Posts

Showing posts from August, 2014
சத்தியம் அசத்தியம்
இரண்டுக்கும் இடையில்
புதிதல்ல போராட்டம்

அறிவை துணிச்சலை
யாசித்தே சத்தியம்

தங்கமுலாப் பொய்களால்
சத்தியத்தின் சங்கறுத்தே
அசத்தியம்

ஆயிரத்து நானூற்று
முப்பத்தைந்து ஆண்டுகளும்
நழுவியே போனால்தான்
என்ன

சத்திய நூல்தானே
நிலைக்கும்

இதோ
அறிவும் துணிச்சலும்
ஐந்தாம் வயதினிலேயே
அதுதான்
புதிய தலைமுறை

சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக
அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்
(குர்-ஆன் 17:81)

அழிக்கவொண்ணாத் தமிழின்பம்

#தமிழ்

இதோ இன்னும் ஒரு சொல்லடுக்கு.

இப்படியான சொல்லடுக்குகளை மேடைகளில் உதிர்க்கும்போது, பொன்னுதிர்வதைப் போல் புன்னகைகள் உதிர்வதைக் காண்கிறேன்.

இழக்க வேண்டுமா என்ன அழிக்கவொண்ணா இத்தமிழ் இன்பத்தை?


கண்ணேறிக் கருத்தேறிக்
        கற்பனைத்தேர் கவிகளேறி
எண்ணேறி எழுத்தேறி
        ஏட்டுத்தேன் கூடுகளேறி
சொல்லேறிச் சுவையேறி
        சொல்லழகுச் சொர்க்கமேறி
எந்நாளும் நீந்துகின்றேன்
         காதல் தமிழ்க் கடலேறி

மேடையேற்றும் தமிழ்

மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.

மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.

செவிப்புலனைச் சிலிர்க்க வைக்கும் சிறப்பு மொழி தமிழ்தான். ஏன்? தமிழன் சங்ககாலம்தொட்டு அதற்கு முன்னும்கூட சொற்களின் சுவைபார்த்துக் கோத்தெடுத்த கவிதைகளையே நேசித்தான். எதுகை என்றும் மோனை என்றும் …

Kill the unbelievers wherever you find them

இசுலாம் தொடர்பான தங்கள் பதிவுகளை ஏற்கனவே பார்த்துள்ளேன்,

( “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191

“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
...
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85)

-இலங்கை நேசன் இலங்கை

இப்படி ஒரு கருத்தை சென்னையே சிறந்த நகரம் என்று நான் இட்ட ஏற்றுமடலுக்குக் கருத்திடல் பகுதியில் திரு இலங்கை நேசன் எழுதி இருக்கிறார்.

இதற்கான மறுமொழியை நான் இங்கே எழுத இருக்கிறேன். உண்மையறியாது அவர் ’இடையில் வாசித்து’ குழம்பியிருக்கும் ஒன்றைத் தெளிவு படுத்த வருகிறேன்.

பணிச்சுமை காரணமாக நான் சொட்டுச் சொட்டாய் கொட்டும் அருவையாகவே இருக்க முடியும். அதை மட்டும் அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் அத்தனையையும் கொட்டி முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இஸ்லாம் இஸ்லாமியர்களாலேயே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மார்க்கம். மாற்று மதச் சகோதரர்கள் பிழையாகப் புரிந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

”சகோதரனின்…

4 முகநூல் முத்தங்கள்

பத்துவிரல் நர்த்தனங்கள் பரந்தவெளிக் கணித்திரையில்
ஒத்தமனம் தேடித்தேடி ஓய்ந்திடாத கணிமொழிகள்
முத்தமென்றே ஆனதன்றோ முகநூலின் ’லைக்’-மின்னல்
எத்தனைதான் குவிந்தாலும்
ஏங்குமனம் தூங்குதுண்டோ


