Posts

Showing posts from February, 2016
‪#‎தமிழ்முஸ்லிம்‬ கருசமணி - கருகமணி - தாலி தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும் தாலியை கருசமணி அல்லது கருகமணி என்றுதான் சொல்வார்கள், தாலி என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இன்றெல்லாம் முஸ்லிம்பெண்கள் கருசமணி அணிவதில்லை. இந்துக்களுக்கு இருப்பதைப்போல முஸ்லிம் பெண்களுக்குத் திருமணத்தின்போது கருசமணி கட்டுவது என்பது மதக்கட்டாயம் அல்ல. இது மாற்றுமதக் கலாச்சாரம் என்பதால் கட்டுவது கூடாது என்று சொல்லும் வகாபியம் ஒரு புறமும், கட்டுவது கட்டாயம் இல்லை, கட்டினால் பிழையும் இல்லை, ஏனெனில் இது மதச்சடங்காய் முஸ்லிம் பெண்களுக்குக் கட்டப்படுவதில்லை உலக வழக்காகக் கட்டப்படுகிறது திருமணமான பெண் என்ற அடையாளமாகக் கட்டப்படுகிறது என்று சொல்லும் மிதவாதம் இன்னொருபுறமும் உண்டு. ஆனாலும் இன்றெல்லாம் இந்துப் பெண்களே தாலியைத் துறந்துவிட்டார்கள், அல்லது முன்புபோல முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் சாலினி தாலியைக் கழற்றி காலண்டரோடு மாட்டிவிட்டு உறங்கச் செல்வார். நான் திருமணம் ஆன புதிது. மனைவிக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை வந்தது. நான் என் மனைவி மற்றும் கடைசித் தம்பி…

கல்யாணமாம் கல்யாணம்

Image
‪#‎தமிழ்முஸ்லிம்‬ தமிழ்முஸ்லிம் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? நண்பராய் இருந்து நடப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா?
*
ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார் 
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இ…
‪#‎தமிழ்முஸ்லிம்‬ கைலி - கையலி - லுங்கி - சாரம் நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன். கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு. ”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. இணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன. 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது. கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இ…
சொத்தின் பற்றில் 
உறவுகளை 
அறுத்துக்கொள்வதைவிட

உறவின் பற்றில்
சொத்துக்களை 
அறுத்துக்கொள்வது
எவ்வளவோ மேல்

அன்புடன் புகாரி
20160226
புராதனக் கோட்டை

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

காற்றுச் சிறகுகளில்
குரல்களின் ஊர்வலங்கள்
வானொலியின் வசீகரத் தேனலைகள்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
சமைக்கும்போதும் மட்டுமின்றி
படுத்துக்கிடக்கும்போதும்
காதுகளைக்
கட்டி இழுத்துக்கொண்டுபோக
வழியற்று கூடவே
கண்களும்
என்றோ புறப்பட்டுவிட்டன

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

ஆசைகளை அறைத்தள்ளி
வெறியேற்றி வீசியாடும்
ஆயிரத்தெட்டு வீடியோ பூதங்களும்
ரிமோட் எனும் அலாவுதீன் விளக்கும்
வண்ணவண்ணமாய் வழிய வழிய
பெண்ணழகு மண்ணழகு பொன்னழகு
மயக்கிச் சாகடிக்கும் காட்சியழகில்
அகலாத விழிகளாகிப்போக

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

எதைக்கேட்டாலும்
ஏழாயிரம் திசைகள் முட்டி
எழுபதாயிரம் இடுகைகள் காட்டி
எழ முடியாமல்
இழுத்து வைத்திருக்கும்
இணைய முற்றம்

இனி என்னதான் மிச்சம்
நேரம் நெஞ்சம் நல்லநூல்
ஒன்றாவது தட்டுப்பட வேண்டாமா

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

கிராம மூதாட்டிகளின் காதில்
கனமாககத் தொங்கிக்கொண்டிருந்த
#தமிழ்முஸ்லிம்

திரு அப்துல்காதர் vs ஜனாப் அப்துல்காதர்

தமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

மிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் …
#தமிழ்முஸ்லிம்

குழம்பு - ஆணம் - சால்னா

தஞ்சாவூர் முஸ்லிம் வீடுகள் பலவற்றிலும் குழம்பு என்று சொல்லமாட்டார்கள். ஆணம் என்றுதான் சொல்வார்கள்.


பருப்பாணம் - சாம்பார்

புளியாணம் - ரசம்

மீனாணம் - மீன் குழம்பு

கறியாணம் - கறிக்குழம்பு


ஆணம் என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் முஸ்லிம் வீடுகளில் இப்படியான பல பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.


குழம்பு என்பது பெரும்பாலும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மூலிகைகளை அறைத்துக் கலக்கிக் குழம்பாக்கி புண்களில் இடுவார்கள்.


