அறிவியல் தமிழும் புதுச் சொல்லாக்கமும்
-------------------------------------------------------------------
தனியார்ப் பள்ளிகளில் தமிழ் அவசியமில்லையாம் தமிழ்நாட்டில்.
நான் ஊர் சென்றால் காணும் ஏராளமான இளைஞர்களுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரிந்திருக்கிறது. எழுதவும் வாசிக்கவும் தெரியவில்லை.
அவர்கள் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களும் ஒரு நூறைக் கூடத் தாண்டாது.
தமிழில் அவர்கள் ஓர் அறிவியல் கட்டுரையை வாசிக்கக்கூட வேண்டாம், அதை வாசிக்கக் கேட்டால் அவர்களால் ஒரு வார்த்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாய் இல்லை.
தமிழில் மொழிக்கூறுகளை ஊன்றிப் படிக்காவிட்டாலும் அறிவியல் பயிலவாவது அவர்கள் முன்வரவேண்டும். இல்லாமல் தமிழுக்கு வளர்ச்சி உண்டென்று நான் நம்ப மாட்டேன்.
ஆங்கிலத்தில் எனக்கு இலக்கியம் தெரியாது. ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் அறிவியல் கட்டுரைகளையும் வணிக, கணித, சரித்திர, பூகோளக் கட்டுரைகளையும் வாசிப்பதில் ஏதும் சிக்கலே இல்லை.
ஆனால் சில தமிழ் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினால், தங்குதடை இல்லாமல் வாசிப்பது இயலாததாக இருக்கிறது
சொல்லாய்வின் பல சொற்கள் நல்லவைதான் ஆனால் அவை தமிழறிஞர்களால் மட்டுமே உச்சரிக்கவும் மனனம் செய்யவும் ஏற்றதாக இருக்கின்றன.
அவ்வகைச் சொற்கள் இலக்கிய உலகில் அவசியமானவைதான். ஆனால் அறிவியல், கணிதம், வணிகம் போன்றவற்றின் துரித வளர்ச்சி உலகில் அவை தடையாகவே உள்ளன என்பதை மறுக்க முடியுமா?
அன்புடன் புகாரி
Random Numbers தமிழில் என்ன?
ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்காமல், ஏதும் சிந்தனையை மேற்கொள்ளாமல், எந்தத் திட்டமும் தீட்டாமல், செய்யும் ஒரு செயலுக்கு கிராமத்தில் ”குருட்டாம்போக்கில்” என்று சொல்வார்கள்
குருட்டாம்போக்கு எண்கள்
குருட்டுவழி எண்கள்
ran·dom
/ˈrandəm/Submit
adjective
1.
made, done, happening, or chosen without method or conscious decision.
"a random sample of 100 households"
synonyms: unsystematic, unmethodical, arbitrary, unplanned, undirected, casual, indiscriminate, nonspecific, haphazard, stray, erratic; More
சொல்லாய்வில் ஒவ்வொருவருக்குக் ஒவ்வொரு வழி இருப்பதைக் காண்கிறேன். நான் இதுவரை கிராமப் புறங்களில் அந்தக் காலத்தில் மேற்கொண்ட உரையாடல்களிலிருந்து எடுக்கப் பார்ப்பேன்.
கவிஞர் புகாரி
Percentage - விழுக்காடு என்பது சரியா?
நான் எப்போதுமே ஒரு சொல்லாக்கம் என்று வரும்போது, எங்கள் கிராமத்தில், தாத்தா பாட்டி பேச்சு வழக்கில் என்ன பயன்படுத்தப்பட்டது என்று ஞாபகப் படுத்தப் பார்ப்பேன் முதலில்.
போட்ட முதலில் கால்வாசி தேறினாலே பெருசு
முக்கால்வாசி
காலேஅரைக்காவாசி
கொடுத்த கடன்ல நூத்துக்குப் பத்தாவது கிடைக்குமா?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்
நூற்றுக்கு அறுபது
Percentage, சதம், விழுக்காடு என்று எதையுமே பயன்படுத்தாமல்தான் பேசி வந்திருக்கிறார்கள். பொருள் சரியாகத்தான் வந்திருக்கிறது.
முக்கால்வாசி கால்வாசி அரைவாசி என்பதெல்லாம் 98வாசி என்று பயன்படுத்தத் தகுதியானவையா என்று தெரியவில்லை
பத்துவாசி என்றோ இருபதுவாசி என்றோ எவரும் என்றும் சொன்னதில்லை
பதிலாக
நூத்துக்கு நூறு, நூத்துக்கு எட்டு என்று பேசி இருக்கிறார்கள்
இனி விழுக்காடு பற்றி சிந்தித்தால், ஒரு புதிய சொல்லை ஆங்கிலத்தின் Percent போல பயன்படுத்த முயல்கிறோம். அறிமுகம் செய்கிறோம்.
விழுக்காடு என்பது நூற்றுக்கு எத்தனை என்பதைத்தான் சொல்கிறது.
பத்துக்கு எத்தனை என்று எப்படிச் சொல்வது?
அன்று கிராமத்தில், பத்துக்குப் பத்தும் தேறும் என்றார்கள். (அதாவது நூறு விழுக்காடு)
பத்துக்கு ஏழு தேறினால் பெரிது என்றார்கள். (70 விழுக்காடு)
இப்படியே பத்துக்கு ஐந்துக்கு ஐம்பதிற்கு என்று எல்லாவற்றுக்கும் பயன்படும் சொல் ஒன்று உண்டா?
நாம் ஆங்கில முறைப்படி நூறோடு மட்டுமே ஒப்பிட்டுச் சொல்வோம்.
ஆனால்,
கிராமத்தில் வெகு இயல்பாக எல்லாவற்றுக்கும் சொல்லிச் செல்வார்கள்.
குழப்பம் வந்ததே இல்லை
அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி
மதங்கள் நாடுமுழுவதும்
தாராளமாக இருக்கலாம்

