Posts

Showing posts from August, 2009

குறள் 0001

Image
'அ' வென்ற
முதல் எழுத்தை முன்வைத்தே
மொழியின் எழுத்துக்கள் எல்லாம்

ஆண்டவன் என்ற
முதல்வனை முன்வைத்தே
உலகின் உயிர்கள் எல்லாம்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல் - 1 கடவுள் வாழ்த்து - குறள் 1

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 15, 2003

குறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை

Image
உயிர் பறிக்கும் காலனைக்
கண்டிருக்கவே இல்லை
நான் முன்பெலாம்
இப்போதோ
மாபெரும் விழிகளோடு
படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று
கண்டுகொண்டேன்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1083

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

Image
பார்த்தேன் நான் அவளை
பதிலாகப்
பார்த்தாள் அவளும் என்னை
வெறுமனே
அவள் பார்த்தாலே
அந்தப் பார்வை
எனைக்
கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ
ஒரு படையையே
தன் விழிகளில் திரட்டி
என்னைப்
பார்த்துத் தொலைத்தாளே

*

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1082

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

மீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்

1. பாலிவுட் இல்லாவிட்டால் ஹிந்தி காலி. பாலிவுட்தான் ஹிந்தியை வளர்த்தெடுக்கிறது. ஹிந்தி இலக்கிய மொழியல்ல சினிமா மொழி!

2. ஹிந்தியில் வளமான இலக்கியங்கள் கிடையாது

3. குரங்குக் குட்டிகள் கொடியில் தொங்குவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டது (நன்றி கண்ணதாசன்)

4. ஹிந்தி கற்றுக்கொள்வது ஜலதோசத்துக்கு நல்ல மருந்து. ஹாங் ஹூங் என்று சலி சிந்துவதுபோலப் பேசிப்பேசி மூக்குத் துவாரத்தைச் சுத்தம் செய்கிறது ஹிந்தி.

5. ஹிந்தி தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தியா 5000 வருடப் பாரம்பரியம் கொண்ட நாடு

6. ஹிந்தி பயின்றவர்களுக்கு பிறமொழி பயில்வது கடினம். அப்படியே ஹிந்திப்படம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

7. ஹிந்திமொழி அறிவு வளர்ச்சியைத் தடுக்கும். ஏனெனில் இந்தி அறிந்தவர்கள் வேறு எந்த மொழிக்காரர்களுடனும் ஹிந்தியில்தான் கடபுடா என்று ஓட்டுவார்கள். மற்றவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியாது என்பதெல்லாம் சுட்டுப்போட்டாலும் அவர்கள் புத்தியில் ஏறாது

8. ஹிந்தியில் கவிதை இலக்கியம் என்று வந்துவிட்டால் அது உருதுவையே கடன் வாங்கிக்கொள்கிறது. எது உருதுச் சொல் எது ஹிந்திச் சொல் என்று ஹிந்திக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது.

9.…

10. கவிதைக்காய் சிலேடைக்காய் கண்ணதாசன் கொய்யாக்காய்

Image
கோதை எனைக் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா


அத்திக்காய் காய் காய் பாட்டின் கடைசி இரு வரிகளுக்கு வந்துவிட்டோம். இந்த இருவரிகளில் கண்ணதாசன் விருந்து வைப்பது இரு காய்களை. அதில் முதலாவது.

கொற்றவரைக்காய். கொத்தவரங்காய் என்று காய்கறிக்கடையில் கூடையில் குவித்துவைத்திருப்பார்களே அதுதான். பச்சைக் கொலுசுகளாய் அவை பளபளக்கும். கொற்றவரைக்காய் என்றால் கண்ணதாசன் முன்வைக்கும் பொருள் என்ன?

கொற்றவன் பெற்ற குலக்கொடியைக்
கல்விகற்க விட்டேனடா அடா
குற்றம் புரிந்தனையா இல்லையா
அதை மட்டும் உரைத்துவிடு


கொற்றவன் என்ற சொல் கேட்டதுமே என் மூளைக்குள் ஓடிவரும் ஞாபகம் இந்த வரிகள்தாம். இது பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன். அம்பிகாபதி அமராவதி காதல் நாடகத்தில் வரும் ஒரு பகுதி. குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதிக்குத் தமிழ் சொல்லித்தர வந்த அம்பிகாபதி அவளைக் காதலிக்கிறான். அதை அறிந்த மன்னனின் விசாரனைக் கூடம் எழுப்பும் கேள்வியே இது.

கொற்றவன் என்றால் அரசன். கொற்றவரைக் காய் என்றால் என் மன்னனைக் காய். பழந்தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவனை தன் அரசன் என்றே காண்பார்கள். என் ராசா என்று செல்லமாய…

காதலும் சாதலும்

Image
”காதலுக்காக மட்டுமே உருகி உயிர் துறப்பது ஏற்க முடிவதில்லை”

இது என் கவிதை ஒன்றுக்கான விமரிசனம். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இவைதாம்.