அகத்தியர்குழம்பு என்றால் ஒருவகை பேதிமருந்து. இளநீர்க்குழம்பு என்றால் இளநீரால் செய்யப்படும் கண்மருந்து. இப்படியாய் ஏகப்பட்ட குழம்புகள் தமிழ் மருத்துவத்தில் உண்டு.


மட்டுமல்லாமல் குழம்பு என்பதற்கு குழம்பிப்போதல் பைத்தியமாதல் என்ற பொருளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. குழம்பிவிட்டான். குட்டையைக் குழப்பாதே. குழப்பக்காரன்.


ஆணம் என்றால் என்னடா என்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த நண்பன் கேட்டான். நீ குழம்பாதே அது குழம்பு என்று சொன்னேன் wink emoticon


சால்னா என்று உருது நண்பர்களைக் கொண்ட சில முஸ்லிம்கள் ஆணத்தைக் கூறுவார்கள்.


இந்த ஆணம்…
Image
மணத்தைத் தழுவும்போது
வரும் நட்பு என்பது
மலரையே தழுவும்போது
காதலாகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
#தமிழ்முஸ்லிம்

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.

எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.

இதில் பாய் எங்கிருந்து வந்தது?

ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.

விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.

என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
’பாய்’ ’பாய்’ என்றா?

இல்லை.

அது தவறாக அழைப்பு.

சரியான அழைப்பு ”சகோ” என்று  இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.

அல்லது அண்ணா தம்பி என்று அழைக்க வேண்டும்.

பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.

உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.

பாய் என்று ஒரு தமிழ் முஸ்லிம் அழைக்கத் தேவையில்லை. அப்படி அழைத்தால் அது அவனைத் தமிழைவிட்ட…
#தமிழ்முஸ்லிம்

அப்பா vs அத்தா / அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

தமிழக முஸ்லிம் வீடுகளில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது.

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.

அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

அத்தா என்பதுதான் பழந்தமிழ்ச் சொல். அப்பா என்பது தமிழுக்குள் சமீபத்தில் வந்த சொல்தான்.


*
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. - தேவாரம்


*
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் - கம்பராமாயணம்.


*
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே - தேவாரம்


*
காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது - கலித்தொகை


*
'அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே;
பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙன…
#தமிழ்முஸ்லிம்

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் ”இடையில்” ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 17 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதா

குட்டியம்மாகுட்டியம்மா என்செல்லக்குட்டியம்மா கட்டியம்மாகட்டியம்மா என்தங்கக்கட்டியம்மா சுட்டியம்மாசுட்டியம்மா என்பவளச்சுட்டியம்மா பொட்டியம்மாபொட்டியம்மா என்வைரப்பொட்டியம்மா
* * * * *

நேற்றைத் துடைத்து
நெருப்பில் இடுக

நேற்றின் படிகளை
நெற்றியில் கொள்க

இன்றை எடுத்து
நாளைகளைக் கட்டுக

கட்டும்போதே
கட்டற்று வாழ்க

அன்புடன் புகாரி
20160221

* * *

உடலறிவாய் மனமே

சொல்லவந்தேன் நான்
எனதேற்றங்களின் இமயத்தையென்று
துள்ளிக்குதித்தது மனம்

நாவில்லாமல் சொல்லா
விழியில்லாமல் பார்வையா
நானில்லாமல் சொல்வதா
மிதக்காதே மனமே என்றது உடல்

என்ன முடியும் உன்னால்
என்னைப்போல்
எண்ண முடியுமா கறியே
என்று தீ திரட்டியது மனம்

உயிர் குறுக்கிட்டு
ஒரு நொடி பொறுப்போமே

சிந்தனை எரித்துச்
சொற்களாய்க் கோத்தெடுத்து
ஓடிவருகிறான் ஒரு கவிஞன்

உற்றுக்கேட்போமே
அவனை என்றது

வாயைக் கழற்றி
வாயில்வழி வீசிவிட்டு
செவியைத் துடைத்து
செறுகிக்கொண்டது சர்ச்சை

கவிஞன் துவங்கினான்
கவிதை சுழன்றது

-o0o-

உடலே உன் முதல் துணை
இறுதிவரை உன்னுடன் வரும்
ஒற்றைத் துணையும் உடலேதான்

அதன் தேவை நிறைவேற்றத்
தவமிருக்கும் சேவகனே மனம்

விருப்பங்களின் ஊற்றும்
வெறுப்புகளின் நாற்றும்
ரசனைகளின் வேரும்
பாசத்தின் கருவும் உடல்

நஞ்சு உடலேறினால்
உனக்குத்தான் நாசம்

மனதிலேற
ஊருக்கே நாசம்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இளமைக்கும் முதுமைக்கும்
உடல் மாற்றமே மனமாற்றம்

எதையும் காணாக் குருடருக்கும்
மனதை உருவாக்குவது உடல்

உணவு உடை உறைவிடம் மட்டுமல்ல
உயிர்கூட உடலின் அவசியம்

சந்ததி விரிவதும் உலகம் துளிர்ப்பதும்
உடலின் அதிசயம்

உட…

சரணமென்றேன் (இசையில் கேட்க)

சந்தம்!