மதவெறி 
நாட்டை ஆள்வதாக மட்டும் 
இருக்கவே கூடாது
பேசப்படாத எதுவும்
விவரிக்கப்படாதுவிவரிக்கப்படாத எதுவும்
விளங்கப்படாதுவிளங்கப்படாத எதுவும்
உணரப்படாதுஉணரப்படாத எதுவும்
உருப்படாது


கவிஞர் புகாரி
பணவேட்டைக்கு
மனிதவேட்டை
ஆடும்
ஆட்டத்திற்குப்
பெயர்தான்


மக்களாட்சி
பெருவணிகம்
உயர்மருத்துவம்
காவலர்படை
கல்விநிறுவனம்

வேறு ஏதேனும்
விட்டுவிட்டேனா

ஊருக்குப் போய்
நாளாகிறது

கவிஞர் புகாரி

கஜா புயல்

காவிரி நீரை நிறுத்திவிடுவோம், மீத்தேன் ஹைரோ கார்பன் எடுப்போம், ஸ்டெர்லைட் பாக்டரிகள் வளர்ப்போம், நெல்லை விட்டு தென்னைக்குப் போங்கள் என்று பரிந்துரைப்போம், பின் புயல் நிவாரணமும் சரியாக வழங்கமாட்டோம்.
ஒழியட்டும் விவசாயிகள்.
கார்ப்பரேட்டுகள் வெகு ஜோராக ஆளும்போது விவசாயிகள் படு மோசமாகச் சாகத்தானே வேண்டும்.
பசுமை செத்து காங்கிரீட்டுகள் முளைக்கத்தானே வேண்டும்?
இன்று சிக்கன் என்பது உண்மையான சிக்கனா?
இன்று கத்திரிக்காய் என்பது உண்மையான கத்திரிக்காயா?
இன்று நம் வாழ்க்கை என்பது நூறு வருடம்முன் வாழ்ந்தவர்களின் இயற்கையான வாழ்வா?
கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நான் பலமாடிக்கட்டிடத்தில் கரண்சி நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தால் என்னை எந்தப் புயலும் பாதிக்காது என்ற நினைப்பு சாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
கவிஞர் புகாரி
இந்தியாவில் ஒரு வருடம் செய்த ஊழலில் இருந்து 1% எடுத்துக்கொடுத்தால்
அல்லது
தமிழ்நாட்டில் ஒரு வருடம் செய்த ஊழலில் இருந்து 10% எடுத்துக் கொடுத்தால்
கஜா புயல் மிதித்துப் போட்ட டெல்டா பகுதி மீண்டும் சொர்க்க பூமியாகும்
அன்புடன் புகாரி

முகநூலும் நானும்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை


புது நட்புப் பூக்கள்
தினம் தினம்
மொட்டுடைத்துப் பூக்கின்றன
ஆனால் நான்
அப்படியானதொரு குறிக்கோளில்
முகநூலில் இல்லை

உறவுகள் வந்து
உற்சாகமாய் லைக் போடுகின்றன
ஆனால் நான் அதற்காகவும்
முகநூலில் இல்லை

நண்பர்கள் உறவுகள்
நன்கறிந்தவர்
சற்றே அறிமுகமானவர்
மறந்தே போனவர்
யாரென்றே தெரியாதவர்
என்று இன்று
5000 நண்பர்கள் இருக்கிறார்கள்
அதற்குமேலும் வருகிறார்
முகநூல்தான் 5000+ ஐ
ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர
நான் ஏற்கிறேன்

ஏனெனில்
என் இதயம் அப்படியே
விரிந்து பரந்தது
இந்தப் பிரபஞ்சத்திற்கும்
பெரியதாக

இந்த 5000+ ஐ அடையும்
லட்சியத்திலும் நான்
முகநூலில் இல்லை

பிறகு
ஏன் இருக்கிறேன்
நான் முகநூலில்?

