நெஞ்சுக்கு நிறைவான ஒருநாள் - இது
மாண்புறு நோன்புக் கஞ்சித் திருநாள்

செய்யவேண்டும் செய்யவேண்டும் என்று சில வருடங்களாய்ச் சிந்தனையில் மட்டுமே இருந்த அந்த நாள் இந்த வருடம் நிகழ்ந்தேவிட்டது.

ஆனந்தக் காற்றில் அசைந்தாடுகின்றன என் இதயத்தின் உணர்வு இழைகள்.

முஸ்லிம் அல்லாத என் டொராண்டோ அன்புச் சகோதர்களையும் சகோதரிகளையும் அழைத்து ரமதான் நோன்புக் கஞ்சி பறிமாறும் பரவச நிகழ்ச்சி.

2019 மே மாதம் 24ம் தேதி நோன்பு திறக்கும் நேரமான இரவு 8:45 வரை அனைவரும் காத்திருந்தார்கள். ஒரே சமயத்தில் அனைவரும் நோன்புக் கஞ்சியை ருசி பார்த்தார்கள்.

பசி என்ற ஒன்று இல்லையென்றால் ருசி என்ற ஒன்றே இருக்காது.

இயன்றவரை நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது நீர் அருந்தாமல் வாருங்கள் என்று அன்பு அழைப்பு விடுத்திருந்தேன். அப்படியே செய்திருந்தார்கள் என் அன்பிற்கினிய நண்பர்கள்.

ஏங்கித் தவித்திருந்த நாக்கின் நரம்புகளில் மாண்புறு நோன்புக் கஞ்சி ஒரு திருவிழாவே நிகழ்த்தியது.

எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும், அசைவமே உண்ணாத ஸ்ரீவித்யா என்னிடம் வெஜிடேரியன் நோன்புக் கஞ்சி குடிக்க ஆசை சார் என்றார்.

அதுவரை என் எண்ணத்தில் மட்டுமே சுற்றிச் சிற்றி வந்த அந்த என் விருப்பம் அன்று செயலில் இறங்கியது. மனைவியிடம் கேட்டேன், தாராளமாக என்றார். ஒருவருக்காக மட்டும் என்று செய்யாமல், ஊர் கூட்டிச் செய்ய வேண்டும் என்ற என் விருப்பமும் நிறைவேறியது.

இந்நிகழ்ச்சி இவ்வாண்டு தொடங்கக் காரணமாய் இருந்த ஸ்ரீவித்யாவிற்கும், என் அழைப்பை ஏற்று இன்முகத்தோடும் குழந்தைகளோடும் வந்து குவிந்த பாச நெஞ்சங்களுக்கும் என் நன்றி மாமழை.

இனி இந்த நோன்புக் கஞ்சித் திருவிழா வருடா வருடம் நிகழும். முப்பது நாட்களில் ஓர்நாள் என் இந்துச் சகோதர்களும் என் கிருத்துவச் சகோதரர்களும் குடும்பத்தோடு அழைக்கப் படுவார்கள்.

மாண்புறு நோன்புக் கஞ்சி வாஞ்சையாய் வழங்கப்படும்.

கனடாவிலிருந்து அன்புடன் புகாரி
https://www.facebook.com/anbudanbuhari/posts/3073963915962094

அருகாமை என்றால் என்ன?

இந்த ஆமையை கவிழ்த்துப் போட்டும் குறுக்காகப் போட்டும் நிமிர்த்திப் போட்டும் நிறைய உரையாடல்கள் பலகாலமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஒரு மொழி வளரக்கூடியது என்ற உண்மையை சிலர் உணர்வதே இல்லை. அப்படியே உறைந்துபோன ஒன்று என்ற நினைப்பிலேயே உரையாடிக்கொண்டிருப்பார்கள்.

நாற்றம் என்றால் என்ன? சங்க இலக்கியங்களில் அது நல்ல மணம். இப்போது அது கெட்ட மணம். ஏற்கவில்லையா நீங்கள்?