இன்றைய கவிஞர்கள் பலருக்கும் சந்தம் எழுதத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அவர்களுக்கு அது இயல்பாக வருவதில்லை. 

சீத்தலைச் சாத்தனாரைப்போல தலையில் குத்தி ரத்தம் வரவழைப்பதே அதிகம் இருக்கும், சந்தத்தின் இயல்பு நடை மிகக் குறைவாகவே இருக்கும்.

உணர்வுகளோடு பொதிந்து சிந்தனையின் ஓட்டத்தை ஆரம்பம் முதலே சந்தத்தோடு இணைத்துக்கொண்டிருந்தால், சந்தம் மிக மிக எளிமையான அதே சமயம் மிகவும் கவர்ச்சியான ஒரு நடை. 

அதற்காக சந்தத்தில் எழுதினால்தான் அது கவிதை என்று சொல்வது முட்டாள்தனம்.

கவிதையின் இலக்கணம் வாழ்க்கையின் இலக்கணத்தைப்போல மாற்றங்களால் மட்டுமே ஆனது. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முறப்டும்போது சந்திக்கும் அனைத்து ஐயங்களையும் தடுமாற்றங்களையும் கவிதை என்றால் என்ன என்று வரையறுக்க  முற்படும்போதும் சந்திக்க நேரிடும். 

அதுதான் கவிதை.

கவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும் என்பதே கவிதையின் இலக்கணம் என்று பல நேரம் நான் முடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் தப்பிப்பதற்கான ஒரு வழி என்றும் கொள்ளலாம். 

சில கவிஞர்கள் சந்தம் என்ற சொல்லைக் கேட்டதும், எட்டுப்பத்து கிலோமீட்டர் …
Image
நெருப்புமலர்களை ஊதி அணைத்துச் சாம்பலாக்கிவிட்டு கவிஞனை மிதித்து நிற்க விரும்பும் எழுத்தாளனின் ஆசை ஒரு கவிஞனை quarantine ல் உட்காரவைக்கும் முயற்சியில் சற்றும் தளராத உரை கவிஞனும் கவிதைகளும் வீழ்ச்சி பெற்றுவிட்டன என்று நிறுவுவதற்காகவே அதைத் தொடர்ந்து ஆராயும் சுயநலம் உனக்காகக் கவிதை எழுதலாம் உண்மைக் கவிதைகள்
உலகுக்காகக் கவிதை எழுதுகிறேன் என்று எழுதலாம் மன்னிக்கப்படலாம் இதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டு
ஜெயமோகனுக்காகக் கவிதை எழுதலாம்
வளர்ந்தால் பொசுங்கியது என்று விமரிசனம் பெற்று அவரடிக்கீழ் கிடந்துழல!


Touchscreen கவிதைகள் எழுத்தாளர் ஜெயமோகன் - Writer Jeyamohan speech new generation of tamil poetry மாறிவரும் புதியதலைமுறை கவிதை… YOUTUBE.COM

மத நல்லிணக்கமும் மதச் சகிப்பின்மையும்

மத நல்லிணக்கம் என்பது எது?
மதச் சகிப்பின்மை என்பது எது?
என்பதற்கு மிக அருமையான இரு சான்றுகளைக் கண்டேன்.
இருவரும் நல்ல எழுத்தாளர்கள்.
ஒருவர் எப்படி சகோதர மதத்தவரை நோக்குகிறார் இன்னொருவர் எப்படி அதை உமிழ்கிறார் என்று பாருங்கள்.
இருவரின் கட்டுரைகளும் இதோ:
சமஸ்
http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html
ஜெயமோகன்
http://www.jeyamohan.in/84362#.VroliFgrI2w

சமஸ் அவர்களின் கட்டுரை நிறைய விசயங்களில் ஒத்துப் போக வைத்த கட்டுரை என்று எழுதி இருந்தேன். என்றால் எவற்றோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. அல்லது விளக்கம் தேவை என்பதை ஒவ்வொன்றாகக் காண விழைகிறேன்.
>>> உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்? <<<<
நல்ல கேள்வி. வெறி பிடித்தவர்கள் விட்டுவைக்கத்தான் மாட்டார்கள். பாபர் மசூதியை இடித்ததைப் போல, புத்தர் சிலையை உடைத்ததைப் போல.
ஆனால் அதுவல்ல இஸ்லாம். அதுவல்ல இந்துத்துவம். அதுவல்ல கிருத்தவம்.
மதச்சகிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சிவனை வணங்கும் நீயும், சுடலைமாடனை வழிபடும் அவன…
Image
முக்கனிகட்குள்ளும்
முதற் கனியே

கொஞ்சு மஞ்சள்
உதட்டழகுத் தேனே

முள் முக்காட்டுக்குள்
முகம் புதைத்த மதுரமே

தமிழ் மண் வழங்கும்
தங்கச் சொத்தே

பலாவே பல நூறு நிலாவே
வா வா வா வா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்