என் கவிதைகள்
தென்றலாய் உலவ
ஒரு மன்றம் வேண்டும்
புயலாய் வீச
ஒரு கரை வேண்டும்

என் தென்றலின் தீண்டலை
என் புயலின் சீற்றத்தை
என் கருத்தின் புதுமையை
என் கவிநயத்தின் அழகை
ரசிக்கும் நண்பர்கள்
ரசித்ததைச் சிலாகித்து
*மறவாமல்
மறுமொழி இடவேண்டும் *

என் கவிதைகளின்
ஆணிவேர்வரைத்
துளைத்துச் சென்று
கண்ட சுகங்களையும்
கடும் விமரிசனங்களையும்
இணையான விருப்பத்தில்
இன்றே இப்பொழுதே
அள்ளித் தரவேண்டும்

நாலு லைக் வந்தாலும்
போதும்
அட அதுவும் இல்லாவிட்டாலும்
போதும் போதும்

ஆனால்
ஒவ்வொரு லைக்கும்
உண்மையின் கர்ப்பத்தில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

லைக்கைவிடப் பன்மடங்கு
நான் லைக்பண்ணுவது
வந்து விழும் உங்கள்
மறுமொழிகளைத்தான் என்பதை
என் முகநூல் நட்புகள்
அன்போடு
அறிந்து வைத்திருக்க வேண்டும்

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

அன்புடன் புகாரி
20171122
உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...

அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்

ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்

கவிஞர் புகாரி
20171122

கஜா புயலும் தென்னம் பிள்ளைகளும்

காவிரிக் கழிமுகப் பகுதியில் இவ்வளவு தென்னந்தோப்புகள் எப்போதிலிருந்து இருக்கின்றன என்ற கேள்வியை முகநூலில் கண்டேன்.

அலுவலகம் செல்ல நேரம் ஆகிறது என்றாலும் இக்காலை இதை எழுதுகிறேன். பின் மேலும் தகவல்களை எழுதுவேன்.

நிறைய நெற்பயிர் நிலங்களும் இடையிடையே தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், வாழைத் தோப்புகள், புளியந்தோப்புகள் என்றுதான் அந்தக் காலம் முதலே இருந்தன.

பின் காவிரி நீர் வராததால், நீருக்கு ஏங்கிய நிலங்கள் தென்னைக்கு மாறின.

தென்னையில் ஓரளவு வருமானம் உண்டு. நெல்லுக்கு அடுத்ததாக என்று சொல்லலாம்.

இதுபோன்ற புயல் 50, 60 வருடங்களுக்கு முன்புதான் வந்தது என்பதாலும் அப்படியான புயல்கூட நாகையை மட்டுமே தாக்கும் என்பதாலும் பேராவூரணி போன்ற ஊர்களில் தென்னை மரங்கள் நடுவதை யாரும் பாதுகாப்பற்றது என்று நினைக்கவில்லை.

இனியும் தென்னை நடுவது கூடாது என்று எண்ணுவது தவறு. பாதுகாக்க உரிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் சரி.

இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு அரசே பொறுப்பேற்று ஆவன செய்ய வேண்டும். அரசுதான் இதுபோன்ற விவசாயிகளுக்கான காப்புறுதி.

தென்னை மரத்திலிருந்தும் பனை மரத்திலிருந்தும்தான் கள், பதநீர், இளநீர் போன்ற இயற்கை பானங்களும் கிடைக்கும்.

தென்னை மரங்கள் தென்னிந்தியா முழுவதும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையிலும் தென்னை மரங்கள் அதிகம்.

தென்னையைப் பிள்ளை என்பார்கள்

சொந்தப்
பிள்ளையைவிட
வச்ச பிள்ளை
காக்கும்
கைகொடுக்கும்

என்பது கிராமத்து வழக்கு.

தென்னையைப் பெத்தா
இளநீரு
பிள்ளையைப் பெத்தா
கண்ணீரு

என்பது கண்ணதாசன் பாட்டு.

இப்போது தென்னம்பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் டெல்டா பகுதி மக்களின் கண்ணீர் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ரத்தம் கொட்டுவதாக இருக்கிறது.

ஒரு பதினைந்து வருடங்களுக்குத் தங்கள் வாழ்வை பூஜ்யத்திலிருந்து தொடங்கி மீட்டெடுக்க வேண்டும்.

இன்று பூஜ்யம் கூட இல்லை. தென்னை வளர்ப்பிற்காகவும் தென்னையை நம்பி பிள்ளை வளர்ப்பு திருமணம் போன்ற இதர காரியங்களுக்காகவும் கடன்கள் வாங்கி அடைக்கமுடியாமல் மைனசில் அதாவது பூஜ்யத்திற்கும் கீழ் இருக்கிறார்கள்

அரசு வாய் பேசுகிறதே ஒழிய செயலாற்றவே இல்லை.

அரசு அறிவிக்கும் நிவாரணம் அந்த விவசாயிகளைக் கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தையும் இன்னும் வரவில்லை.

விழுந்துகிடக்கும் தென்னையை அகற்ற வழியில்லை. குடிக்க நீர் இல்லை. உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை. மின்சாரம் இல்லை. பிள்ளைகள் படிப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

நான் தொலைந்துபோன இவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே பார்க்கவில்லை.

டெல்டா பகுதி மண் மீத்தேனெடுக்க குறிவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப் படுகிறது. இந்தப் புயலைவைத்து அது தீவிரப்படுத்தப்படும் என்று நம்புகின்றேன்.

தஞ்சை பொட்டல் காடாய் ஆவதை காண எனக்குக் கண்கள் இல்லை.

