Posts

Showing posts from June, 2013

கோபம் கொள்பவன் அறிவு ஜீவி

கோபம் கொள்பவன்
அறிவு ஜீவி

கோபத்தால்
வன்முறைக்குள் வீழ்பவன்
அடி முட்டாள்

வன்முறை இல்லா
ஏதும்
எப்போதும்
பிழையே இல்லை

சுதந்திரத்தின்
மரணம்
வன்முறை

வன்முறையில்லா
காற்று வேண்டும்
உனக்கு

வன்முறையில்லா
நீர் வேண்டும்
உனக்கு

வன்முறையில்லா
நிலம் வேண்டும்
உனக்கு

வன்முறையில்லா
நெருப்பு வேண்டும்
உனக்கு

வன்முறையில்லா
வானம் வேண்டும்
உனக்கு

வன்முறையில்லா
நீ
வேண்டும்
பிரபஞ்சத்துக்கு
வாழ்க்கைக்கு
உனக்குஉன்
மூடக் கால்களுக்கும்
மிகக் கீழாய்
மூளையைப் புதைத்து
இரும்புப் பலகையும் இட்டு
மூடிக்கொண்டுவிட்டால்
மொக்கைக் கத்திகூட
அக்கக்காய் அரிந்து
வெங்காயம் கூட்டி
வதக்கி வறுத்து
வாயில்
இட்டுக்கொள்ளாதிருக்குமோ

அன்புடன் இதயமே
வேறு
எதுவும் தர அல்ல
கவிதைகள்
தரவே
நீ
வந்திருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?

 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வாசிப்பில் லயிப்பவர்கள்...

வாசிப்பில் லயிப்பவர்கள் மிதமாக வாசிப்பவர்களைக் கேவலமாக ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை அவர்களுக்காகவே நேசிக்கத் தெரியாதவர்களின் வாசிப்பு அவர்களுக்கு எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா வாசிப்பு இதய வாசிப்பு என்பது அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை வாசிப்பவர்களைவிட நூல் வாசிப்பவர்கள் சிறந்தவர்களாகிவிட முடியுமா என்ன?
என்
மாமழைக்கும்
நனையாத
உன்
புற்கள்
நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்

கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும் 
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்


இருட்டை உடைத்தெறிந்து
எங்கிலும் நிறையப் பார்க்கிறது
வெளிச்சம்

வெளிச்சத்தை உண்டு
செரித்துக்கொள்ளப் பார்க்கிறது
இருட்டு

இத்தொடர்ப்
போராட்டங்களுக்குள்
மாய மயக்கத்தோடு
ஓடி முடிகிறது
வாழ்க்கை

25 பெண் ஏன் புரியாத புதிர்?

காதல் கிறுக்கனின் கேள்வி:
"புகாரி ஸார்,உலகம் போற்றும் ஒரு கவிஞர் நீங்கள்.
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
சில நேரங்களில் அவள் சிரிப்பின் அர்த்தங்களை?"
*

பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான்.

புரிந்துகொள்ளவே முடியாது என்று
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான் ;-)

என்று இதற்கு நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்

ஆனாலும் ஒரு வாழ்க்கைச்
சுவாரசியத்தை உங்கள் முன் நான் வைக்கிறேன்

பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்

எந்த ஒரு விசயமும் அறியமுடியாத அதிசயமாய்
இருக்கும் வரைதான் அது அழகு
மீண்டும் மீண்டும் காண வைக்கும் மந்திரம்

பெண்ணின் மனம் புரியாததல்ல
அது சட்டென்று புரிந்துவிடும்
ஆனால் புரிந்தது உறுதிப்படும் முன்
மெல்ல நிறமிழப்பதாய்த் தோன்றும்

என்றால் அவள்
அவளே அறியாத வற்றாப் புதிர்

ஏன்?

அப்படி அவள் இருக்கும்வரைதான்
உங்களுக்கு அவள்மீது சுவாரசியம் இருக்கும்

எல்லாம் பளிச் பளிச் என்று ஆகிவிட்டால்
ஒருவேளை புளித்துப் போகக்கூடும்

வானத்தை ஆயிரம் முறை பார்த்தாலும்
அது ஏதோ ஒரு செய்தியைப்
புதிதாய்ச் சொல்லிக்கொண்டே இருக்கும்

இந்தப் பிரபஞ்சத்தில்
புர…
உலகப் புகழ்
வசீகரப் புன்னகைகளுக்குள்தான்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்தான்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மையான
உண்மையிலும் உண்மையான
கருணையிலும் கருணையான
இதயங்கள்தாம்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கித் துடிக்கின்றன

(இணையத்தில் என்னைக் கடந்த சில வரிகள் என்னை இந்த வரிகளாக்கிப் போயின)