காமம் என்றால் என்ன? சங்ககால இலக்கியங்கள் அது காதல். இப்போது அது செக்ஸ். ஏற்க வில்லையா நீங்கள்?

அவைகள் என்றால் என்ன? சங்ககாலதில் அவை அரங்குகள் மன்றங்கள். இன்று அவர்கள் என்ற பொருளிலும். ஏற்கவில்லையா நீங்கள்?

அசால்ட் என்பது ஆங்கிலத்தில் அட்டாக். தமிழில் அதன் பொருள் என்ன? ஏற்கவில்லையா நீங்கள்? (இதை ஏற்பது சிரமம்தான் ;-))

அருகாமை என்பதை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

அருகாமை என்றால் அருகில் செல்லாமை அருகில் இல்லாமை என்று சொல்லிப் பாருங்கள், பெரிய பெரிய எழுத்தாளர்களும் சிரிப்பார்கள்.

அருகாமையில் இளமாமயில் என்று ஒரு கவிஞன் திரையில் பாடினான். எவருக்கும் ஐயம் ஏதும் வரவில்லை. சரியாகவே புரிந்துகொண்டு ரசித்தார்கள்.

தமிழ் மக்கள் மொழி. புழக்கம் சில சொற்களைப் படைக்கும். அவற்றை ஏற்கும் மொழி. ஆனால் சிலர் ஏற்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஏற்போரே பெரும்பான்மையினர் என்பதைக் கருத்தில் கொள்க.

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88

இதில் இரண்டு வாதங்களையும் பார்க்கலாம்.

க்ரியா தற்காலத் தமிழ் அகராதியில் அருகாமைக்கு அருகில் என்ற பொருள் கொடுக்கப்பட்டு ஆண்டுகள் 30க்கும் மேல் ஆகிவிட்டன.

அன்புடன் புகாரி
இந்து/இந்துஸ்தான் மைனஸ் தமிழர்கள் = இந்துத்துவா.

அது வேறு எப்படிச் செயல்படும்?

தமிழர்களைப் பிரித்தாள முடிகிறது அவர்களால்

தமிழர்களை, தமிழ் நிலங்களை, தமிழ் வாழ்வாதாரங்களைச் சிறுகச் சிறக அழிக்க முடிகிறது அவர்களால்

தமிழர்களைத் தமிழ் தத்திகளைக் கொண்டே அரசாளவைத்து அழித்துமுடிக்க முடிகிறது அவர்களால்

ஒருங்கிணைந்த உலகத் தமிழர்கள் இந்துத்துவாவின் முதன்மை எதிரிகள் என்பதே அவர்களின் கூற்று

தன் நாட்டுக்குள்ளேயே நாடோடி தமிழன் மட்டும்தான். நாடுவிட்டே ஓடோடச் செய்கிறார்கள்.

உறுதியான தமிழ்த் தலைவர்கள் ஒருவரையும் காணவில்லை இன்று.

தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது சும்மா வருமா?

தலைவர்களின் வருகையால்தான் வரும்.

வரலாறுகள் தெளிவாகவே இருந்தும் காந்தியைக் கோட்சேவாகவும் கோட்சேவைக் காந்தியாகவும் திரித்துக் கூறி உண்மையாக்குகிறார்கள்

அற அழிவு உச்சம் தொடும்போதெல்லாம் ஒரு பெரும் மாற்றம் வரவே செய்யும்.

வரவேண்டும்! வரட்டும்!

அன்புடன் புகாரி
https://www.facebook.com/photo.php?fbid=3055905904434562&set=a.100183646673484&type=3&theater

தமிழ்பற்றி உரையாடினாலே அது ஒரு தனி இன்பம்தான்

இன்று காலை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

டொராண்டோ தமிழ் இருக்கைக்குத் தேவையான 3 மில்லியன் டாலர்களில் கிட்டத்தட்ட  1 மில்லியன் டாலர்கள் ($50,000 குறைவு)  திரட்டப்பட்டுவிட்ட நற்செய்தியை மிகுந்த மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்.