இப்போதே காவிரியற்ற தஞ்சை என் நெஞ்சை மிதிக்கிறது. உயிரில் நெருப்பாய் எரிகிறது.

ஆகவே எனக்கு என் மண்ணை மீட்டெடுக்க வேண்டும். அதன் வாழ்வாதரத்தை மீண்டும் செழுமையாக்க வேண்டும். அதே பச்சைப் பசேல் தஞ்சையில் நிலவவேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறேன். ஊரில் என்ன நடக்கிறது என்று கவனித்து வருகிறேன்.

பத்துலட்சம் தென்னங்கன்றுகள் நடப்பட வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

அதற்காக தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் உலகுக்கே சோறுபோட்ட, சோழநாடு சோறுடைத்து என்று புகழப்பட்ட தஞ்சை நெற்களஞ்சியம் மீட்டெடுக்கப் படவேண்டும்.

நேற்று மூதாதையர் இருந்தனர், இன்று நாமிருப்போம், நாளை இளையவர்கள் வருவார்கள் ஆனால் என்றென்றும் தஞ்சை நிலம் தரமான பச்சை நிலமாகவே விளைநிலமாகவே இருக்க வேண்டும்.

கவிஞர் புகாரி
கஜா புயல்

கஜா என்றால் யானையாம்
இலங்கை சூட்டியப் பெயராம்

அந்தமானருகே
குட்டியாய்  ஜனித்த
கஜா

நாகையை மிதித்து
வேதாரண்யம் வளைத்து
பேயாட்டம் போட்டுக்
கதிகலக்கிய
கஜா

அதிரை பட்டுக்கோட்டை
தஞ்சை புதுக்கோட்டை
சுற்று வட்டாரக் கூட்டை
வட்டங்கட்டி வட்டங்கட்டி
கொடுஞ்சின ஜல்லிக்கட்டாடிய
கஜா

திண்டுக்கல்லில்
மேகங்களை உருட்டி
மழைத் தேங்காய் உடைத்துத்
தெறிக்கவிட்ட
கஜா

கடலில் பதுங்கியதும்
கரையில் மதங்கொண்டதும்
ஏனென்பது
கஜாவுக்கே தெரிந்த
கதை

சென்னயைக் கடந்தால்தான்
அது புயல்
நாகையைக் கடந்தால்
அது வெறும் முயல்
என்ற
எழுதப்படாத விதி
இந்தப் புயலிலாவது
மாறுமா?

கடலோர மாவட்டங்களில்
தென்னம்பிள்ளைகள்தாம்
சொந்தப் பிள்ளைகள்

இன்று
அத்தனை பிள்ளைகளும்
ஆணிவேர் பிடுங்கப்பட்டு
செத்துக் கிடக்கின்றன

இனி
எத்தனைக் காலத்தில்
அங்கே வாழ்வாதாரங்கள்
மீட்டெடுக்கப்பட்டு
பட்டிணிகள் நிறுத்தப்படுமோ
தெரியவில்லை

குனிந்து குனிந்து
தமிழ்நாட்டையே
அடிமை நாடாக்கிய அடிவறுடிகள்
கவுரவமில்லாக் கோமாளிகள்
யானைப் புயல் அழிவுக்கு
சேனை திரட்டி
முன்னேற்பாடு செய்தது
பெரிதல்ல

கஜாவால்
வாழ்வாதரம் பறிக்கப்பட்ட
ஏழைக் குடியானவர்களுக்கு
வாழ்வளிக்க
நிவாரணம் வழங்குவதுதான்
உண்மையான
பாராட்டுக்குரியது

கஜாவின்
தும்பிக்கையைப்
பிடித்துக்கொண்டாவது
தமிழகத்திற்கு
நம்பிக்கையைத் தருவோம் என்று
தொடர்ந்தும் அரசு
களப்பணி செய்யுமா?

இவற்றையெல்லாம் விட
மிக முக்கியமான
ஓர் உண்மையை  அறிந்து
அரசு
சிந்தித்துச் செயலாற்றுவது
மிக அவசியம்

புயல்கள் இனியும்
வரும் வரும்
பல்கிப் பெருகி
வாரம் ஒன்றாகக் கூட
வரும் வரும்

ஏன்

இயற்கை அழிவுகளே
புயல்களின் ஊற்றுக்கண்

தமிழகத்தில்

நிலத்தின் வளங்கள்
சுரண்டப்படுகின்றன

நீர்வளங்கள் தடுக்கப்பட்டு
விளைநிலங்கள்
சுடுகாடுகளாக்கப்படுகின்றன

மலைகள்
உடைத்தெறியப்படுகின்றன

மண்ணும் பறிபோக
வாழ் நிலங்கள்
மடலாகிக் கதறுகின்றன

வருகின்ற புயல்களுக்கு
நிவரணங்கள் தேவையா
அல்லது
புயலே வராதிருக்க
தடுப்புகள் தேவையா

அரசே அரசே
தமிழ்மன்ணை அழிக்கத் துடிக்கும்
நடுவனரசை வீழ்த்த
உன் ஆண்மைக்கு இதோ
ஒரு சவால்