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

இந்த வரிகளுக்கான என் விளக்கத்தை இந்தக் கட்டுரையின் இறுதியில் நான் தருகிறேன். அதற்குமுன் மற்ற கவிஞர்கள் காதலையும் சாதலையும் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

இது பாரதியின் பாட்டுவரிகள். இதை நேரடியாய்ப் பார்த்தால் காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதாகப்படும். ஆனால் அதல்ல உண்மை. காதல் இல்லாவிட்டால் மனிதன் நடைபிணமாகிவிடுவான், வாழ்க்கை முடமாகிவிடும் என்பதே பொருள். காதலில்லாவிட்டால் வாழும்போதே சாதலை அனுபவிப்போம் என்பதே பொருள். அதாவது வாழ்க்கை சாவாக இருக்கும். இதுதான் பொருளேதவிர தற்கொலை செய்துகொள்வதல்ல. காதலிதான் ஓடிப்போவாள். காதல் ஓடிப்போகாது. எனவே இன்னொரு காதலியைக் காலம் தரும். அவளோடு மீண்டும் காதல் கொண்டால் காதல் காதல் காதல் என்று ஆகிவிடுவிடும…
மகளிர்தின வாழ்த்துக்கள்

பெண்ணின் வலிமை!

வாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.

ஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.

ஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.

அதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.

வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்துப் பதறிப்போவாள்.

ஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற பெரும் வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.

அதே ப…

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
ஒலிவெள்ள கீதவாணியே
உயர்வாய் நீ நாளுமே


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயிலொசை - சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

பாரதிக்கு ஏன் இதெல்லா…

குறள் 1081

Image
கனத்த
காதணி அணிந்த
இவள்
தேவ மங்கையோ
அல்லது
அரியதொரு மயிலோ
அடடா
இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே
என் நெஞ்சு

*

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு


*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1081

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

காலத்தைச் சாய்க்கும் ஊடகம்

Image
கேடுகளால் அழிந்துபோன
கால்வாசி நாசத்தை

திருப்பத் திரும்ப
சொல்நயத் திறமைகூட்டி

மாறி மாறி
நுண்கலை வலுசேர்த்து

மீண்டும் மீண்டும்
அதிரடிக் காட்சிகளோடு

இடை இடையே
நாச அனுமானங்களோடு

ஒலி ஒளி பரப்பிய
இருபத்தியோராம் நூற்றாண்டின்
ஊடகவியல்

அழித்தெடுத்தது
மீதம் முக்கால்வாசி
தேசத்தையும்

ஊடகமில்லாக் காலங்களில்
உயிரழிவுகளும்
அறியாதிருந்ததென்னவோ
உண்மைதான்
ஆனால்
ஊடகங்கள் வந்ததும்
காலமே அழிந்து
சொட்டுச் சொட்டாய் வழிகிறதே

9. உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ

Image
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ

இந்த வரிகள்தான் கண்ணதாசனை இந்த சினிமாப்பாட்டு எழுத வைத்த கவர்ச்சி வரிகள். கண்ணதாசன் நொறுக்குத் தீனி தின்ற காகிகத்தில் யாரோ எழுதிய சில வரிகளைப் பார்க்கிறார். அதிலிருந்த காய்கள் இவர் மனதைக் கவிதையாய்க் கனியவைக்கின்றன.

கவிஞனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவன் எழுதும் கவிதைகள் சில வேறெவரின் கவிதையையோ வாசித்து பிரமித்ததின் பலனாய் உருவாகும். அப்படியான பாதிப்பில் கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது என்று ஒரு கவிஞனாய் நான் சத்தியம் செய்வேன்.

கவிஞன் என்பவனே நேற்றைய கவிஞனின் தொளேறி நிற்கும் புதிய உயரமானவன்தான். நேற்றைய கவிஞன் இல்லாவிட்டால் இன்றைய கவிஞனின் உயரம் குள்ளமாகவே இருக்கும்.

வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா
உள்ளமிளகாயா ஒருபேச் சுரைக்காயா

இதுதான் கண்ணதாசனை உலுக்கிய வரிகள். நொறுக்குத்தீனி தின்றவர் அப்படியே அதன் சுவையில் சறுக்கி விழுந்தார். ஏன் இதை வளர்த்தெடுத்து காய்களின் ஊர்வலம் ஆக்கக்கூடாது என்று தன் கற்பனை சிட்டைப் பறக்கவிட்டார். ஒருமுறை வைரமுத்து நான்கு வரிகளாய் இக்கவிதையைச் சொன்ன ஞாப…
Image
காதல்விழி ஓரச்சுவை
கையணைவில் சேரச்சுவை

கவிதைகளில் ஊறச்சுவை
கனிந்தசொல் வாரச்சுவை

கனவுகளில் ஏறச்சுவை
நினைவுகளைக் கீறச்சுவை

நெஞ்சுக்குள் பாரச்சுவை
நிம்மதிக்குள் மாறச்சுவை

வஞ்சகத்தைச் சீறச்சுவை
வெறுப்புமனம் தீரச்சுவை

உறவுகளில் தூரச்சுவை
உடைந்தமனம் தேறச்சுவை

மதமூடம் மீறச்சுவை
மனிதநேயம் வீரச்சுவை

இனியசொல் கூறச்சுவை
இதயந்தான் ஈரச்சுவை

8. சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா

Image
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?

தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.

ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் …

7. ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்

Image
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் தனிமை இன்பம் கனியக்காய்


நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது

வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்

கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.

ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.

அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?

தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறா…

காதலா வீரமா

Image
கேள்வி:
எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' காதல் எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி.