ஓராண்டுக்குள் 1 மில்லியன் டாலர்கள் திரட்டுவதுதான் உச்சநிலைக் குறிக்கோளாய்க் கொள்ளப்பட்டது. ஜூன் மாத இறுதிக்குள் உறுதியாக 1 மில்லியனைத் தாண்டியதாகவே அது வெற்றிநடை போட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு 2018 ஜூன் மாதம்தான் டொராண்டோ தமிழ் இருக்கைக்கான  தொடக்கப்பணி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கையெழுத்தானது . இன்னும் ஓராண்டே நிறைவுறாத நிலையில் இது ஒரு  சாதனைதானே?

இச்சாதனையை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் அயராத உழைப்பு இல்லாவிட்டால் நிகழ்த்துவது மிகக் கடினம்.

அன்று இளவயதில் ஒரு சிறுகதைக்கு விருது வாங்கிய அ. முத்துலிங்கம் அவர்கள் தன் வெளிநாட்டுப் பணிகள் காரணமாக முப்பது ஆண்டுகள் வனவாசம் இருப்பதுபோல எழுதாமலேயே இருந்தார். பணி ஓய்வு பெற்றதும் படபடவென எழுதத் தொடங்கினார். அதுவும் வித்தியாசமாக தனக்கென ஒரு தனிநடை கைவரப் பெற்று எழுதினார். அந்தத் தனி நடை உருவாவதற்குக் காரணம் அவர் எப்போதும் எதையும் இதயத்திலிருந்தே பேசுவதால், அப்படியே எழுதுவதால் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்று அவர் ஏராளமான விருதுகள் குவித்து பெருமை பெற்றதையும்விட, உலகின் தலை சிறந்த எழுத்தாளர் இன்று இவர்தான் என்று  பெரிய பெரிய எழுத்தாளர்களாலேயே புகழப்படுவது பெரிதினும் பெரிதுதான்.

எப்படி அவரைப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியாமல், தமிழ் நாடாய் இருந்திருந்தால் உங்களுக்குச்  சிலை வைத்துவிடுவார்கள் என்றேன். நான் அப்படிப் புகழ்ந்ததற்குக் காரணம் அவரின் எழுத்து மட்டும் அல்ல, தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் பெருஞ்சேவை.

இன்று உலகப் புகழ் பெற்றுவிட்ட கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதும், டொராண்டோ தமிழ் இருக்கையும் அவருடைய சேவைகளுள் முக்கியமானவை.

தானுண்டு தன் எழுத்துண்டு அது பெற்றுத் தரும் பெரும் புகழுண்டு என்று சுயநலமாய் இருந்துவிடாமல், இந்த வயதிலும்  அ. முத்துலிங்கம் அவர்கள் ஓடி ஓடி தமிழ்ச்சேவையில் அயராது உழைப்பதைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை. வாழும்போதே அவரைப் பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன்.

எதிர்பாராத விதமாகத் தமிழ்நாட்டிலிருந்து டொராண்டோ தமிழ் இருக்கைக்காக யாரென்றே தெரியாதவர்களிடமிருந்தும் நிதி வந்திருக்கிறது, தமிழர் அல்லாத ஒரு வெள்ளைக்காரர்கூட 300 டாலர்கள் அனுப்பி வைத்திருக்கிறார் என்ற தகவல்களை ஆர்வத்தோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார். மகிழ்ந்தேன்.