கவிஞர் புகாரி
நவ் 18
கருத்துச் சொல்ல வருபவர்களை உங்கள் மதம் சாதி இனம் அறிந்து அதைவைத்துத் தாக்க வருவார்கள் கிருமிகள்.
தளர்ந்துவிடாதே!
மகிழ்ந்துகொள்!
ஏனெனில்....
உன் கருத்து வலிமையானதாய் இருக்கிறது என்று பொருள்.
வேறு ஏதும் மறுமொழி இட முடியாமல் உள்ளுக்குள் குமைந்து உடலெல்லாம் ஆடிப் போய் வெலவெலத்து நிற்கிறார்கள் என்று பொருள் 
அன்புடன் புகாரி
இணக்கம் 
இணக்கம்
அதற்கு 
என் 
வணக்கம்
மனதோடு மனதாக 
வாழாத வாழ்வெல்லாம் 
மரணத்தின் சுவடுகள்
அறம் என்பது 

அன்பு அல்ல
கருணை அல்ல
இணக்கம் அல்ல
இன்பம் அல்ல

ஆனால்
அறம் இருந்தால் 

மட்டுமே
இவை யாவும் 
எல்லோருக்கும்
கிட்டும்

அந்த 
மகத்துவமே 
அறம்
இணக்கம் கேட்டேன்
ஈட்டி எறிகிறார்கள்

அறம் சொன்னேன்
அடிக்க வருகிறார்கள்

அன்பு போற்றுகிறேன்
அசராமல் தூற்றுகிறார்கள்

உன்வழி உனக்கு என்றேன்
எங்கள் வழி
கொடுஞ்சொல் என்கிறார்கள்

என்வழி எனக்கு என்றேன்
உனக்கு வலி தருவோம்
என்கிறார்கள்

கவிஞர் புகாரி
இந்த உலகம் 
வன்முறையற்றுப் போக 
ஒரு சிறு கல்லையாவது 
நாம் நகர்த்துவோமே
புலன்களைச் சாகடித்து
பக்தி என்ற பெயரில்
புதைவதை
இறைவன் விருப்பவில்லை
புலன்களின் தாகங்களை 
அற வழியில் மகிழ்விப்பதே 
அற வாழ்க்கை
அன்பு அறம் அறிவு 
இந்தக் கலவை 
கலையும்போதெல்லாம் 
வாழ்க்கை 
கலைந்துவிடும்
கவிதை எனக்குத்
தொழில் இல்லை
பொழுதுபோக்கு இல்லை
என் இதயப்போக்கு
சாவே இல்லாதது
சாவு மட்டுமே

சாவில் 
சாவிருந்தால்தான்
அது நல்லது

நீரில்
நீரில்லாவிட்டால்
என்னாகும்?

சாவில்லாச் சாவோ
ஆகப்பெரும் 
கொடுமையானது

என்னில்
நானில்லாமல் போவேன்
அது நன்று

சாவில்
சாவில்லாமல் போயின்
அதுவே
சாவிலும் சாகாச் சாவு

’சா’வில் ‘சா’ விருக்கிறது
மொழி இலக்கணத்
தமிழெழுத்தில்

சாவுக்குத்தான் சாவே இல்லை
மனித வாழ்க்கைத்
தலையெழுத்தில்

கவிஞர் புகாரி


*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
வவ்வால்கள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
நான் தலைகீழாய் நடக்கிறேனாம்

இதை எப்போதோ எழுதிவிட்டேன் இக்கவிதையை, புதுக்க்க்க்க்க் கவிதையை!

நிறுத்துங்கள் உங்கள் பிதற்றல்களை
நிறுத்தாவிட்டால் நானும் உங்களைப் போலவே தரமிழந்து வாய்மொழி உதிர்க்க வேண்டியதாக இருக்கும்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து என் பணி செய்வேன்
நில்லேன் அஞ்சேன் என்றான் கண்ணதாசன்
அவன் கவிஞன்

உங்களால் எல்லாம் ஒரு கவிஞனையோ அவன் முற்போக்கையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தொலைந்து போங்கள், தமிழை வாழவிட்டுவிட்டு!

அன்புடன் புகாரி


>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<

இதில் நியாயம் இல்லையே?


நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்

விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.

வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை

என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.

நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.

ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.

மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.

நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.

தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்

1.

ini solvatharkku onnum ille. ellaam sollitten

என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்

எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்

2.

அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது

3.

அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்

4.

இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.

தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...

துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்

அன்புடன் புகாரி


Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்

>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<

அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.

பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்

எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.

நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.

பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.

மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு

>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<

இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<

செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.

>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.

>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<

இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்

>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<

இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை

>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்

அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்

இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****

அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

கனடா தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா

https://photos.app.goo.gl/6CCPvh59zWbr1JcZ9

விளையாட்டாகத் தொடங்கினேன். மிகச் சிறப்பாகச் சென்றது.