பதில்:
இந்த உலகத்துக்கு எது தேவை? மனித நேயம் காக்க எது அவசியம்? தீவிரவாதமா வன்முறையா விரோதமா அல்லது அன்பு கருணை பாசமா?

தமிழ் சினிமாவில் இரண்டு விச்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கமுடியும். ஒன்று காதல் இன்னொன்று சண்டை. அத்தனை படங்களும் இவற்றைச் சுற்றித்தான். விதிவிலக்குகளை ஓரங்கட்டுவோம்.

சரி சங்ககாலத்தை எடுப்போம், தமிழர் காதலையும் வீரத்தையும்தான் இரு கண்களாய்க் கண்டனர். இந்த இரண்டையும் பற்றித்தான் அகநாநூறுகளும் புறாநாநூறுகளும்.

மனிதனை ஆக்கிரமிப்பதில் இந்த காதலுக்கும் வீரத்திற்கும் அதீத சக்தியுண்டு. இதில் எது உயர்ந்திருந்தால் உலகம் அமைதியில் தவழும் என்று நாம் சிந்திப்பது மிக அவசியம். காதலையோ வீரத்தையோ முற்று முழுதாக நம் வாழ்விலிருந்து அகற்றிவிடமுடியாது என்றாலும் ஒன்றை உயர்த்திப்பிடித்து இன்னொன்றை உள்ளுக்குள் வைத்திருப்பது இயலக்கூடிய ஒன்றுதான்.

காதல் என்பது அன்பு, கருணை, பாசம், அமைதி என்ற திசையில் பயணப்படும்போது வீரமோ வன்முறை, தீவிரவாதம், சிறுவர்கள் கையில் அரிவாள்…

6. உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ

Image
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ


18. உருவங்காய்
19. பவ்ருவங்காய்

காதலனோ மிகத் தெளிவாக ஏழு காய்களை வீசி, இவளே இரக்கம்ற்றவள் இவளையே காய் நிலாவே. அருகிருந்தும் அப்படியே நிற்கிறாள், நீ காய்ந்தாலே இவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள ஓடிவருவாள் என்று தன் மனக்குறையைச் சொன்னதும், பெண் மனமல்லவா. அப்படியே இளகுகிறது வளைகிறது தாழ்கிற்து அவனுக்காகப் பாடுகிறது அதுதான் பெண்மை. பெண்மையின் மேன்மையான ரகசியம்.

தருவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள். அவர்கள் அழகில் மட்டும் தாராளம் இல்லை அன்பிலும் தாராளம், அணைப்பிலும் தாராளம், கனிவிலும் தாராளம், காதலிலும் தாராளம். என்ன வித்தியாசம் என்றல் ஆண் எப்போதும் துடித்துக்கொண்டே நிற்பான். பெண் அதற்கென்று ஒரு சூழலில் அமர்க்களமாய் எழுவாள். எழுந்தால் இவன் விழுந்தான், அவ்வளவுதான்.

என்னுடைய உருவம்தான் நான் முரண்டு பண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து ஒட்டிக் கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே அவளுக்கு. நிலவைப் பார்த்து நிலவிடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.

உருவங்காய் ஆனாலும் உள்ளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்…

5. இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்

Image
இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய் 

நேரில் நிற்கும் இவளைக்காய்


12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்


இது ஆண்பாடும் வரிகள். பெண்கள் எப்போதுமே தூரமாய் இருக்கும்போது, வா வா என்பார்கள். ஏங்கித் தவிக்கிறேன் என்பார்கள். தூங்காமல் துவள்கிறேன் என்பார்கள்.

அருகே வந்தால் போதும், அது அச்சமோ நாணமோ மடமோ பயிர்ப்போ, அந்த வள்ளுவனுக்குத்தான் வெளிச்சம், ஒரே பிகுதான்.

வெட்டிக்கு ஒரு சண்டை வேறு போடுவாள். ஏன் சண்டை போடுகிறாய் கெண்டை மீனே என்று கேட்டால், வள்ளுவன் வேறு வக்காலத்துக்கு வருவான்.

இது ஊடலடா மடையா. நீ ஊடிக்கூடு அதில்தான் உற்சாக வெள்ளம் கரைபுறண்டோடும் என்று சூடுபோடுவான்.

ஆக, தவிப்பும் துடிப்புமாய் ஆண்களில் நிலை பாவம் பாவம் அந்தோ பரிதாபம்.

கெஞ்சுடா நீ கெஞ்சலேனா மவனே கஞ்சிடா என்று மிதப்பாய் நிற்பாள் அவள். சரி வேண்டாம் போலும் என்று விட்டு விலகித் தொலைத்தால் போதும், பிறகு ஒரு ரகளையே நடக்கும்.

வேறு வழி? கெஞ்சிக் கொஞ்சி பின் கிடைப்பாள் அந்த வஞ்சி ஓர் ஒன்றையணா முத்தத்துக்கு ;-)

இரவுக்காய்... ம்ம்ம் இறைவன் ஏன் இரவைப்படைத்தா…

4. மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ

Image
9 காய்கள் முடிந்தபின் மேலும் இரண்டு கண்ணதாசக் காய்கள்

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ


இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.

தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)

மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை…

நான் நானாக

Image
அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு

நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்
இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு

எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது நிரந்தரமல்ல
சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில் அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் 'தேடு' என்று
கட்டளையிட்டுவிடுகிறது

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின்
சிலர் அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

மனதின் ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின் மிச்சங்களாய்
இருந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள் கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

சிலருக்கு
இது எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடீரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

எப்…

சாதனைகளில் சிரி

Image
உயிரே
அமைதியை நோக்கித் தவழ்ந்துவிடு
சத்தங்கள் சத்தான உள்ளத்துக்கும்
கடும் விசங்கள்

இந்த பூமி மடி நிறைய மனித மொட்டுக்கள்
அவை மலர்களாய்ப் பூக்கும்
பிரிய விரல்களால் வருடும் பொழுதுகளில்
இருந்தும் எந்தப் பூவினுள்ளும்
நீ வீழ்ந்துவிடாதே

ஒருசில பூக்களிலோ முட்களிருக்கலாம்
ஆயினும் நம் சுடுசொற்களால்
மெல்லிய இதழ்களையே
முட்களாய் மாற்றிக் கொள்ளும்
பூக்களும் உண்டு இங்கே

நெஞ்சம் உண்மையின் ஊற்றாகட்டும்
செவியரும்புகள் பிறருக்காய்
பிரியமுடன் மலரட்டும்

மெலிந்தவனோ அறிவிலியோ
நீ விட்டு விலகும்
அந்த ஒன்றுமறியாதவனிடமும்
ஓர் கதை உண்டு
பிறர் பிணிக்குச் செவி மடுத்தால்
உன் பிணி தூசல்லவா

ஆயினும்
கடும் விசத்தை அமுதெனக் கலந்து
நுனி நாக்கில் பரிமாறும் கரு நாகங்களையும்
விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே கழற்றிக் கொள்ளும்
பிறவித் திருடர்களையும் விட்டு விலகிவிடு

இந்த மண்ணில்
நம்மிலும் உயர்ந்தோருமுளர் தாழ்ந்தோருமுளர்
வீணே ஒப்பிட்டு நெஞ்ச நீரோடையில்
நஞ்சினைக் கலப்பதைக் கைவிடு

உனக்கென ஓர் உள்ளம்
அதில் உன்னுடைய என்றுசில எண்ணங்கள்
பிறகென்ன?

மனசாட்சியெனும் வைரக்கால் பதிய
திடமாய் எழுந்து நில்
உன் இனிய எண்ணங்களில் வாழ்
ஈடற்ற சாதனைகளில் சிரி

காதலும் உறக்கமும்

பிரசாத்:
எனக்கு ஒரு சந்தேகம் புகாரி, நீங்கள் எழுதிய கவிதைகளில் சில காதல்
உறக்கத்தை தொலைக்கும் என்ற கருத்தோடு உள்ளது. உண்மையிலேயே உறக்கத்தை
தொலைய வைக்குமா காதல். அனுபவமில்லாததால் அறிந்து கொள்ள கேட்கிறேன்.


நான்:
காதல் பொல்லாதது. அது குறிவைப்பதே முதலில் உறக்கத்தைத்தான். புரண்டு புரண்டு படுக்கும் பதின்ம வயது பெண்ணைக் கண்டால் தாய் கவலைகொள்கிறாள். இவள் காதலில் விழுந்துவிட்டால் என்று.


ஊரு சனம் தூங்கிருச்சி
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏந்தான் தெரியலியே

என்று ஜானகியின் குரலில் வழியும் காதல் ஏக்கத்தைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் அதுவும் ஒன்று.

கண்ணதாசன் பட்டுக்கோட்டையாருக்கெல்லாம் முன்பு மருதகாசி என்று ஒரு கவிஞர் அருமையாக திரையிசைப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் படம் ஊத்திக்கொண்டாலும் இந்தப் பாட்டுக்காகவே பேசப்பட்டது. அந்தப் பாடல் துள்ளல் இசையில் ஏ.எம். ராஜா குரலில் அழகாக வெளிவந்தது

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா

காதலும் உறக்கமும் எப்படி நேரடித் தொடர்பு கொண்டிருக…

பூவும் பொன்மின்னலும்

பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை
பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்
பூவும் நான்
பொன்மின்னலும் நான்

குறையுள்ள மனம் தந்தாய் இறைவா

Image
கையை விட்டுப் போனால்
கல்லும் வைரமாக
கையிலேயே இருந்தால்
வைரமும் கல்லாக

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போகுமென்று
முன்பே அறிந்திருந்தால்
உயிரைக் கரைத்து ஊற்றி
ஒட்டுப்பசை நெய்திருப்பேன்

கையை விட்டுப் போகாதென்ற
கர்வத்தில்தானே நான்
கயிறிழுத்துப் பார்த்தேன்

வைரக் கல்லும் போனது
வைராக்கியக் கயிறும் போனது
கனவின் இழையும் பிரிந்தது
உயிரின் உயிரும் மரித்தது

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை
வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்

வந்தது கல்லாக
சென்றது வைரமாக
கருத்துப் பிழை
வருவதென்ன நியாயம்

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

ஊருக்குச் சேவை

குடும்பத்துக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் உலகுக்குச் சேவை செய்பவன் பொதுஜனக்காரன்.உலகுக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் குடும்பத்துக்குச் சேவை செய்பவன் மகாத்மா. குடும்பத்தையே துறந்து உலகுக்கு சேவை செய்பவன் துறவி.

