Posts

Showing posts from September, 2016
இரண்டும்
உன்னுடையவைதான்

இரண்டிற்கும்
என்மீது
கொள்ளைப் பிரியம்தான்

ஆயினும்
மேலுதடு
வசந்தநிலத் தேனாய்
வழிய...

கீழுதடு மட்டும்
ஏனடி இப்படிக் கொதிக்கின்றது
பாலைவனக் கோடையின்
பேரீச்சங்கனியாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *
உன் கன்னத்தில்
படுத்துறங்க
முடிவெடுத்துவிட்டேன்

எந்தக் கன்னத்தில் என்று
முடிவெடுக்கத்தான்
முடியவே இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

20160925 முகநூல்

* நாம்
நம் தமிழை
வேறு இனத்திடமும் சென்று
என்றுமே
திணித்ததில்லை
எங்களிடமே
அதைக்
கட்டிக்காக்கத்
திராணியற்றுத்
திணறுகிறோம் *

நிசத்தில் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஆனால் கற்பனையில் வாழ்வது பல்லாயிரம் வாழ்க்கை அதுதான் இலக்கிய வாழ்க்கை. அப்படி வாழ்பவன்தான் கவிஞன் கலைஞன்
*
Murugan Arumugam >>>>மந்திரங்களை உச்சரிக்கும்போது நம் உள்ளுக்குள் நிகழும் அதிர்வுகள் நமக்குள் மாற்றம் உருவாக்குபவை. அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் பயன் தரும்<<<<< ஒருவரின் மனம் அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அது நெடுங்காலம் நீடிக்காது. ஒரு மூதாட்டி மருத்துவரைப் பார்க்க வந்தாள். என்ன செய்கிறது என்று கேட்டார் மருத்துவர் தலையில் ஒரே வலி என்றால் மூதாட்டி. சரி என்று ஸ்டெத்தை எடுத்து அவள் மார்பில் வைத்து இதயத்துடிப்பைச் சோதிக்க முயன்றார் மருத்துவர். டாக்டர் எனக்கு தலையில்தான் வேதனை. என் தலையில் வைத்துப் பாருங்கள். என் நெஞ்சாங்கூடு நன்றாக வே இருக்கிறது என்று கோபமாகச் சொன்னாள் மூதாட்டி. மருத்துவரும் தலையில் ஸ்டெத்தை வைத்துப் பார்த்துவிட்டு, தலைவலிக்கு மருந்துகொடுத்தார். சட்டென்ற…

20160920

நீ  அழுக்கா புனிதமா
*
கழிப்பிடத்திற்கும்
தொழுகைக்கும்
ஒன்றே தேகம்

*
தொழுகை என்பது
உடலையும் மனதையும்
தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான
தொடர்ப் பயிற்சி
* இன்றைய
உன்
வாழ்க்கை
உன்னுடையதல்ல
வணிகர்களினுடையது
*

எல்லோருமே கிழித்த கோட்டைத் தாண்டும் சீதைகளாய்..... ராவணனுக்கு யாரைத்தான் கவர்ந்துசெல்வது என்றே அறியாத பெருங் குழப்பம்.... மூக்கறுபட்ட நிலையிலேயே வாகனச் சட்டங்கள்... மாயமான்களாகக் கட்டற்ற மூர்க்கச் சுதந்திரம்... வனம்தான்... வாசம்தான்... வனம்விட்டு எப்போது வருவார்களோ நாட்டுக்குள்... ஊரும் ஊர்திகளும் நடு இரவுக் கொடுங்கனவுகளாய்... திடுக்கிட்டுத் திடுக்கிட்டு எத்தனைமுறைதான் எழுவது
* அரசியலைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அரசியலுக்குள் நல்லவர்கள் வரவேண்டும் மதவெறிகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் மதங்களுக்குள் உள்ள நல்லவர்கள் பேசவேண்டும்
*
பாரபட்சம் பார்த்து வந்தால் அது அற அன்பு கிடையாது. நாச திசையில் பயணப்பட்டால் அது அற அறிவு கிடையாது அறம்தான் அனைத்திற்குமான மையப்புள்ளி அறம் சொல்லித் தருவது மட்டுமே நல்ல பாடசாலை, நல்ல மார்க்கம், நல்ல வீடு, நல்ல நாடு, நல்ல உலகம்! *
நீரைவிட
ரத்தம்
மலிவானது
காவிரி
*
தீண்டாமை தீண்டப்படாது
ச…

தமிழ் சமஸ்கிருதம்

பிறமொழிச் சொற்களில் தவிர்க்கமுடியாதனவற்றை மட்டும் திசைச்சொற்கள் என்று தமிழ்ப்படுத்திப் பயன்படுத்த தொல்காப்பியம் இலக்கணம் தந்தது. அதற்காக தமிழ் சொற்கள் அனைத்தையும் அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களை மட்டும் வைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. ஒரு பழந்தமிழ்ப் பாடலை வாசித்துப் பொருள் அறிய ஒரு தமிழன் தமிழ் ஆசிரியரையே நம்பி இருக்கிறான். இது தமிழனுக்கு அவமானம். இதற்குக் காரணம், நாம் தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திலிருந்து அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களைத் தமிழில் அதிக அளவில் ஏற்றுக்கொண்டதுதான். குறிப்பாக சம்ஸ்கிரதம் தமிழை அழிக்க அரும்பாடுபட்டிருக்கிறது
* சிலப்பதிகாரத்திற்கு முன்பே வடமொழி தமிழுக்குள் வந்துவிட்டது. ஞானம் என்பது சிலம்பில் இருப்பதால் அது தமிழ்ச் சொல் ஆகிவிடாது. தமிழ்ச்சொல்லான அறிவு என்பதைவிட ஒரு துளியும் மேம்பட்டும் விடாது. தமிழர்களே தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்துவதுதான் சாபக்கேடு!
*

* >>>ஏன் சமஸ்கிருதம் அழிந்து தமிழ் இன்றும் வாழ்கிறது?<<< ஒரு மொழி வாழவேண்டும் என்றால் அது மக்கள் மொழியாய் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மொழி. எளிய மக்களின் இனிய மொழி.
அந்த மொழியால்தான்…
யார் ஹஜ்ஜிற்கு ஆட்டை பலியிடலாம் என்பதில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு இஸ்லாமிய மன்ற அறிஞர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றும் அந்த நால்வரும் எப்படியெல்லாம் முரண்படுகிறார்கள் என்பதையும் பாருங்கள். என் கேள்வி என்னவென்றால், இறைத் தூதர் இதற்கான விதிகளை வகுத்துத் தந்திருந்தால் இவர்களுக்குள் ஏன் இத்தனை வேறுபாடு? இவர்கள் எல்லோரும் சுன்னா ஹதீதுகளின் தொகுப்பில் பெரும் பங்காற்றியவர்கள். என்றால் அந்த ஹதீதுகள் நபிபெருமானார் எதைச் சொன்னாரோ எதைச் செய்தாரோ அதுவேதானா அல்லது சொந்தக் கருத்துக்களா? 1. ஹனபி:
ஜக்காத் கொடுக்க வேண்டிய அளவுக்கு சொத்து யாருக்கு உள்ளதோ அவர்கள் ஆடு பலியிடலாம் 2. மாலிக்கி:
அந்த வருடத்தில் ஆட்டை பலியிடம் பணம் யாருக்கு உறுதியாகத் தேவையில்லையோ அவர்கள் பலியிடலாம். 3. ஷாபி:
பெருநாளுக்கும் அதைத் தொடர்ந்த மூன்று தினங்களுக்கும் குடும்பத்திற்குத் தேவையான பணம்போக ஆட்டை வாங்கும் அளவிற்குப் பணம் இருந்தால் பலியிடலாம் 4.ஹன்பலி
கடன் வாங்கியாவது ஆட்டை வாங்கும் தகுதி இருந்தால் பலி இடலாம் Who Must Sacrifice
Scholars agree that this applies to those financially capable of performing it.
There is…
வீதியைப் பெறுக்கவில்லை
கற்கள் குப்பைகளை
அகற்றவில்லை
அப்படியே அதன்மீது
ஒரு கோலம் போட்டேன்

என் கோல எழிலில்
கோடுகளின் இடையில்
கோட்டின் உள்ளில்
ஒன்றிப்போயின பல கற்கள்

ஒன்றுமற்றுப் போயின
சில குப்பைகள்

அழகில்
குறையொன்றுமில்லை

அனைத்தையும்
என் கோலம்
அணைத்ததில் மகிழ்ந்தேன்

ஆயினும்
கோலத்தினூடே
எவ்வகையிலும்
ஒன்றாத கற்களாய்
எக்கோட்டினோடும்
இணங்காத கற்களாய்

வெகு சில மட்டும்
திமிறக் கண்டேன்
கோலத்தை  அலங்கோலமாக்கும் அவலம் கண்டேன்

மனம் வலித்தது என்றாலும்
கோலத்தின் நலன்கருதி
எடுத்தெறிந்துவிட்டு
இன்புற்றிருக்கிறேன்

உலகே
உனைக் காக்க
கொலைக் கோடரிகளைப்
பலியிடலே அறம்

அறிவு ஞானம்

Ncr Kumar This is the trouble. If I feel comfortable to express in a language that you can also understand, why enforce? If I insist on your posting in a language of my choice then am I not a dictator? 1. இங்குள்ளோர் எல்லோருக்கும் நீங்கள் எழுதுவது போய்ச்சேரவேண்டும் 2. தமிழில் கருத்தாடவே என் முகநூல் பக்கம் 3. இங்காவது தமிழில் உரையாடுவோமே? 4. இங்ககூடவா தமிழில் எழுதமாட்டாய் தமிழா? 5. ஒரு தமிழன் தமிழில் எழுதுவதைவிட வேறு செய்யத் தகுந்த நல்ல செயல் உண்டா * அறிதல் என்பது ஒரு தொடர் ஆதியும் அல்லாத அந்தமும் அல்லாத
ஓர் உயிர்த் தொடர் மிகச் சிறிய எண்ணும் இல்லை
மிகப்பெரிய எண்ணும் இல்லை அறிவும் அவ்வண்ணமே
* காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா என்பதெல்லாம் கவிதை.
நயம் கருதி உருவாக்கப்படுவது.
சுவாரசியம் கருதி எழுதப்படுவது. ஒன்றின் துக்கத்தையும் துயரத்தையும் சொல்லும்போது இப்படியான அதீத உணர்ச்சியைக் கொட்டுவது. அது ஒரு கலை. அவ்வளவுதான் அந்தக் கலையும் அறிவுதான். ஞானம் இல்லை. போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்றால் மனித வாழ்வு நிலையானதில்லை என்றுதான் பொருள், ஆனால் மனிதவாழ்…