நட்புகளுக்குள் ஒன்றுபட்டோம். கூட்டாஞ்சோறு சமைத்துக்கொண்டுவந்து என் வீட்டில் ஒன்றுகூடினோம்

ஒவ்வொரு உணவும் ருசியில் மிக உயர்வாக இருந்தது. சிறந்த உணவிற்கு பரிசுகள் வழங்கினோம்

குழந்தைகளை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லியும் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லியும் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடினார்கள் பெண்கள்

தேவாரத்திலிருந்து ஓர் ஆரமாய் சம்பந்தரின் கவிதையை இனிமையாய் தமிழ் உச்சரிப்பு மாறாமல் வாசித்தான் 8 வயது எழில். பரிசு பெற்றான்

பாரம்பரிய நடனமாடியது 8 வயது தெனிஷா, பரிசு பெற்றது

பெண்களெல்லாம் தங்களையும் தங்கள் கணவரையும் தங்கள் குடும்பத்தையும் அறிமுகம் செய்தார்கள் அனைவருக்கும்

முத்தாய்ப்பாக ஈழத் தமிழ் எழுத்தாளர் சிவநயனியின் பாரம்பரிய உணவான மச்சக்கூழ் விருந்து தந்தது ஒரு வித்தியாசமான சிறப்பு. தமிழ்நாட்டின் உணவுகளைச் ருசித்த நாவுகள் மச்சக்கூழை மிச்சமின்றி துழாவிச் சுவைத்தன.

ஆறு மணி நேரம் எப்படிக் கழிந்ததென்றே தெரியாமல் போனதாக ஒவ்வொருவரும் உணர்ந்தோம்

சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிமாமழை

அன்புடன் புகாரி
அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச் சொற்களா?
இந்த மயக்கம் பலருக்கும் இருக்கிறது!
அஹர முதஸ எஸுத்தெல்லாம் ஆடி பஹவன் முடற்றே உஷஹு
என்று எழுதினால்தானே கொதிக்க வேண்டும் தமிழன்?
தமிழைத் தமிழாகவே எழுதுகிறவனிடம் தனித்தமிழ் என்று லூட்டி அடிக்க (இலூட்டி ) வருவது அழகா?
அயல்மொழிப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதினால் என்ன?
இதற்காக செலவிடும் நேரத்தை என்ன செய்யலாம்?
நான் தமிழ்ப்பற்றாளன் நான் ஒரு நல்ல யோசனை தரட்டுமா?
199 நாடுகளில் தமிழ்ப் பிஞ்சுகள் தமிழே பேசாமல் அழிகின்றன.
அவர்களைக் காக்க ஏதேனும் செய்யுங்கள்.
எங்கள் தமிழ்மொழி என்று ஒரு தொண்டியக்கம் தொடங்கி இருக்கிறேன். அதில் வந்து உறுப்பினர் ஆகுங்கள்.
தனித்தமிழ் என்று தமிழை அழிக்கப்பாடுவது தேவையற்ற ஒன்று.
தமிழே இல்லாமல் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது என்பதை அறியாத அவலம் கொடுமைங்க தமிழரே.
அன்புடன் புகாரி
தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?
*
*
மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள 
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்
யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?
இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை
மரபுக்கவிதை மட்டும்
எழுதச் சொல்லிக்
கொன்று கொலையெடுத்தார்கள்.
விரட்டியடித்து முடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது
அவர்களிடமும்
இதைத்தான் சொன்னேன்.
மரபுக்கவிதை வேண்டுமென்றால்
நீங்கள் எழுதுங்கள்.
குசுப்பும் (குஷ்பு)
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்)
தேவையென்றால்
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்
நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!
தமிழை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்பவர்கள்
அப்படியே
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே
தமிழைக் கொன்றெடுப்பவர்கள்
அல்லர்
தமிழ்
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு
அயலவன் அத்தனை பேரையும்
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால்
நான் பெரிதும் மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்
மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம்
இன்று நேற்று வந்ததல்ல.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது
++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ
அறியாமல் செய்யவில்லை
அன்றைய அறிஞர்கள்.
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டுபவர்களுக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கும்
புரியவைப்பது
இயலவே இயலாது
ஏனெனில்
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும்
பச்சைப் போலித்தனமே
தமிழுக்கு எது முக்கியமோ
அதைவிட்டுவிட்டு
இதில் வரட்டுத்தனமாய்
தானும் சிக்கி
மற்றவர்களையும் சிக்க வைக்கப்
படாத பாடு படுகிறார்கள்.
அதைவிட்டு
அடுத்த தலைமுறைக்கும்
தமிழை அள்ளிக்கொண்டு போகும்
அனைத்தையும் செய்ய வேண்டாமா?
நான் செய்கிறேன்...
இன்று
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும்
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே
பேசுகிறார்கள்.
அதை மாற்றுவதற்கு
ஏதாவது செய்தீர்களா?
செய்யும் எண்ணம்தான் உண்டா?
நான்
செய்யப் போகிறேன்
’எங்கள் தமிழ்மொழி’
எனும் தொண்டியத்தில் சேருங்கள்
தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்
புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய்
அமரச் செய்யுங்கள்
வாருங்கள்
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்
எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
அன்புடன்
கவிஞர் புகாரி
ரப்பர் தொழிற்சாலை - அழிப்பான் தொழிற்சாலை என்று அமைந்தால் அமங்களம்.
இரப்பர் தொழிற்சாலை என்றால் பிச்சைக்காரர்கள் தொழிற்சாலை ஆகிவிடும்...
- கவியரசு கண்ணதாசன்
😀😀🤣🤣😅😅
*
ஒரு பிரபலமான புதுக்கவிதை
இரிசி கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
இணைந்த இபாப்பி
😀😀🤣🤣😅😅
199 நாடுகளில்
தமிழ்ப்பிஞ்சுகள்
தமிழே பேசாமல்
அழிகின்றன.
அவர்களைக் 
காக்க
என்ன செய்யலாம்?
உங்கள் கருத்துக்களைப் பரிந்துரைத்தால் நலமாக இருக்கும்
அன்புடன் புகாரி
அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.
அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.
கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை
புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்
ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.
குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.
சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.
நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.
தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்
வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது
அன்புடன்
கவிஞர் புகாரி
இயல்பு இலக்கியம் இலக்கணத்துக்குள் அடங்காது