நான் மாற்றுக்கருத்து உடையவன்.

ஊருக்குச் சேவை செய்து வீட்டைச் சாகடித்தால் அவன் சேவை போலியானது. ஏனெனில், அவனுக்குத் தேவை வெறும் புகழ் மட்டுமே. வீட்டில் உள்ளவர்களும் உயிர்கள்தான் அவர்கள் அவனை நம்பி வந்தவர்கள். தன்னை நம்பியவர்களையே காப்பாற்றாதவன் ஊரைக் காப்பாற்றினான் என்பது நகைப்புக்குரியது.

ஊரையும் குழும்பத்தையும் ஒன்றாகப் பார்ப்பவன்தான் உண்மையான சேவைக்காரன். பாரபட்சமாக தொண்டு செய்பவன் தொண்டுசெய்பவனல்ல சூது செய்பவன். தன் சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டவன். அவன் சுயநலம் என்பது தான் சரித்திர புருசனாய் ஆவது என்பது.

குடும்பத்தையே துறந்து உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பவன் தன் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காரணம் தேடுபவன். பொறுப்பற்றவன் புகழ் வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்தான் உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பது.

பாரதி காலத்தில் எழுத்தாளர்களுக்கு வேறு…

கண்ணாடிகள்

Image
உன் வார்த்தைகள்
உன் முகம் காட்டும் கண்ணாடிகள்

அறிவழிந்த பொழுதுகளின் மடிகளில் அமர்ந்துகொண்டு
இன்றைய உன்னை இன்றே பார்த்தால்
உனக்கு அழகாகத் தெரியலாம்
நாளை உன்னை நீயே பார்க்க நேர்ந்தால்
அதன் விகாரத்தில் நசுக்கப்பட்டு வெடித்து அழத் தோன்றும்

உன் முக அழுக்குகளை அகற்று முதலில்
உலகக் கண்ணாடிமுன் நிற்கலாம் பிறகு

சளி வழியும் மூக்கோடும் பீளை மூடிய விழியோடும்
வாநீர் உரிந்த வாயோடும் நீ செல்லவேண்டியது
அறிவென்னும் ஒப்பனையறைக்குத்தான்

அடிக்கடி உன் முகம்பார்
உன் முகத்தின் கோரங்கள் உன் விழிகளுக்குத் தெரிந்தால்
நீ காப்பாற்றப்படுவாய்

அடடா அழகென்று அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால் உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும் உனக்கு ஆகாமல் போகக்கூடும்

இதயம் என்பது
நீ அன்றாடம் சேமிக்கும் சொற்களின் உண்டியல்
விகாரங்களெல்லாம் அதனுள் விழுந்த செல்லாக் காசுகள்
செல்லாக் காசுகளையே செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது அவமானங்களைத்தான்

கண்ணாடிகள் ஒருநாள் உடையலாம்
உடைந்தால் அவற்றின் ஒவ்வொரு சில்லும்
உன் முகத்தை இன்னும் விகாரமாகவே காட்டும்

முகத்தைத் துடைத்துக்கொள்ள
இனியாவது உன் விரல்களுக்குப் பாடம் எடு
சின்னச் சின்ன மரணங்களுக்கு
உன்னை விலைபேசி விற்…

இணையத்தோரே

தேனீர்க்கடை தாண்டி
தெருமுக்குக் கூட்டம்தாண்டி
தேதி குறித்துக் கூடும்
இலக்கிய வட்டங்கள் தாண்டி
இணையமென்ற மேற்தள மாடம் வந்து
அகம்பூக்க அமர்ந்தால்

ஐயகோ...
இங்குமா அந்தச்
சில்லறை அரசியலின்
நச்சுமுள் விளையாட்டு

ஒருவன்
இருவனாகிக் கூடும்போதே
பேயாட வந்துவிடுகிறது
பொல்லாத அரசியல்

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்

காரணம்...

அவரின்
அரைகுறைச் சொல்லைப்
பாராட்ட ஆளற்றுப் போனதே
அந்தச் சோகம்

தன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே படுபாவி
அந்தப் பொறாமை

இவன் என்
எதிரி எழுத்தாளனின்
தாசனாயிற்றே
அந்த விரோதம்

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனம்

கண்டதுக்கும்
மறுமொழியிட்டுவிட்டால்
நாம் பணிப்பளுவால் சிக்குண்டு
தவிக்கிறோமென்று எப்படி நிரூபிப்பது
அந்தச் சாதுர்யம்

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணம்

இப்படியாய்ப் பலரழிய...

நாலுவரி என்று நாம் மூச்சுவிட்டால்
நாநூறு பிழை என்ற
நம் ஆஸ்துமாவல்லவா
அறிவிக்கப்பட்டுவிடும் என்றே
இன்னும் சிலர்

இவை போதாதென்று
இந்தக்குழு அந்தக்குழு என்ற
இணையக் குழுக்களின்
தன்மானத் துவேசத்தால்
குரல்கிழியும் குற்றச்ச…

வேங்கூவர் - கனடா

Image
என் குரலில் கேட்க

அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட
அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர்.
2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் அங்கு சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன்.
ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல்
விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.


