Posts

Showing posts from February, 2011

நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்…
வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்...

காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க்
கிடந்தால்...

காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்
மனிதம் மாய்வதற்கு மதம்தான் காரணமா?

மனிதம் மாய்வதற்கு மதம் காரணமல்ல மனித வக்கிரமே காரணம். மனித வக்கிரம் மடிந்தால்தான் மனிதம் தழைக்கும்.

மனித வக்கிரம், சாதி மதம் இனம் மொழி நிறம் நிலம் அரசியல் காசு காமம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி தன் வக்கிரத்தைக் காட்டும்.

இனங்களுக்குள் யுத்தமும் அழிவும் நடக்கிறது என்பதற்காக, மனித வக்கிரத்தை அழிக்காமல் இனங்களை அழித்தால், உலகில் மனித இனம் மொத்தமாக அழிந்துபோகுமல்லவா?

அன்னை தெரிசா, பாரதி, காந்தி போன்ற எண்ணற்றோர் மதம் சார்ந்தவர்கள்தாம். அவர்களால் உலகிற்குக் கேடு விளைந்ததா?

ஒரு மதத்தில் நல்லவரும் இருப்பர். வக்கிர மனிதரும் இருப்பர்.

மதம் அற்றவர்களிலும் நல்லவரும் இருப்பர் வக்கிர மனிதரும் இருப்பர்.

மதத்தில் உள்ள வக்கிரபுத்திக்காரர்களை பார்த்து மதத்தை அழிக்க நினைப்பதும் மதமற்றோரில் உள்ள வக்கிரபுத்திக் காரர்களைப் பார்த்து மதமற்றோரையெல்லாம் அழிக்க நினைப்பதும் அறிவீனம்.

மதங்கள் எல்லாம் இணையவேண்டும். மதங்கள் இணைகின்றன என்றால் அது ஓர் ஆண் பெண் உறவைப்போல. ஆண் ஆணாகவே இருப்பான். பெண் பெண்ணாகவே இருப்பாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பர். ஏற்பர். அதனால் இண…
எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின்
இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம்
சொல்பவற்றுள் உப்புமில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

நெஞ்சில் ஏக்கம் ஓங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ

படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும்
ஊற்றுகளும் எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மைதான்
மிளிர்கிறது

குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும்
கோணலாகிச் சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம்
ஐந்தெனக்குக் கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
முடக்கமின்றி
பொய்களற்று வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து
எனக்குள்ளே திணிக்கும்
இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில்
தொட்டதெலாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று
புண்ணாவது பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த
மூளைமரம் வளர்த்துவிட்ட
சிலிர்ப்புசெத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்க…
அகராதிகளைக் கடந்த சொல்

கடவுளுக்குப்
பொருள்கூறும் அகராதிகள்
மதங்கள்
அகராதிகளைக் கடந்த சொல்
கடவுள்

வாழ்வெனும் தமிழே வாழ்க வாழ்க

சித்தர்கள் மொழியாம்
செந்தமிழே 
அழகு
முத்திரை பதிக்கும்
முத்தமிழே

கணினிக்குள் கமழும்
கணித்தமிழே
எங்கும்
இணையத்தில் இனிக்கும்
இகத்தமிழே

உயர்தனிச்
செம்மொழியே
எங்கள்
உயிரின் திருமொழியே

உன்னில் கரைந்தே
உயர்கின்றேன்
எங்கள்
வாழ்வெனும் தமிழே
வாழ்க வாழ்க

வணக்கம் செம்மொழியே

Image
ஒரு கவியரங்கத்தில் நான் தமிழன்னைக்கு இப்படி வணக்கம் வைத்தேன். அப்போது தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பு வந்திருந்தது


செம்மொழியே செம்மொழியே
செந்தமிழர்த் தாயே
செம்மொழியே செம்மொழியே
என்றானாய் என்றோ

செம்மொழியே செம்மொழியே
என்றறிந்தும் அன்றே
செம்மொழியே செம்மொழியே
என்றழைத்தார் இல்லை

செம்மொழியே செம்மொழியே
இன்றிதுவோர் மாயம்
செம்மொழியே செம்மொழியே
வந்ததென்ன ஞானம்

செம்மொழியே செம்மொழியே
இன்றேற்றார் மூடர்
செம்மொழியே செம்மொழியே
மன்னிப்பாய் தாயே
தெய்வம் மனிதன் கண்டு நெகிழ்ந்திடணும்

எல்லைக் கோடுகள் அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால் அழித்திடணும்
உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமைக் கட்டுகள் அறுந்து விழவேண்டும்

அழியும் அகிலம் தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத் தழுவிடணும்
அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு நெகிழ்ந்திடணும்

வருகின்றேன் தமிழ்த்தாயே

Image
ஒரு கவியரங்க அழைப்பை ஏற்று கவிபாட வரும்போது பாடியது


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய்ச் சென்றவாழ்வை
       இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
       வருகின்றேன் தமிழ்த்தாயே

26 தமிழ் இணையம் 2002

அது ஒரு காலம். நான் தமிழ் உலகம் என்னும் யாகூ மின்னுரையாடல் குழுமத்தில் இருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளேயே இட்டுக்கொண்டிருப்பேன். என்னைத் தன் ஆஸ்தான கவி என்று அறிவிக்கும் அளவிற்கு என் கவிதைகள் அங்கே ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன.

அப்போதுதன் தமிழிணையம் 2002ன் மாநாடு கலிபோர்னியாவில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதன் முக்கியத் தலைவராக மணி மு மணிவண்ணன் இருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்கு அப்போதே இருந்தது.

தமிழ் உலகத்தின் மட்டுறுத்துனர்களுள் ஒருவரான அமெரிக்கா ஆல்பர்ட் என்னைத் தொடர்பு கொண்டு, கவிஞரே தமிழிணையம் மாநாட்டின் நூல் ஒன்று வெளியிடுவார்கள். நீங்கள் ஒரு கவிதை எழுதினால் என்ன என்றார். என் தமிழ்ப் பற்றையும் கவிப்பற்றையும் அவர் நன்கறிவார்.

எனக்கு ஓரளவே தமிழிணையம் பற்றித் தெரியும் என்பதால் முதலில் தயங்கினேன் பின் ஒவ்வொரு பத்தியாக எழுதத் தொடங்கினேன். ஒரு நான்கு பத்திகளை எழுதிக் கொடுத்தேன்.  ஆனால் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவின் ஆசையோ அதைவிட அதிகமாக இருந்தது.

கவிஞரே மிக நன்றாக வந்திருக்கிறது இன்னும் சில பத்திகள் எழுதுங்களேன் என்று ஊக்கப்படுத்தினார். நான் பெரும்பாலும் அந்த வகையில் கவிதைகள் எழுதுவத…
கள்ளம் புகா
மொழி எங்கள் தமிழ் மொழி
கோணக் கிரந்தமே
கள்ளம் புக உனக்கிங்கே ஏது வழி

வெள்ளம் வந்து
தின்றபின்னும் வாழும் மொழி
நெடுங்காலம்
வடக்குமொழி வாய்விழுந்தும் எழுந்த மொழி

இல்லை என்ற நிலை
என்றும் இல்லா மொழி
இமயத்தில்
ஏறி நின்று வானம் தொட்ட எங்கள் மொழி

சொல்வழக்கு அற்றதுன்
செத்த மொழி
பேய்வாலைச்
சுருட்டிக்கொண்டு ஓடு சுடு காட்டு வழி
ஔவைத் தமிழன்

மாறிப்போன தமிழரின் பண்பினால் நொந்துபோன நண்பர் ஒருவர் என்னிடம் ”கவிஞரே, தமிழர் பண்புகள் என்பன யாவை? ஒன்று இரண்டு என்று அவற்றை வரிசைப்படுத்தி பாடுக.” என்றார். அவரின் அங்கதம் என்னையும் தொற்றிக்கொள்ள, உடனே இப்படி எழுதினேன்.


ஒன்றானவன்
எதிலும் ஒன்றானவன்

ஒன்றுமற்ற பேச்சினிலோ
இருண்டானவன்

முறையற்ற குறைவாயை
மூடானவன்

என்றும்
இனிய சொல்லேதும் சொல்ல
நான்காணான் அவன்

ஆயுளுக்கும் மனம் புழுங்கி
அவிந்தானவன்

அவிந்து
அடுத்தோரைத் தூற்றுவதில்
ஆறான் அவன்

எங்கெதிலும் நிறைகாண
ஏழான் அவன்

எட்டி
உயரத்துப் பண்பெதையும்
எட்டான் அவன்

நரகத்து அவலங்கள்
உண்பதானவன்

மறந்தும்
இதயத்தில் நியாய தர்மம்
பற்றான் அவன்


நண்பரே இப்படியெல்லாம் எழுதிவிடுவேன் என்றுதானே என்னை உசுப்பிவிட்டீர்கள். நான் இப்படியெல்லாம் எழுதமாட்டேனாக்கும், நான் எப்போதும் தமிழர்களைப் பாராட்டி வாழ்த்தவே செய்வேன் :)

அன்புடன் புகாரி