கவிஞர் புகாரி


அன்பு நண்பர் மணி வண்ணன்,
உங்கள் கருத்துப்படியே 
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய் 
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே
உங்கள் கருத்து என்பது 
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?
நான் நானா 
அல்லது நீங்கள் சொல்பவனா 
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்
யார் யாரை 
எப்படிப் பார்க்கிறார்களோ 
அப்படித்தான் அவரா 
அல்லது அவர் என்பவர் 
அவரே அறியாத 
மாய மனிதரா
இலக்கியம் 
முதலாக வந்தது 
இலக்கணம் 
பிறகுதான் வந்தது என்று 
தெளிவாக அறிந்தவன் 
நான்
இன்றைய தமிழுக்கு 
அகராதியே போட்டுவிட்டார்கள்.
இன்றல்ல 
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்
என்னிடம் பழைய 
க்ரியா தமிழகராதி 
நெடுங்காலமாய் உண்டு
இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.
என்னால் ஹ ஜ ஸ ஷா என்று 
சரளமாகத் தட்டச்ச முடிகிறது
தமிழ்த் தட்டச்சு நிரலிகள் 
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 
வழங்கியுள்ளன
நீங்கள் சரியான கதவைத்தான் 
தட்டுகிறீர்களா என்று
நீங்களே 
சிந்தித்துக்கொள்ளுங்கள்
அன்புடன் 
கவிஞர் புகாரி