ராசமல்லிப் பூவொன்று
ரகசியமாய் வந்து நின்று
வாசமுடன் பூத்ததென்னவோ - பின்
வாடிமுகம் மறைத்ததென்னவோ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கூட்டமாய் ஓநாய்கள்
நடுவினில்
ஒற்றை ஆட்டுக்குட்டி

வதைகளை நேசிப்பதும்
வதைகளை உருவாக்குவதுமாய் கேடுகெட்ட உலகம்
தர்மம் மீட்க அரசியலே தீர்வு
ஆனால் அந்த அரசியலோ அறத்தை  அடியோடு எரித்துவிட்டு ஊழல் கூண்டில்  கைதியாகிக் கிடக்கிறது
மக்கள்
மாறாமல் எதுவுமே மாறாது
கண்ணைக் குத்தும்  கடவுள்
நேரில் வராமல் வேறு வழி ஏதும் உண்டா

7 ஆகஸ்ட் 15

சுதந்திரமாக
இன்று
என்ன செய்யலாம்
என்று கேட்டு
என் மனைவியின்
உத்தரவிற்காகக்
காத்திருக்கிறேன்

5 பெருமைகொள் இந்தியா

பெருமைகொள் இந்தியனே

இந்தியா... 31 மாநிலங்கள் 1618 மொழிகள் 6400 சாதிகள் ... 6 மதங்கள் 6 இனங்கள் 29 பெரிய திருவிழாக்கள்
நிலப்பரப்பால் ஏழாவது மிகப்பெரிய நாடு
மக்கள் தொலையால் இரண்டாவது மிகப்பெரிய நாடு
மக்கள் தொகை அதிகம் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு
எத்தனை எத்தனையோ கற்கள் எறியப்பட்டும் இன்னும் இந்தத் தேன்கூடு எப்படித்தான் ஒட்டியே இருக்கிறது என்பதே உலகின் மிகப் பெரிய அதிசயம்
15

இறைவன் இறைவன்
என்று கதறுகிறாய்

சொர்க்கம் சொர்க்கம்
என்று அலைகிறாய்

மரணத்திற்கு முன்
மகத்தான வாழ்க்கை இருக்கிறது
என்று தெரியுமா உனக்கு

சின்னஞ்சிறு
போலி வட்டத்துக்குள்
பொழுதுக்கும் அடைந்து

அதனுள்ளும்
மொட்டையாய் நின்று

உன் நாட்களையும்
உன்னோடு ஒட்டியவர்
நாட்களையும்

கற்பனைகளற்றதாய்க்
கட்டாந் தரையாய்
ரசனைகள் அற்றதாய்
ரத்தம் சுண்டியதாய்
ஆக்கிக்கொண்டால்

இறைவனை நீ
நம்ப மறுக்கிறாய்
என்று தெரியுமா உனக்கு

உன்னை நீயே
கொல்லத் துடிக்கிறாய்
புரியுமா உனக்கு

5

அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்கள்
கனடாவில் உள்ளவர்கள் கனடியர்கள்
இந்துஸ்தானில் உள்ளவர்கள் இந்துக்கள்

ஆகா அபாரம்

முதல் இரண்டு வரியில்
ஒரு நாட்டின் குடிமகனை அழைந்த
மோகன் பகவத்
மூன்றாவது வரியில்
மதத்துக்குள் குதித்துவிட்டார்

அப்டீன்னா
நேபாளத்துல இருக்கிற
இந்துக்கள் இந்துக்கள் இல்லியா

இந்தியர்கள்
பல கலாச்சாரம்
பல மொழி
பல மதம்
என்று பரந்துபட்டவர்கள்

என்றைக்குமே
அவர்கள்
ஒரே நிறத்தில் இருந்ததில்லை
ஆனால்
அத்தனை வர்ணமும் ஒன்றுசேர்ந்து
வாணவில்லாய்
ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள்

