அறிவியல் தமிழும் புதுச் சொல்லாக்கமும்
-------------------------------------------------------------------
தனியார்ப் பள்ளிகளில் தமிழ் அவசியமில்லையாம் தமிழ்நாட்டில்.
நான் ஊர் சென்றால் காணும் ஏராளமான இளைஞர்களுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரிந்திருக்கிறது. எழுதவும் வாசிக்கவும் தெரியவில்லை.
அவர்கள் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களும் ஒரு நூறைக் கூடத் தாண்டாது.
தமிழில் அவர்கள் ஓர் அறிவியல் கட்டுரையை வாசிக்கக்கூட வேண்டாம், அதை வாசிக்கக் கேட்டால் அவர்களால் ஒரு வார்த்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாய் இல்லை.
தமிழில் மொழிக்கூறுகளை ஊன்றிப் படிக்காவிட்டாலும் அறிவியல் பயிலவாவது அவர்கள் முன்வரவேண்டும். இல்லாமல் தமிழுக்கு வளர்ச்சி உண்டென்று நான் நம்ப மாட்டேன்.
ஆங்கிலத்தில் எனக்கு இலக்கியம் தெரியாது. ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் அறிவியல் கட்டுரைகளையும் வணிக, கணித, சரித்திர, பூகோளக் கட்டுரைகளையும் வாசிப்பதில் ஏதும் சிக்கலே இல்லை.
ஆனால் சில தமிழ் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினால், தங்குதடை இல்லாமல் வாசிப்பது இயலாததாக இருக்கிறது
சொல்லாய்வின் பல சொற்கள் நல்லவைதான் ஆனால் அவை தமிழறிஞர்களால் மட்டுமே உச்சரிக்கவும் மனனம் செய்யவும் ஏற்றதாக இருக்கின்றன.
அவ்வகைச் சொற்கள் இலக்கிய உலகில் அவசியமானவைதான். ஆனால் அறிவியல், கணிதம், வணிகம் போன்றவற்றின் துரித வளர்ச்சி உலகில் அவை தடையாகவே உள்ளன என்பதை மறுக்க முடியுமா?
அன்புடன் புகாரி
Random Numbers தமிழில் என்ன?
ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்காமல், ஏதும் சிந்தனையை மேற்கொள்ளாமல், எந்தத் திட்டமும் தீட்டாமல், செய்யும் ஒரு செயலுக்கு கிராமத்தில் ”குருட்டாம்போக்கில்” என்று சொல்வார்கள்
குருட்டாம்போக்கு எண்கள்
குருட்டுவழி எண்கள்
ran·dom
/ˈrandəm/Submit
adjective
1.
made, done, happening, or chosen without method or conscious decision.
"a random sample of 100 households"
synonyms: unsystematic, unmethodical, arbitrary, unplanned, undirected, casual, indiscriminate, nonspecific, haphazard, stray, erratic; More
சொல்லாய்வில் ஒவ்வொருவருக்குக் ஒவ்வொரு வழி இருப்பதைக் காண்கிறேன். நான் இதுவரை கிராமப் புறங்களில் அந்தக் காலத்தில் மேற்கொண்ட உரையாடல்களிலிருந்து எடுக்கப் பார்ப்பேன்.
கவிஞர் புகாரி
Percentage - விழுக்காடு என்பது சரியா?
நான் எப்போதுமே ஒரு சொல்லாக்கம் என்று வரும்போது, எங்கள் கிராமத்தில், தாத்தா பாட்டி பேச்சு வழக்கில் என்ன பயன்படுத்தப்பட்டது என்று ஞாபகப் படுத்தப் பார்ப்பேன் முதலில்.
போட்ட முதலில் கால்வாசி தேறினாலே பெருசு
முக்கால்வாசி
காலேஅரைக்காவாசி
கொடுத்த கடன்ல நூத்துக்குப் பத்தாவது கிடைக்குமா?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்
நூற்றுக்கு அறுபது
Percentage, சதம், விழுக்காடு என்று எதையுமே பயன்படுத்தாமல்தான் பேசி வந்திருக்கிறார்கள். பொருள் சரியாகத்தான் வந்திருக்கிறது.
முக்கால்வாசி கால்வாசி அரைவாசி என்பதெல்லாம் 98வாசி என்று பயன்படுத்தத் தகுதியானவையா என்று தெரியவில்லை
பத்துவாசி என்றோ இருபதுவாசி என்றோ எவரும் என்றும் சொன்னதில்லை
பதிலாக
நூத்துக்கு நூறு, நூத்துக்கு எட்டு என்று பேசி இருக்கிறார்கள்
இனி விழுக்காடு பற்றி சிந்தித்தால், ஒரு புதிய சொல்லை ஆங்கிலத்தின் Percent போல பயன்படுத்த முயல்கிறோம். அறிமுகம் செய்கிறோம்.
விழுக்காடு என்பது நூற்றுக்கு எத்தனை என்பதைத்தான் சொல்கிறது.
பத்துக்கு எத்தனை என்று எப்படிச் சொல்வது?
அன்று கிராமத்தில், பத்துக்குப் பத்தும் தேறும் என்றார்கள். (அதாவது நூறு விழுக்காடு)
பத்துக்கு ஏழு தேறினால் பெரிது என்றார்கள். (70 விழுக்காடு)
இப்படியே பத்துக்கு ஐந்துக்கு ஐம்பதிற்கு என்று எல்லாவற்றுக்கும் பயன்படும் சொல் ஒன்று உண்டா?
நாம் ஆங்கில முறைப்படி நூறோடு மட்டுமே ஒப்பிட்டுச் சொல்வோம்.
ஆனால்,
கிராமத்தில் வெகு இயல்பாக எல்லாவற்றுக்கும் சொல்லிச் செல்வார்கள்.
குழப்பம் வந்ததே இல்லை
அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி
மதங்கள் நாடுமுழுவதும்
தாராளமாக இருக்கலாம்

மதவெறி 
நாட்டை ஆள்வதாக மட்டும் 
இருக்கவே கூடாது