உலகத் தமிழர்களே, உங்களின் பங்களிப்பு ஒரு டாலராக இருந்தாலும் சரி, சற்றும் தாமதிக்காமல் உடனே அனுப்பி வையுங்கள், டொராண்டோ தமிழிருக்கையில் அமரப் போகும் தமிழன்னை உங்களை என்றென்றும் வாழ்த்திப் பாராட்டுவாள்.

http://torontotamilchair.ca/

அன்புடன் புகாரி

கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை

This entry is part of 46 in the series 20031218_Issue
வே.ச. அனந்தநாராயணன்


பொன்னிலும் பொருளிலும் நிறைவு காணாமல் தவிக்கும் மனித உள்ளத்தை, ஊனில் புகுந்து உணர்வைத் தொட்டு
எழுப்பும் கவிதை முழுமையாக்கிப் புன்னகை பூக்க வைக்கிறது. ஆதலால், அத்தகைய கவிதையைப் படைக்கும்
திறமை பெற்றவர்களை உலகம் மன்னர்களுக்கும் மேலாக மதித்துப் போற்றுவதில் வியப்பில்லை. தொன்றுதொட்டு
இன்றுவரை தொடர்ந்து ஆயிரமாயிரம் கவியரசர்களாகச் சேர்ந்து, நம் தமிழினத்தைக் கவிதையின் சுவையை
நுகரும் நுண்ணுணர்வு கொண்ட இனமாக உருவாக்கியுள்ளார்கள். இதை, தமிழின் இத்தகைய தனிச்சிறப்பை,
உலகுக்குப் பறைசாற்றும் வகையாக அமைவதே கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழாக்கள்.
இன்று நாம் கொண்டாடும் கவிஞர் புகாரி அவர்களின் இரண்டாவது கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்கு முதற்காரணம் ‘இணையம் என்னும் ஒற்றை மகா மின்மரம் ‘ என்று நம்
கவிஞரால் வருணிக்கப்படும் ‘உலகஅரங்க ‘மே. என்றோ தொடர்புவிட்டுப் போன தமிழோடு என்னை மீண்டும்
உறவாட வைத்த தமிழ் இணையத் தளங்களின் வாயிலாகவே கவிஞர் புகாரியின் கவிதைகள் சில ஆண்டுகளுக்கு
முன்பு எனக்கு அறிமுகமாயின. அந்த உறவின் பிணைப்பு நாளாக ஆக இறுகிக்கொண்டு வந்து இன்று கவிஞரின்
‘அன்புடன் இதயம் ‘ நூல் வெளியீட்டு விழாவில் எனக்கும் ஒரு பங்கைத்தரும் ஆற்றல் படைத்ததாக அமைந்த
விந்தையை எண்ணி என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை.
மணிமணியாக முப்பது கவிதைகளைக் கொண்டு தொகுத்த மாலையான ‘அன்புடன் இதயத்தை ‘ப் படிக்கையில் நம்
நெஞ்சில் பல்வேறு துடிப்புகள் மாறிமாறிப் பயில்வதைப் பார்க்கிறோம். முதல் பாடலிலேயே, நம்
தாய்மொழியின் ஏற்றத்தைக் கவிதையின் நடையழகிலும் பொருள் அழகிலும் நாம் உணரச் செய்கிறார்.
அதைப்படித்தவுடன்:
கவிதை பிறந்திடும் இதயம்- பிறர்
இதயம் திறந்திடும் கவிதை
அறிவினில் உதிக்கின்ற சொற்கள் – அந்தச்
சொற்களில் புதைந்துள்ள அறிவு
கணினிக்குள் விளையாடும் புதுமை – அந்தப்
புதுமையால் களைகட்டும் கணினி
கட்டை உடைத்தோடும் பாய்ச்சல்- அந்தப்
பாய்ச்சலைப் பதமாக்கும் கட்டு…..
என்று அவர் வடித்த வகையிலேயே நம்மையும் அவர் கவிதையைப் புகழ்ந்து பாடுமாறு நம் இதயத்தில் ஒரு உந்துதல்
பிறக்கின்றது! இதை அடுத்து வரும் காதலும் கனிவும் கொண்ட பாடல்கள் நம் இதயத்தில் ‘சொட்டுச் சொட்டாய்
அமுத அழகை ‘ வார்க்கின்றன. மேலே தொடர்ந்து, வேதனையும் விரக்தியும் விரவி மனத்தின் அடித்தளத்தைத்
தொடும் பாடல்களும், அந்நிலையிலிருந்து நம்மைப் பிரபஞ்ச வெளிக்குக் கொண்டுசென்று சிறகடிக்க வைக்கும்
‘பஞ்சபூத ‘ப் பாடல்களும், ஒரு விந்தைக் கவிஞனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவனுடன் நம்மைப் பயணம் செய்ய
வைக்கின்றன. அதன் விளைவால் எழுந்த உணர்வைச் சொற்களில் வடிக்க முயல்கிறேன்:
தேரளித்தான் முல்லைக்(கு)அன்று பாரி – தமிழ்த்
…. தேருக்குப்பூப் புனைவர்இப்பு காரி!
பாரில்இவர் பாடல்பல கோரி – வரும்
…. பசிமறந்து பத்தர்களின் சாரி!
ஊர்மகிழக் கவிஉணவை வாரி – அன்பாய்
…. ஊட்டுவதில் நேர்இவர்க்கு மாரி!
காரெழிலாள் கன்னித்தமிழ் நாரி- முகம்
…. காணுமிடம் இவர்கவிதை ஏரி!
நல்லகவிதை இன்ன வகையில் தான் அமையவேண்டும் என்று யாராலும் வரையறுக்க இயலாது. இந்த உண்மையைப்
புகாரி தம் கவிதைகளால் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். சீர், தளைகள் போன்ற கட்டுப்பாடுகளும் ஓசை நயமும்
கொண்ட கவிதைகளின் சாரத்தை, தம் தனிப்பட்ட கவிதை நடையில் தருவது இவருக்கே கைவந்த ஒரு பெரும்
கலை. இதை ‘அன்புடன் இதய ‘த்திலும் இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘வெளிச்ச அழைப்புகளி ‘லும் தெளிவாகக்
காணலாம். இந்த ‘மரபு சார்ந்த புதுமை ‘க்குக் காரணம் கவிதையின் ஓசையில்/இசையில் கவிஞர் புகாரிக்கு
உள்ள நாட்டமே என்று கூறலாம். அந்த நாட்டமே இவரது கவிதைகளைப் பல்வேறு தளங்களில் உள்ள மாந்தரும்
விரும்பிப் படிப்பதற்கும் காரணமாகத் திகழ்கிறது.
புகாரி கவிதைப் பொழிலின்உள்ளே
…. புதுமையும் மரபும் பொலிந்திடும்;பூம்
புகாரின் பழமையும் புதுநிலவாய்ப்
…. பொங்கிடும் அழகும் பூக்கும்;அங்கே
புகாரிங் குளரோ ? புகுந்தவரின்
…. ‘போனது உள்ளம் கொள்ளை ‘என்னும்
புகாரைக் கேட்போர் புரிந்துகொண்டு
…. ‘போகட்டும் ‘ என்பார் புன்னகைத்து!
என் அருமை நண்பரும் பெரும் கவிஞருமான புகாரியின் கவிதை மலர்கள் ஆண்டாண்டுக் காலமாக உலகெங்கும் பூத்துக்
குலுங்க வேண்டுமென்று நான் மனமார வாழ்த்துகிறேன்!
————————-
Series Navigation
வே.ச. அனந்தநாராயணன்

சூப்பர் ஸ்டார் சுஜாதாஒவ்வொரு விரலும்
எழுத்தாணியாக
பத்து விரல்களாலும்
எழுதியவர் சுஜாதா

கணினிக்குள்
சிப்புகளாகவே ஆகிப்போக
இளைஞர்களை
உசுப்பிவிட்டவர் சுஜாதா

நவீனத்தின் மடிகளில்
தமிழைத் தாலாட்டியவர்
சுஜாதா

தமிழின்
மரபுகளையும் விசாரித்து
தொல்லிலக்கியங்களிலும்
தோய்ந்தவர் சுஜாதா

தமிழ்த் திரைப்படங்களில்
ஹாலிவுட் மின்னல்கள்
தெறிக்கச்செய்தவர் சுஜாதா

நகைச்சுவைகளுக்கும்
அறிவுப்பொறிகளுக்கும்
தையலிடாமலேயே
நெய்து வென்றவர் சுஜாதா

அவதூறு விமரிசங்களுக்கும்
அளவோடு மறுமொழி
தந்தவர் சுஜாதா

இருபது வயது
இளைஞனோடும்
இளமைதுள்ள
தோள் சேர்ந்தவர் சுஜாதா

சிற்றிதழ்களிலும்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா

இணையத்திலும்
அச்சுக்களிலும்
இணையாக உலாவந்த
முதல் எழுத்தாளர் சுஜாதா

தன் நாள்
நெருங்கி வருவதை
அறிந்தவராகவும்
அதை நமக்கெலாம்
அறியத்தந்தவராகவும்
இருந்தார் சுஜாதா

பலகோடி தமிழர்களின்
கண்ணீர் அஞ்சலிகளால்
அவர் வழியனுப்பப்படுவார்
என்றும் அறிந்திருந்தார்
சுஜாதா

பிறந்தநாள் மே 3, 1935 - நினைவுநாள் பிப் 27, 2008என் வலைப்பூவில் வந்து விழுந்த சில இரங்கல் செய்திகள்

a.muttulingam said...

அன்புள்ள நண்பரே,
உங்கள் கவிதை என் துக்கத்தை இன்னும் கூட்டியல்லவோ போய்விட்டது. பத்துவிரல்களாலும் எழுதியவர்.

உண்மையிலும் உண்மை.

It is a great loss and it will take some time for me to recover from it. Usually he replies my email immediately and my last email remains unanswered up to now. It will never be answered again.

anbudan
a.muttulingam
சுஜாதாவைப் பற்றி நல்ல குறிப்பு... ஆழ்ந்த இரங்கல்கள்.P. Kanagasabapathy said...

Thank you very much. My son and I are ardent readers of Sujatha. He has more than 25 of his books. Infact he was the one to call me yesterday morning and inform me about his demise. He felt as if he has lost a member of the family. I will be writing about Sujatha in Uthayan.

P. Kanagasabapathy


உண்மைதான் கனகசபாபதி மாஸ்டர்,

வயது வித்தியாசமில்லாமல் இளையோரும் முதியோரும் அஞ்சலி செழுத்த வந்து நிற்கிறார்கள் சுஜாதாவுக்கு!
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்புடன் புகாரி said….

துளசி கோபால்,

ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்த்¢ருக்கிறார்.


என்று ஜெயமோகன் தன் அஞ்சலியில் கூறியிருக்கிறார்.

நன்றி புகாரி. நானும் ஜெ.மோ.வின் பதிவைப் படிச்சேன்.

மனுஷ்யபுத்திரனை 'வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது சுஜாதா'ன்னு அதுலே தெரிஞ்சது. இது ஒரு புதிய தகவல்தான் எனக்கு.

மரணம் இயற்கையான நிகழ்வுன்னாலும்.......மனசு தாங்கலை.
எதிர்பார்த்துத்தான் இருந்தோம் இருந்தாலும் மனசு தாங்கல என்று சொல்லுங்கள் துளசி கோபால்Sakthi Sakthithasan said...

அன்புநிறை புகாரி,

அழும்போதும் உங்கள் கவிதையின்
அழகுடன் சேர்ந்து கண்ணீர் சொட்டுகிறது
இதைத்தவிர சுஜாதா அவர்களுக்கு
என்ன அஞ்சலி செய்துவிட முடியும்

துயருடன்
சக்தி
கவிதையாக எழுதவில்லை, மரண ஊர்வலத்தில் என் உடன்வரும் நண்பரிடம் பேசிக்கொண்டு செல்வதுபோல் நினைவு கூர்ந்திருக்கிறேன் சக்திமனம் கலங்குகிறது - சுஜாதா என்ற எழுத்தின் இமயம் சரிந்தது. மரணம் என்பது வரத்தான் செய்யும். 1970 களிலிருந்து நைலான் கயிறு, வானமென்னும் வீதியிலே ஆரம்பித்து ........ அததனை கதைகளையும் விடாமல் படித்தவன் நான். இரங்கற் செய்தி கூட எழுதுவதற்கு கை மறுக்கிறது. நம்ப முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.Kavingar Singai Iqbal said...

சுஜாதாவின்
மெய்யெழுத்து மறைந்தது
ஆயினும் அவரின்
உயிரெழுத்து மறையாது

வாழ்வில் இறப்பதிலும்
சுஜாதாபோல் மரணத்தில் வாழ
விருப்பம்

இக்பால்


//சிற்றிதழ்களிலும்
வெகுஜன பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா//

உண்மைதான்.இது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்? இதுவே அவர் இலக்கியத் திறமைக்கு அத்தாட்சி.
அவர் குடும்பத்தாருக்கும் அவரை அறிந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.prabu KUMARAN said...

தமிழ் எழுத்துலகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும்,விஞ்ஞானத்துறைக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு திரு.சுஜாதாவின் மறைவு. உடலால் மறைந்தாலும் தன் எழுத்துக்களாலும்,சிந்தனைகளாலும்,சாதனைகளாலும் நம்மோடு என்றும் இருப்பார் திரு.சுஜாதா. அவரது மறைவிற்கு இதய அஞ்சலிகள்.
த‌.பிரபு குமரன்.


Pon Santhar said...

73 வயது இளைஞர் மறைந்து விட்டார்..மரணத்தை எதிர் பார்த்தே இருந்தார்...."கற்றதும் பெற்றதும்" - அவர் அனுபவங்கள்...
புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது அவரால்தான்...

அவர் புகழ் என்றும் மறையாது....

பொன்சந்தர்Siva said...

இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை..அவரின் "சிறீரங்கத்து தேவதைகள்" புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒருவகையில் நான் எழுதிக் கொண்டிருக்கும் "நானும் என் தேவதைகளும்" தொடர்ருக்கான தாக்கம் அதிலிருந்து தான் கிடைத்தது. ஒரு நல்ல எழுத்தாளரை நாம் இழந்து விட்டோம்.. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி

அன்புடன்
சிவா...Gokulan Anantharaja said...

அருமை புகாரி. பல வரிகளில் சொல்ல வேணடியதை சில வரிகளிலேயே சொல்லி விட்டீர்கள். நானும் எனது பதிவில் பதிவிட்டிருக்கிறேன். ஏதோ.. ஒரு பெரிய்ய்..ய எழுத்தாளரிற்கான சிறிய்ய்..ய அஞ்சலி.Girija Manaalan said...

அவர் எழுத்துக்களை நேசித்த ஒவ்வொரு வாசகனின் சோகத்தையும், அவரைத் தம் எழுத்துலக வழிகாட்டியாக ஏற்று இன்று அவர் பிரிவால் வருந்தும் எண்ணற்ற படைப்பாளர்களின் சோக த்தையும் அப்படியே உங்கள் இரங்கற் கவிதையில் வடித்துள்ளீர்கள்.
இனி சுஜாதா தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் வாழ்வார்! அந்த எழுத்துலக மாமேதைக்கு எங்கள் திருச்சி மாவட்ட படைப்பாளர் சங்க உறுப்பினர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.


sujathalogy.com தளத்தில் அஞ்சலி செலுத்தலாம்.Ravi Chandran said...

Sujatha was part of my growing up. His writing encouraged me to read more and read a wide variety of books.

I simply assumed that stars like Sujatha live forever and it struck me hard to realize otherwise! 73 is a young age and it is a great loss for us to see him go.

Ravi ChandranP.Velmurugan said...

I read out ur new poetry in thinnai .com - topic on " super star sujatha" on 5th march2008

It Very nice
Touch of my heart.

success ur field

god with u

Thank u

P.Velmurugan
head, dept. of tamil lit.(UG/PG)
N G M College
pollachi- 642001