வேற்றுமையில் ஒற்றுமையை
வேறு எந்த நாட்டிலடா
இப்படி நீ காண்பாய்

அரசியலுக்காக பிணம் கேட்கும் நீ
ஓடிப்போ சுடுக்காட்டுக்கு

ஒன்று எரிந்தால் போதும்
ஊர்ப் பிணங்கள்
மாநிலப்பிணங்கள்
நாட்டுப்பிணங்கள்
ஏதும் எரியவேண்டாம்

7 பற்றும் பகுப்பும் பிழையே இல்லை

பற்றும் பகுப்பும் பிழையே இல்லை
இனப்பற்று பிழையா? இல்லை
கருப்பு வெள்ளை பகுப்பு பிழையா?
இல்லவே இல்லை
ஆனாலோ பற்றும் பகுப்பும் எவ்வகையிலேனும்...
ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொண்டால் அது பிழை
தீண்டாமையைத் தூண்டிவிட்டால் அது பிழை
வன்முறையை வழிமொழிந்தால் அது பிழை
அச்சமற்ற நிலையே
நட்பின் அடித்தளம்

இத்தாலி, இட்டாலி, இட்லி எது சரி?

நான் பாடநூலில் இத்தாலி (Iththaaly) என்றே பயின்றேன் அப்படியே பயன்படுத்தவும் செய்தேன்.

பின் இடாலி Italy என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைக் கண்டேன். ஆங்கிலத்தில் உரையாடும்போது இத்தாலி என்று சொல்லிவிடாமல் கவனமாக இடாலி என்று பயன்படுத்தினேன்.

பின் கனடா வந்தேன் வட அமெரிக்க உச்சரிப்பைக் கேட்டேன். அமெரிக்கர்கள் இட்லி என்றார்கள். சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

இத்தாலியை
இட்லி என்றால்
இட்லியை
என்ற வென்று அழைப்பது?

Iththaaly
Italy
Itly

இதில் எதுதான் சரி? எப்படித்தான் சரியானது எது என்பதைக் கண்டுபிடிப்பது?

கடந்த வாரம் நான் இட்டாலி நாட்டுக்கே சென்றேன். அந்த மக்களோடு உரையாடினேன். அவர்களிடன் கேட்டேன், உங்கள் நாட்டின் பெயர்தான் என்ன என்று.

இட்டாலி, இட்டாலியா என்றார்கள்.

அவர்கள் நாட்டை அவர்கள் உச்சரிப்பதுபோலவே உச்சரிக்க என் தமிழால் இயலாதா என்று நினைத்தேன்.

ஏன் இயலாது?

இட்டாலி என்றுதான் இனி நான் அழைப்பதாய் முடிவு செய்தேன்.

தமிழால் எதுவும் முடியும் அது எப்படியும் வளையும்!
Image
முகநூலில் முதல்நாளே வந்த ஒரு வாழ்த்து...

முதுமை தீபத்தின் கால்களில்

முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...

அந்தப் பாசத்துக்கு
யார் சொல்லித்தருவார்

கண்களில்
காட்சிகளைக் கோத்துவைத்து
பொழுதுக்கும்
பழைய நினைவுகளையே
கனவுகளாய்ப் பார்த்துக்கொண்டு
படுத்துக்கிடக்கும்...

இயற்கையின் நியதியில்
இளைப்பாறிக்கொண்டிருக்கும்

அந்த அழகிய
முதுமையைக் கண்டு...

அஞ்சி
அறற்றி

அமைதி பாடும் முதுமைக்கு
அன்பு தேடும் முதுமைக்கு
பரிவு நாடும் முதுமைக்கு

அச்சம் தந்து
பதட்டம் தந்து
தன்னிரக்கம் தந்து

இருந்து
சங்கடப் படுத்துகிறோமோ
என்ற குற்ற உணர்வு தந்து

அலையலையாய் தவழ்ந்து
அழகுகாட்டும்
அந்த முதிய தீபத்தை
அற்பாயுளில் அணைத்துவிடாதே
என்று

நரம்பு நதிகளோடும்
கைகளைப் பற்றிக்கொண்டு
நாவின் தமிழ்க் கரங்களால்

உயர் நம்பிக்கையை
உறவு நட்பை
உள்ள நனைப்பை
தந்து தந்து
இனியும் பல்லாண்டு
வாழட்டும்
வாழவிடு
என்று

03 சிவிட்டவேக்கியா, இட்டாலி - Civitavecchia, Italy

Image
இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

என்பதற்கான பொருளை முகநூலில் நண்பர் @Raphel Canada கமுக்கமாகக் கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

பயணம் முடிவானதும், ட்ரான்சாட் என்ற விமானம் மூலம் டொராண்டோவிலிருந்து ரோம் - இட்டாலி செல்கிறோம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவருக்கு ஒரே உற்சாகம். அப்புறம்? என்றார்.

அங்கே Civitavecchia என்ற துறைமுகத்துக்குச் சென்றால் நமக்கான உல்லாச சொகுசு கப்பல் காத்திருக்கும் என்றேன். இதென்னங்க எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட முடியல, இதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றார்.

அது ரொம்ப சுலபம். Civitta ஸ்வீட்ட vecchia வெச்சியா என்று முதலில் பிரித்துக்கொள். ஸ்வீட்ட வெச்சியா என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டால், பின் சிவிட்டவேக்கியா என்பது தானே வந்துவிடும் என்றேன். அப்போதிருந்து ஸ்வீட்ட வெச்சியா ஸ்வீட்ட வெச்சியா என்று ஒரே மகிழ்ச்சி மனைவிக்கு.

பயணம் முடிந்ததும் மனைவியிடம் கேட்டேன், ஸ்வீட்ட வெச்சியா? எங்கே வெச்சே? என்று. நெஞ்சுக்குள்ள வெச்சேன் நெனப்புக்குள்ள வெச்சேன் பத்திரமாய்ப் பலகாலம் நிச்சயமா இருக்கும் நன்றி நன்றி என்றார்.

ஆம் இந்த உல்லாச சொகுசு கப்பல் பயணம் எங்கள் …

கருணையே கொள்வோம்

இசை நிகழ்ச்சி, நடனம், சிறப்பு விருந்து போன்ற உல்லாச நிகழ்ச்சிகளை அப்படியே தொண்டு நிகழ்ச்சியாக மாற்றுவது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

ஒரு டாலரை ஏழைக்குழந்தைகளுக்காக வழங்க விருப்பமா என்று கேட்பார்கள். கனடாவில் இதுபோல நிறைய நிகழும். இதையே ஊரிலும் கொண்டுவரவேண்டும்.

தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவர்களை ஒரு ரூபாய் அதிகம் தருகிறீர்களா என்று கேட்கவேண்டும். வால்மார்ட்டில் தயக்கமின்றி கேட்பார்கள். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்

உலகைக் கருணையுடையதாய் மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

பசி கொல்வோம்
ஏழ்மை கொல்வோம்
வன்முறை கொல்வோம்
கருணையே கொள்வோம்

02 இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா

Image
படம்: சொகுசு கப்பலில் எங்கள் அறையின் பால்கனி வழியாக முதன் முதலில் எடுத்த படம் இதுதான்
*
பயணத்தில் ஸ்வீட்ட வெச்சியா
பாதையில் ஸ்வீட்ட வெச்சியா
இருக்கையில் ஸ்வீட்ட வெச்சியா
இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா
இனிக்கின்றதே இன்னமும்
எம்எஸ்சி மியூசிகா

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுத நேரம் இல்லாமல் இருப்பதால் நானே எழுதுவதாக முடிவெடுத்துவிட்டேன் ;-)

எங்களுக்குத் திருமணம் ஆனதிலிருந்து நானும் என் மனைவியும் ஒரு தேன்நிலாவைக் கண்டதே இல்லை.