வசந்தத்தில்
வசந்தம் கேட்டுத்
தவமிருக்கும் உலகில்
வருடமெல்லாம் வசந்தம் காணும்
வேங்கூவர் ஓர் அதிசயம்

எங்கும் இங்கே
புல்லும் மரமும் பூத்துப்
பூரண சுயாட்சி நடத்தும்
பொற்பருவத் தாண்டவங்கள்

பேரெழிற் பொற்சிலையாய்
சுற்றிக்கட்டிய
நீர்ப்பட்டுச் சேலைக்குள்
நிமிர்ந்து நாணி நிற்கும்
நிலமகள் இந்த வேங்கூவர்

இயற்கையின்
எழில்வண்ணப் பளபளப்பு
காணும் கண்களிலெல்லாம்
மின்னல்கள் கொளுத்தி
மின்னல்கள் கொளுத்தி
மிடுக்கோடு விளையாடுகிறது

ஆசை…

கவிதைகளும் நானும்

Image
ஆயுள் பெரும்பாலையில்
அவ்வப்போது வாழ்க்கை
கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது

அதன் தித்திப்பு முத்தங்களும்
திரும்பியோட ஏங்கும் நினைவுகளும்
விழிகளெங்கும் கவிதைகளாய்ப்
பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன

உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை
ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட
இதயக் கணங்களாய்க் கவிதைகள்

தீபத்தைத் தொட்டால்கூட
சுடாமல் போகலாம்
தீபம்பற்றிய கவிதையோ
சத்தியமாய்ச் சுடும்

புயலைப் புரிகின்ற மொழியில்
மொழிபெயர்க்கவும் செய்யும்
அதை வளைத்துப்
பெட்டிக்குள் இடும் சாமர்த்தியத்தைப்
பூந்தென்றலின் வரிகளில்
பதுக்கிவைக்கவும் செய்யும்

கவிஞனின்
பிரம்மாண்ட எழுச்சி கவிதை
கவிதையின் பித்தன் கவிஞன்

கவிதைக்கும் மனத்திற்கும்
இடைவெளி இல்லை
ஏனெனில் அது என்னுடைய இயல்பு

கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
ஏராள இடைவெளி
ஏனெனில் அது வாழ்க்கையின் இயல்பு

வாழ்க்கையை வளைத்து
கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே
கவிதைகளாயும் நிகழும்
வாழ்க்கையாயும் என்னோடு

அத்துமீறி என் டைரிக்குள் பிரவேசிக்கிறீர்கள் - செப் 28 புதன்

என் பணிவிடைகளில் அவனைப் பனியாகக் கரையவைத்தேன். என் அக்கறைகளில் அவனை நெக்குருகிப் போக வைத்தேன். என் அன்பெனும் கரங்களால் தழுவத் தழுவ மென்மையின் மடிகளில் அவனைப் பூக்கவைத்தேன். என் முகப் பூரிப்பை என் தேனினும் இனிய குரல்வழியே உணரவைத்தேன்.

நான் அவன்பால் என்றோ ஈர்க்கப்பட்டிருந்தேன். அவனோ அறியாதவனாய் அலைந்திருந்தான்.

என் பெண்மை அவன் முன் ஒரு வசீகர நாட்டியமே ஆடியது. எனக்கே அது ஆச்சரியமாய் இருந்தது. எங்கிருந்து வந்ததோ எனக்கு இத்தனை முழுமூச்சாய் அவனைக் கவர்ந்திழுக்கும் சக்தி. என்னையறியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தேன் என்னை நானே அதிசயமாய் வியந்து பார்த்துக்கொண்டே.

காதலும் வ.வெ.சு. அய்யரும்

காதல் என்றால் என்ன
...

காலஞ்சென்ற ஸ்ரீமான் வ.வெ.சு அய்யர் காதலுக்கு மிகச் சிறந்த விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்:

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்தும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது மற்ற யாரைப் பார்க்கும்போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமனிய விசயமானாலும், அவருடைய குரலில் விசேசமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தையைக் காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும்போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக்காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ,
அது தேவரகசியம் - மனிதரால் சொல்லமுடியாதது.

(கல்கியின் கட்டுரைத் தொடரிலிருந்து...)

ஜெயமோகனின் இலக்கியம்

ஏன் இலக்கியம் மனிதனுக்குத் தேவை?

நாம் ஓர் இடத்தில் ஒரு காலத்தில் மட்டுமே ஒரு சமயம் வாழ முடிகிறது. சாகசமே வாழ்வாகக் கொண்டவனுக்கும்கூட வாழ்வனுபவங்கள் மிக எல்லைக்குட்பட்டவையே. இலக்கியம் மூலம் நாம் எல்லையின்றி வாழமுடிகிறது. காலமும் இடமும் கட்டுப்படுத்தாத வாழ்க்கை, பலவிதமான உறவுகள், பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான உணர்ச்சிக்கட்டங்கள்... இலக்கிய வாசகனுக்குப் பல்லாயிரம் வாழ்க்கை

- எழுத்தாளர் ஜெயமோகன்

வினோதன்

கேட்போருக்கு
மௌனத்தால் பாட்டிசைப்பான்

பார்ப்போருக்கு
உருவமற்று நடனமாடுவான்

நுகர்வோருக்கு
வாசனையற்று அனுபவமாவான்

சுவைப்போருக்கு
ருசியற்று விருந்தாவான்

தொடுவோருக்கு
பரிசமற்று அணைப்பாவான்

பிரபஞ்சத்தின்
ஒரே ஒரு நாடகத்தில்
ஒரே ஒரு பாத்திரப் படைப்பு

நட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்

நட்பென்னும் கவிதை
(நட்புரை)

- கவிஞர் சேவியர்

கவிதைகள் குறித்த நோக்கமும் போக்கும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் எனக்குச் சொல்வது ஒன்றைத் தான். கவிதை இன்னும் இருக்கிறது. தென்றலென்றோ, வாடையென்றோ, புயலென்றோ பெயரிட்டழைப்பது காற்று இருக்கும் இடத்தில் தானே. பெயர்களைப் பார்த்துப் பதட்டப்படாமல் காற்று இருப்பதனால் கவலையற்று இருக்கக் கற்றுத் தந்திருக்கிறது காலம்.

குளிர் பற்றிய ஒரு கவிதையை ஒரு முறை இணையத்தில் வாசித்தேன். மனதுக்குள் பனியை விளையச் செய்து விழிகளில் வியப்புச் சொடுக்கெடுக்க வைத்த அற்புதக் கவிதையாய்த் தோன்றியது எனக்கு. அப்போது ஒரு மின்னஞ்சல் எழுதிப் போட்டேன் அதை எழுதியவருக்கு. அந்த அறிமுகம்தான் இன்று நட்புரை எழுதுடா என்று மின்னஞ்சல் மூலமாகத் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

நண்பர் புகாரியின் கவிதைகளை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம், கண்டு, கேட்டு, உண்டு , உயிர்த்து , உற்றறியும் ஐம் புலன்களுக்குள்ளும் அற்புதமாய்க் கிளர்ந்து வரும் அவரின் கவிதைகளை அதனதன் கனத்துடனும், கலைந்து விடாத கவனத்துடனும் கவிதைக் களத்தில் மிக சாமர்த்தியமாக அவர் எடுத்துக் கொட…

வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி

Image
வைரமுத்து கவிதைகளில் எது எனக்கு மிகவும் பிடித்த கவிதை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் சிரித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவேன். ஏனெனில் அதைத் தேடத் தொடங்கினால் அந்தத் தேடலில் நான் அப்படியே தொலைந்துபோய்விடக்கூடும்.

ஒவ்வொரு கவிதையிலும் தன் உயிரை எப்படித்தான் இவர் இறக்கி வைத்துவிடுகிறாரோ தெரியவில்லை. எதில் அவரின் எத்தனை சதவிகித உயிர் எப்படித் துடிக்கிறது என்று நான் கண்டறியும்முன் என் துடிப்புகள் உச்சத்துக்குப் போய்விடும்.

எனவே திருவுளச்சீட்டு எடுப்பார்களே அதுபோல ஏதோ ஒரு கவிதையைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்துக்கொண்டு நான் அதில் எதை ரசித்தேனோ அதை எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தபோது என் தமிழ்ப் பேராசிரியரால் வைரமுத்து எனக்கு அறிமுகமானார். வைகறை மேகங்கள் என்ற கவிஞரின் முதல் தொகுதியிலிருந்து இரு வரிகளை எடுத்து புதுமை வரிகள் என்று அடையாளம்காட்டியதுதான் அவர் செய்த அறிமுகம். ஆனால் நான் வாசித்த வைரமுத்துவின் முதல் கவிதை நூல் திருத்தி எழுதிய தீர்ப்புகள்தான். அதன் ஒவ்வொரு கவிதையும் என் வேர்களை அறுத்துக்கொண்டு என்னைப் பறக்கச் செய்தது.…
மகளிர்தின வாழ்த்துக்கள்

பெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.

தாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.

க‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.

அத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.

ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் இறைவனாலும் புகழப்படுபவள்.

அம்மா என்றழைத்தால் சில பெண்கள் கொதித்தெழுகிறர்கள்....

Image
அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்

அம்மா - தங்கை
அம்மா - மகள்
அம்மா - பேத்தி
அம்மா - வேலைக்காரி
அம்மா - தாய்
அம்மா - எஜமானி
அம்மா - நண்பரின் தாய்
அம்மா - கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா - காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா - நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா - பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா - அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா - தமிழ் (தமிழன்னை)
அம்மா - தெய்வம்
அம்மா - மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா - துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா - வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா - கலைஞரின் எதிர் இருக்கை :)
அம்மா - மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா - பெண்கள்
அம்மா - …

சட்டமா? சிந்தனையா? எது சரி? ஏன்?

இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பா என ஜனநாயக நாடுகள் அனைத்திலும் அபார்ஷன் செய்யும் உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றார் ஒரு நண்பர்.

சில நாடுகளில் பெண்கள் விபச்சாரம் செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சில நாடுகளில் யாரும் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம், அதெல்லாம் சட்டத்தின் பிரச்சினை இல்லை என்கிறது.

இந்த சட்டப்பூர்வம் என்பதை முதலில் ஒதுக்கி வையுங்கள். அது நாட்டுக்கு நாடு மாறுபடுவது. மதக்கருத்துக்களை ஒதுக்கி வையுங்கள். அதுவும் மதத்துக்கு மதம் மாறுபடுவது.

உங்கள் கருத்து என்ன? ஏன்? என்று விளக்கமாக எழுதுங்கள். அதுவே நாளையை முடிவுசெய்யும். சட்டம் சொல்வதை நீங்கள் திருப்பிச் சொல்வதற்கு நீங்கள் ஏன் வேண்டும். நான் நேரே சட்டத்தைப் பார்த்துக்கொள்வேனே?

இந்த நாட்டின் சட்டங்களை இயற்றியவர்கள் விவரம் தெரியாமலா சட்டங்களை இயற்றினார்கள் என்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் சட்டத்தை மாற்றுகிறார்களே, என்றால் முன்பு விபரம் தெரியாமல்தானே செய்திருக்கிறார்கள் என்கிறேன் நான்.

ஆளும்கட்சி மாறும்போதெல்லாம் சட்டமும் மாறுகிறது. ஆட்சி மாறியதும் மீண்டும் தடுக்கப்பட்ட ஒரு சட்டமே முறையான…

அழகே அழகு

அழகு என்பதும் ”பர்சனாலிடி” என்பதும் முற்றிலும் வேறு வேறு என்று தமிழில் சொல்லமுடியாது.

பர்சனாலிடி என்பது ஆளுமைதான். ஆளுமை என்பது குணாதிசயங்கள்தாம். நல்ல குணாதிசயங்கள் என்பது ஒருவரின் அழகுதானே! அழகு என்றதும் நாம் புற அழகை மட்டுமே நினைக்கத் தேவையில்லை.

ரஜினியைப் பார்த்து உங்க ஸ்டைலே அழகு தலைவா என்கிறோம் - இது புற அழகா?
வைரமுத்துவைப்பார்த்து நீங்கள் பேசுவது பேரழகு என்கிறோம் - இது புற அழகா?
காமராஜரைப் பார்த்து நீங்கள் அரசியல் செய்யும் அழகே அழகு என்றோம் - இது புற அழகா?

அழகு என்ற தமிழ் வார்த்தை மிகவும் விரிந்த பொருளுடையதல்லவா?

கவர்ச்சியும் அழகுதான். கவர்ச்சி என்பது புற அழகால் மட்டுமா வருகிறது? காண்பதற்கு அழகாக இருக்கிறது என்பதும் பழகுவதற்கு அழகாக இருக்கிறது என்பதும் வேறு வேறுதான்.
தமிழில் அழகன் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் அப்படி நேரடியாய் இருப்பதாய்த் தெரியவில்லை.

அழகிப்போட்டியில் 60 வயது கிழவிகள் ஏன் வருவதில்லை? புற அழகும் இளமையும் அங்கே அழகுக்கான முக்கிய அளவுகோள். அதன் பின்னறே குணாதிசயஙக்ள் ஆளுமைகள் எல்லாம்.

”பெர்சனாலிடி டெவலப்மெண்ட்” என்பது முற்றிலும் வேறு. அங்கே நடை…

ஆனந்தம் நிறைந்த முதல் அழுகை

நம் வாழ்க்கை நம்மிடம்தான் இருக்கிறதா அல்லது யார் யாரோ அதை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ ஓடி ஆடி விளையாடுகிறார்களா?

பிறந்து விழுந்த உடனேயே நம்மையும் அறியாமல் நாம் நம் வாழ்க்கையை தேடி விழிகளால் புறப்படுகிறோம். அல்லது புறப்பட்டதாய் பிற்காலத்தில் கற்பனை செய்துகொள்கிறோம்.

பிறந்து விழுந்ததும் வாழ்க்கைக்குள்ளேயே படுத்துக்கொண்டு வாழ்க்கையை எங்கே தேடி ஓடுவது?

ஆம், அம்மா மடியைவிட வேறு வாழ்க்கை இருக்க முடியுமா? அம்மா மடியின் கதகதப்பில் கண்கள் மூடிக்கிடக்கிறோம்.

சுகமான வாழ்க்கை. வேறு எப்போதும் எங்கேயும் கிடைக்கவே கிடைக்காத சுகம்கொண்ட பெருவாழ்க்கை.

தாய்ப் பாலின் சூடு இதயத்தின் இடுக்குகளிலும் பரவிக்கிடந்த நாட்கள் ஞாபகங்களில் இருப்பதில்லை ஆனால் மிகுந்த சுகத்தோடு அனுபவித்திருக்கிறோம்.

இதில் ஒரு சங்கடம் உண்டு. எதை நாம் அனுபவிக்கிறோமோ அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அறிவற்றிருப்பது. அதன் மேன்மை தெரியாமல் அதை விட்டு விட்டு எழுந்து ஓடுவது. பின் அந்த பாச சூட்டின் தேவ ஈர்ப்பால் மீண்டும் ஓடி வந்து தன்னை அறியாமலேயே ஒட்டிக்கொள்வது.

எல்லாம் சரிதான், ஆனால் அந்த பாக்கியம் என்பது எல்லோருக்கும் ஒன்றுபோலவே நிறை…