இலக்கணம் என்பது
ஆணி அடித்து நிறுத்தப்பட்டதல்ல
நிறுத்தப்படவும் கூடாது
மொழி வளரக் கூடியது
அதன் வளர்ச்சியைத் தடுக்கும்
சக்திகளைத் தாண்டி
அது செழித்து வளரக்கூடியது
தமிழ் மொழியும்
அப்படியான மொழிகளுள் ஒன்று
இன்றும் என்னை
யாப்பு கோத்து
மரபுக்கவிதைதான்
நீ எழுதவேண்டும் என்று
வம்படியாய் வாதிடும்
பழமைவாதிகள் இருக்கிறார்கள்
தமிழ் இலக்கணம் தாண்டி
நீ கவிதை எழுதக் கூடாது
உனக்குத் தமிழ் இலக்கணம்
தெரியவில்லை
நீ கவிஞன் இல்லை
என்றெல்லாம்
சினம் ஊூட்டப் பார்க்கிறார்கள்
ஆனால்
நான் சினம் கொள்வதில்லை
தக்க பதிலை உரைத்துவிட்டு
என் தமிழோடு தமிழாகி
தமிழ்க் கவிதைகள் படைத்து
தமிழுலகிற்கு விருந்து வைக்கிறேன்
வாழ்க தமிழ்
வெல்க வளர் தமிழ்த் தேன்மொழி
கவிஞர் புகாரி
நண்பர் வேந்தன் அரசு,
உங்களுக்கு
மலையாளம் எப்படி வந்தது என்பதில்
பெருங்குழப்பம் இருக்கிறது
எனக்கு விளக்க நேரமில்லை
என்றாலும் ஒரு சில சொற்களில்...
வடசொற்களை
அளவுக்கதிகமாக உட்கொண்டதால்...
மலையாளம் வந்தது
தமிழ் ஒரு 10% உட்கொண்டிருக்கும்.
அதையும் பின் விரட்டத் தொடங்கிவிட்டது
மலையாளம் அப்படியே
வடமொழியை ஏற்றது
இனியும் ஏற்கிறது
புதிதாகவும் சேர்க்கிறது
அதுமட்டுமல்ல
தமிழை செம்மையாய் உச்சரிக்காமல்
கொடுந்தமிழையே
எழுத்திலும் எழுதத் தொடங்கினார்கள்
அது ஒரு முக்கிய காரணம்
எழுத்து என்ன செய்யும்
சில்லறை விடயம்.
சொற்கள் கலப்பதே
பெரிய மாற்றம்
யானை போவது தெரியாத
கண்களுக்குத்தான்
எறும்பு போவது தெரியுமாம்
அப்படியான தொரு கண்கள்
உங்களுடையவை
வேந்தரே
இராசு இராசேந்திரரே
அன்புடன் புகாரி
குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் பின் நிவர்த்திகளைக் கண்டுபிடிப்பது எளிது
ஒரு நக்கீரன் பல நல்ல இலக்கியத்திற்குக் காரணமாய் இருந்திருக்கிறான்
நடைமுறைச் சிக்கலே ஏதென்றறியாதவன் பழமையில் உறைந்து அப்படியே உதிர்ந்தும் விடுகிறான்
வரட்டுத்தனம் தவிர்த்து ஆக்கப்பூர்வ செயலில் ஈடுபட்டால் தமிழ் தழைத்துச் செழிக்கும்
தமிழில் அறிவியலில் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்
ஆக்ஸிஜன் என்று எழுத அனுமதிக்காத நிலையில் அறிவியல் கல்வி துரிதமாக வளர வழியே இல்லை
உயிர்க்காற்று, பிரானவாயு என்று ஆரம்பித்துவிடுவார்கள். கல்விபயிலும் கன்றுகளைக் கொன்றெடுப்பார்கள்.
இட்லியை தமிழன் கண்டுபிடித்தான் அது இட்லி என்றுதான் உலக மொழிகள் அனைத்திலும் புழங்கப்படவேண்டும்
அதுபோலத்தான் ராக்கெட்டும், நீயூட்ரானும், ஹீலியமும்...
ஒவ்வொன்றையும் குழப்பிக்கொண்டிருந்தால், கற்பதுதான் தடைபடும் அல்லது மந்த நிலையில் செல்லும்
அறிவியல் கற்க தமிழறிஞனாய் இருக்கவேண்டிய அவசியல் இல்லை
அன்புடன் புகாரி
ஒரே ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பதில் தேவை
புதுக்கவிதை எழுதலாமா கூடாதா?
புதுக்கவிதை தமிழ்க் கவிதை இலக்கணத்தில் எங்கே வருகிறது?
காக்கா காகம்
இந்த இரண்டு சொல்லின் உச்சரிப்பு என்ன? தலைக்காவுக்கும் ஒற்றுக்குப்பின் உள்ள காவுக்கும் மெலிந்தொலிக்க வழியுண்டா? இப்படியெல்லாம் நான் கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை. இதெல்லாம் நன்றாகவே நமக்குத் தெரியும்.
என் கேள்வி ஒன்றுதான். உங்கள் பதில் வருமா?
புதுக்கவிதையை தமிழன் எழுதலாமா கூடாதா? அது எந்தத் தமிழ் இலக்கணத்தில் வருகிறது?
அன்புடன் புகாரி
தமிழன் நன்றாக புதுக்கவிதைகளை இயற்றலாம்.
அதற்காக மரபுக்கவிதைகளை பழிக்கலாகாது.
அதாவது தமிழன் நன்றாகக் கிரந்தம் எழுதலாம், குசுப்பு என்று எழுதுகிறவர்களையும் சானி என்று எழுதுகிறவர்களையும் இடமாசுகசூ என்று எழுதுகிறவர்களையும் பழிக்காமல் இருந்தால் சரி.
அப்படித்தானே?
பழித்தது நானல்ல நண்பரே. ஜெயபாரதன் என்று எழுதாதீர்கள் நீங்கள் தமிழ் இலக்கணம் அறியாத தத்தி செயபாரதன் என்று எழுதுங்கள் என்று பழித்துக் கூறுவது யார்?
அதற்கான பதிலடிகளையே நாங்கள் தருகிறோம்.
கிள்ளிவிட்டவரே தொட்டிலாட்ட வருவதோ?
குஷ்வந்த் சிங் என்று எழுதினால் நீங்கள் தமிழே அறியாதவர், தமிழ் இலக்கணமே தெரியாதவர் ஆகவே குசுவந்த சிங்கு என்று எழுதுங்கள் என்று சொல்வது யார்?
போய் பிழைப்பைப் பாருங்கள் சார், தமிழ் வளரட்டும்.
இளைய தலைமுறையை எப்படித் தமிழில் உரையாட வைப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதுவே ஆக்கப் பூர்வமானது
என் கேள்வி புரியவில்லையா? இந்த தாராளமா படைக்கலாம் என்ற உரிமையை உங்களுக்குத் தந்தது யார்?
தொல்காப்பியனா?
தமிழ் இலக்கணத்தில் எங்கே இருக்கிறது புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனகவிதை எல்லாம்?
தமிழ் இலக்கணத்தில் புதுக்கவிதை ஹைக்கூ கவிதை எல்லாம் இல்லாதபோது, கிரந்தம் மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி ஒவ்வொண்ணா எடுத்துக் கொடுத்து கேட்க வேண்டுமா நான்?
உங்களுக்கே தெரியாதா?
ஆய்வு செய்யமாட்டீர்களா?
கிளிப்பிள்ளையா நீங்கள்?
அன்புடன் புகாரி
>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<
இதில் நியாயம் இல்லையே?
நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்
விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.
வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை
என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.
நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.
ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.
மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.
நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.
தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்
1.
ini solvatharkku onnum ille. ellaam sollitten
என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்
எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்
2.
அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது
3.
அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்
4.
இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.
தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...
துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி