இத்தனையாய்
நான் இப்படி இப்படியாய்
கரைந்து கரைந்து
உருகும்போதும்
எப்படி எப்படித்தான் என் ஆயுள்
இப்படி இப்படியாய்க் கூடுகிறதோ
என்று
அந்தச் செப்படி வித்தை
அறியாதவனாய் அதிசயிக்கிறேன் காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்களாய் உடைந்து
மகரந்தம் சிந்தும்போது
தூக்கம்  தானே வரும்

ஆனால்
தூங்க மனம் வருமா
என்று தெரியாது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
ஹார்மோனின் தவிப்புகள்
காதலுக்கு உகந்தவை
கவிதைகளுக்கும்
ஏனென்றே அறியாமல்
விழிப்பு வந்து
உறங்காமல் கிடக்கும்
இரவுகள் எதைச் சொல்கின்றன?


ஓடு ஓடென்று பணிச்சுமையில்
ஓடித்திரியும் உனக்கு
உனக்கே உனக்காக நேரத்தை
நான் இப்போது தருகிறேன்

என்னில் படுத்துக்கொண்டு
என் மடியின் அமைதியில்
உன்னை நீ யோசி
என்று சொல்கின்றனவா?


திரும்பிப்பார்
உன் பயணத்தில் நீ
எங்குமே செல்லவில்லை

நின்ற இடத்திலேயே நிற்கிறாய்
இதற்கு ஏன் நீ ஓடவேண்டும்
என்று கேட்கின்றனவா?


எதுவும் யாருக்கும் புரிவதில்லை
அவரவர் அவரவரின்
அழிச்சாட்டியங்களைக்
கடைவிரிக்கத்தான் வருகிறாரேயன்றி
நல்லன கொள்வதற்காக
ஒருவருமே வருவதில்லை

இதில் கூடும் தளமென்ன
உரைக்கும் கருத்தென்ன
என்று புரியவைக்கின்றனவா?


பசிக்குமுன் புசிக்கிறாய்
காண்டாமிருகங்களை விழுங்கிவிட்டு
இரவின் அமைதிப் படுக்கைக்குள் நுழைகிறாய்
பட்டினியாய் வயிற்றுக்கு
ஒருநாளும் ஓய்வு தருவதில்லை

சட்டென ஒருநாள் விழுந்துவிடப் போகிறாய்
எச்சரிக்கத்தான் எழுப்பிவிட்டேன்
என்று சொல்கின்றவா?


எழுந்ததும்
மீண்டும் கண்ணிறுக்கி முயன்று உறங்காமல்
ஏன் இப்படி நடு இரவிலும் உன் எண்ணங்கள்
தறிகெட்டு ஓடுகின்றன என்ற
விமரிசனமும் கரிசனமுமாய்
என்னுடம் உறங்கத் தவிக்கின்றனவா?
இது
முறையா சொல்

இப்படித்
தட்டுத் தடுமாற
விட்டுவிட்டுச்
சட்டென
விடைபெறுவது
தேவ தேவதைகள் சாட்சியாக
சரியா சொல்

உனக்காக
ஏங்கிக் காத்திருந்த
நடுக்கப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உனக்காக
உறக்கம் துறந்துத் தவித்திருந்த
இரவுப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உன்
கதகதப்புச் சுகம்பெறக்
கடுந்தவக் கோலங்கள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

வந்தது
வந்ததாய் இல்லாமல்
மாயமாய்
மறைந்துபோகும் நிலை
துரோக இழிநிலையல்லவா
சொல்

பச்சைப்பசும் இலைகளும்
கண்ணீர் கேட்டுப்
பரிதவித்து உதிர்கின்றன
சினங்கொண்டு சிவக்கின்றன

இத்துயர் காணும் நெஞ்சின்றி
பறவைகளும் பரிதவித்து
நெடுவானம் பறக்கின்றன காண்

போதுமா போதுமா
கனடியக் கடுங்குளிரின்
கொடுந்துயரில் கிடந்துழலச்
சன்னமாய்ச் சபித்துவிட்டு

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல் சொல்


கோடையே கோடையே
கனடியச் செம்பொன்னெழிற்
கோடையே கோடையே

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல் சொல்

நினைத்துப் பார்க்கிறேன் - என் பிறந்தநாளுக்காக - 2005 08 10

** பிறந்தநாள்.... பி..ற..ந்..த..நா..ள்.. ** புகாரி
டொராண்டோ, கனடா பிறந்த தேதி: ஆகஸ்ட் 10 புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com இதோ, அன்புடன் சார்பில், அன்புடன் அன்பர் காந்தி ஜெகநாதனின் வாழ்த்து மடலும், நம் புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதையும், புகாரியின் நெருங்கிய நண்பரான கவிஞர் சேவியரின் கவிதையும்! வாழ்த்து முத்துக்கள் தந்த மூவருக்கும் என் நன்றிகள்! * * * * * பிறந்த நாள் வாழ்த்து
~~~~~~~~~~~~~~~~~~ இதயங்களை 'அன்பால்' இணையத்தில் இணைத்த புகாரி அவர்களுக்கு,
உதயமாகும் இப்பிறந்தநாளில் வாழ்த்து அனுப்பவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காண்பதற்கு மட்டும் அன்பான தோற்றமன்று,
பேச்சிலும், செயலிலும் அன்பைக் காட்டுவதில்
புகாரிக்கு நிகர், புகாரியேதான்! வீண் வர்ணஜாலங்களை எல்லாம் காணமுடியாது
ஆனால், நகைச்சுவை உணர்வு இழையோடும்
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்
ஒவ்வோரு நொடிப் பொழுதும்! "தமிழை மறப்பதோ தமிழா..?" - புகாரி தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப்
போனவனன்றோ? ........
வா தமிழா...

16 இதற்கும் புன்னகைதானா

உலகத்தையே தன் அகிம்சையால் வென்றெடுத்தார் அண்ணல் காந்தி
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது

*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்
*

இதற்கும் புன்னகைதானா?

*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும் பிறவிகள் உண்டாமே
உனக்கொரு பிறவியில்லையா

தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல் போய்விட்டன

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும் பிறவிகளெடுத்து விட்டனர்
உனக்கு மட்டும் பிறவியே இல்லையா

அண்ணலே
இன்று என்னுடைய மனுவையும் கேள்
நீ பிறவி எடுக்காதே

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த் துளைக்க
துப்பாக்கிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன

என்ன
இதற்கும் புன்னகைதானா?