சவுதியிலிருந்து உறவுகளின்மீதுள்ள தாகத்தோடு ஊர் சென்றதால் உறவுகளோடு உறவாடிக்கிடப்பதையே விரும்புவோம். தனியே எங்கும் சென்று தேன் நிலவு என்று சில தினங்களை அனுபவித்ததே இல்லை. ஆகவே இதுதான் முதன் முறை. நானும் என் மனைவியும் ஒரு உல்லாச சொகுசு கப்பலில் எங்களின் தேன்நிலவை வைத்துக்கொண்டது ;-)

இனி ஒவ்வொரு வருடமும் தேன் நிலவுதான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டோம்.

எங்களுக்குத் திருமணம் ஆனதும் நாங்கள் என் மாமனார் பணியாற்றிய காடம்பாறை சென்றோம். அது ஒரு அருமையான மலையும் மலை சார்ந்த இடமும். அதுதான் எங்களின் தேன்நிலவு என்று சொல்ல வேண்டும் என்ற…

01 இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

Image
இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நான் ஒரு கணிஞன். கணினியில் நிரலிகள் எழுதும் துறையில் உயர் ஆலோசகனாக கனடாவில் வேலை செய்கிறேன். Senior Consultant DW/BI/SQL. எனக்கு இன்றைய நாட்களில் நிரந்தரம் என்று சொல்லப்படும் வேலையில் விருப்பம் இல்லை. அதை மறுதளித்து ஒப்பந்தப் பணிகளையே ஏற்றுக்கொள்வேன். அதில் பலன்கள் அதிகம் என்பதலால். ஆனால் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துவிட்டு ஓய்வுக்காக தவமிருக்கவும் நேரமில்லாமல் வேலையில் மூழ்கிக் கிடப்பேன்.


Equal Opportunity, Hire and Fire என்றெல்லாம் சொல்லப்படும் சம வேலை வாய்ப்புகள், எடு-விடு கொள்கைகளைக் கொண்ட வட அமெரிக்க பணிக் கொள்கையில் நிரந்தரப் பணி என்பது நிரந்தரம் அல்ல. நம்மை எப்போது வெளியேற்றுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஒப்பந்தப் பணி என்றால் நமக்கு ஒரு வசதி உண்டு. எப்போது ஒப்பந்தம் முடியும் என்று முன்பே தெரியும். ஆனால் ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கணினித் துறையில் இருந்தால் வாய்ப்…
நட்பு பதிந்த முகங்களில்
ஞாபகங்கள் ஓய்வதே இல்லை

நீர்ப்பறவையின் முத்தக்கிடங்கினில்

ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது

அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்

அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்

அடடா
அந்தச் சொர்க்கத்தின்
முத்தக் கிடங்கில்
நான்
சுதந்திரமாகச்
சிக்கிக்கொண்டேன்

ஓர்
அற்புதக் கனவின்
நம்பமுடியா
விசித்திரங்களாக விரிந்த
வேற்றுக்கோள் உலகத்துள்
மெல்ல மெல்ல நுழைந்தேன்

சரிந்தேனா பறந்தேனா
விழுந்தேனா நனைந்தேனா
நடந்தேனா கிடந்தேனா
ஏதும் அறியேன்

கட்டுகளிடா
விடுதலை இலக்கியத்துள்
கட்டமுற்படும்
இலக்கணக் கயிறுகளை
வெட்டியெறிந்த ஏற்றத்தில்
சறுக்கியே சென்றேன்

பொற்கனவின்
பூமடிகளில்
மழலையாய்க்
கிடந்தேன்

பின்
கண்விழித்தேன்


விழித்தேனா

விழித்தேன்
என்பதே
தெரியாமல் விழித்தேன்

ஆம்
அப்படித்தான் நினைகிறேன்

அதுவன்றி
உண்மை ஏதென அறிய
நான்தான் இன்னமும்
அதனிடமிருந்து
மீளவே இல்லையே?

இப்போதும்
நான்
எதை எழுதுவது
எப்படி எழுதுவது என்றே
அறியாமல் விழிக்கிறேன்
விழி கிழிகிறேன்