o 2019 நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து
o 2019 அன்புடன் நயாகரா
o 2010 அறிதலில்லா அறிதல்
o 2010 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
o 2005 பச்சைமிளகாய் இளவரசி
o 2004 சரணமென்றேன்
o 2003 அன்புடன் இதயம்
o 2002 வெளிச்ச அழைப்புகள்
நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து 2019
மனக்கடலின் ஏற்ற இறக்கங்கள், திடுமெனத் தோன்றும் கொந்தளிப்புகள், அவ்வப்போது எழும் பேரலைகள், தொடந்து வீசும் சிற்றலைகள், கரையில் ஒதுங்கும் நுரை முல்லைகள், இரவின் நிலவின் பால்வண்ண ஒளிமடியில் நீந்தி மகிழும் நிம்மதி மூச்சுகள் என்று வாழ்வின் வற்றாத தருணங்களெல்லாம் கவிதைகளாய் என்னிடம் வந்து தங்களை எழுதிக்கொண்டுவிடுகின்றன. (கவிஞர் புகாரி)
கவிஞர் புகாரியின் பஞ்சபூதக் கவிதைகளில் ஒன்றைப்
படித்துவிட்டு அதில் மனதைப் பறிகொடுத்து அவருடன் தொடர்பு கொண்டேன். என் வாழ்க்கையிலேயே
கவிதையைப் படித்துவிட்டு நானாகவே தொடர்புகொண்ட ஒரே கவிஞர், புகாரி ஒருவர்தான்.
கவிஞர் புகாரி தைரியமான சீர்திருத்த வாதி. ஆழமாகச் சிந்தித்து
தத்துவ முத்துக்களை எடுத்துவந்து நம்முன் வைக்கும் தத்துவ ஞானி. (பல்கலைத் தென்றல் ஆர். எஸ். மணி கனடா)
Universal Publishers
2/3 North Usman Road (Near Kodambakkam Flyover) T.Nagar, Chennai, Tamil
Nadu 600 017 India
+91 44 2834 3385 +91-44 2834 3385 Universal_pub2002@yahoo.co.in www.universalpublishers.co.in
அன்புடன் நயாகரா 2019
அளவுக்கு மீறிய பிரமிப்பைத்
தரும் கவிதைகளை என்னால் இத்தொகுப்பில் பார்க்க முடிகிறது. அறிவியல் அழகியல் உளவியல் சமூகவியலென
எல்லாவற்றையும் ஒரு சேரக் கட்டும் திறம் இவருக்கே உள்ள தனித்துவம்.
தொல்காப்பியருக்கு பலகோடி
முத்தங்கள் தரவேண்டும் என்று எழுதிய கவிஞருக்கு தமிழர்களாகிய நாமும் பலகோடி முத்தங்கள் தரவேண்டும் போல்
உள்ளது. (சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்
கனடா அணிந்துரை)
எனக்கென்னவோ
இவை கவியரங்கக் கவிதைகளாகத் தோன்றவில்லை. பெருங் கவிஞர்களே பார்வையார்களின்
கைத்தட்டல்களுக்காகக் கவிதையில் சமரசம் செய்து கொள்ளகிறார்கள். ஆனால் கவிஞர்
புகாரி எந்த நிலையிலும் தமிழே உயிரென்று தமிழ்க் காப்புப் போராளியாகவே நிமிர்ந்து
நிற்கிறார்.
கவிஞர்
புகாரியின் கவிதைகள் வாழ்வதற்குச் செய்கின்ற சிந்தனைகளை வளப்படுத்துகின்றன; வீழ்வதற்குச் செய்கின்ற சிந்தனைகளில் விழிப்பைத்
தருகின்றன. சான்றோன் எனக் கேட்ட தாயாகி மகிழ்கின்றேன். (தமிழாய்வுத்துறைத்
தலைவர் முனைவர் மன்சூர் ஆசானுரை)
Universal Publishers
2/3 North Usman Road (Near Kodambakkam Flyover) T.Nagar, Chennai, Tamil
Nadu 600 017 India
+91 44 2834 3385 +91-44 2834 3385 Universal_pub2002@yahoo.co.in www.universalpublishers.co.in
அறிதலில்லா அறிதல் 2010
கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து
எழுதுவதும் உண்டு, மூளைக்குள்
அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு
வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே
தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.
இலக்கியம் ஊட்டி மனிதநேய
இதயத்தோடு என்னை உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி தீபங்களை அடுக்கடுக்காய்
ஏற்றி வாழ்வொளி தரும் கவிதைகளுக்கும் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
என் கவிதைகளுக்கு முத்தங்கள் ஈவதற்காகவே தங்களின்
இதழ்களில் தாக ஈரம் நிரப்பிக்கொண்ட என் கவிதைகளின் காதலர்களுக்கு என் கவிதைகளின்
பாராட்டு முத்தங்கள் அந்த நெடுவான நட்சத்திரங்களின் எண்ணிக்கையில்.
மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும்
மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய்
ஆகிவிடாதா?
Uyir Ezhutthu Pathippagam
9 First Floor, Deepam Complex , Karumandapam,
Trichirappalli 620 001 India
+91 431 652 3099 +91 99427 64229 uyirezhutthu@gmail.com
காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 2010
இந்தக் கவிதைகள் கடல்தாண்டி
வந்திருக்கின்றன. இவை, கனடா நாட்டில் வாழும் ஒரு
கவிக் குயிலின் கீதங்கள். தமிழ் மணக்கும் தஞ்சை
மண்ணில் பிறந்த இந்த இனியவர், கணினித் துறையில் வல்லுநர்; அரபு நாடுகளில் பணியாற்றிவிட்டுப் பல வருடங்களாகக் கனடா
என்னும் அழகிய நாட்டில் வாழ்ந்து வருகிறார்.
வட துருவத்தை நோக்கிப்
பறக்கும் எந்தப் பறவையும், இவரது வீட்டில் ஒலிக்கும்
தஞ்சைத் தமிழினிமை கேட்டு, இறங்கிவந்து
இளைப்பாறிவிட்டுத்தான் செல்லும்.
இவரின் கவிதைகள் அழகியல்
மிகுந்தவை. எழில்கொஞ்சுபவை; மரபும் புதுமையும் கூடிக்
குலவுபவை (இசைக்கவி ரமணன் பதிப்புரை)
நான் கவிதை
எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என்
கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று முடிவெடுத்து என்னை
இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன. அப்படி
எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.
ஆகவே காமத்துப்பால்
எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை.
எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது. (கவிஞர் புகாரி)
Trisakthi
Publications
Girigula Enclave, 56/21 First
Avenue, Sastri Nagar, Adyar, Chennai 600 020
+91 44 -4297 0800 +91 44 2446 2220 +91 44 2446 4440 trisakthipublications@trisakthi.com
சமீபத்தில் ஒரு கவி
சொல்லியிருந்ததைப் படித்தேன். 'நான் எனக்கு தெரிந்ததைச்
சொன்னால் எனக்கு அலுக்கிறது. உனக்குத் தெரிந்ததைச் சொன்னால் உனக்கு அலுக்கிறது.
உனக்கும் எனக்கும் தெரியாததை சொல்வதுதான் கவிதை.' புகாரி அதைத்தான் செய்கிறார்
அவருடைய படைப்புகள்
புதுமையாக இருக்கின்றன. மயக்கவைக்கும் உவமைகளும், தீவிரம் குன்றாத படிமங்களும் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை. கவியின்
உள்ளத்து உணர்வுகள் பொங்கி அவ்வப்போது நிறம் மாறினாலும், ஒரே
குரல்தான் ஒலிக்கிறது.
மனித
நேயம், இயற்கை
ரசனை, கொடுமைகளைக்
கண்டு கொதிக்கும் இதயம், ஒரு
குழந்தையின் வியப்பு, இப்படி
எல்லாமே கிடைக்கிறது (எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரை)
கனடா தமிழ் இலக்கியத்
தோட்டத்தின் ஆதரவில் கண்டாவில் வெளியீடு. வசூலான தொகை தமிழ் இலக்கியத்
தோட்டத்தின் விருது சேவைக்கு அன்பளிப்பு
Manimekalai
Pirasuram
Post Box 1477, 7 (old# 4) Thanikachalam Rd, T Nagar, T.
Nagar, Chennai, Tamil Nadu 600017, India
+91 44 2434 2926 manimekalai1@dataone.in manimekalaiprasuram@gmail.com www.tamilvanan.com
காதலுக்கும் கவிதைக்கும்
ஒரு மனது வேண்டும். ஒரு மனது அல்ல ஒரே மாதிரியான மனது. நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரூ
உபாசனை இவை ததும்பும் மனது.
இது இல்லாதவர்கள்
காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. இவையற்ற கவிதையும் சரி, காதலும் சரி பொய்யானதாக இருக்கும். அவை காமமாகத் திரியும்.
அல்லது வார்த்தைகளாகச் சரியும்
இந்த மனது புகாரிக்கு
இருக்கிறது. அதற்கு சான்று இந்தக்
கவிதைகள் (மூத்த பத்திரிகையாளர் மாலன்
அணிந்துரை)
காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக் கொள்கின்றன. அக்கணங்களில் காகிதங்களில் இறங்குவது எழுத்துக்கள்
அல்ல, முத்தங்கள்.
வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது உலகில் காதல் பயிர்
ஒன்றுதான் (கவிஞர் புகாரி)
Kaavya Pathippagam
14 First Cross Street,
Trustpuram, Kodambakkam, Chennai 600 024 India
+91 44 2480 1603 kaavyabooks@yahoo.co.in
www.kaavyabooks.com
அன்புடன் இதயம் 2003
இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் பஞ்சபூதக் கவிதைகள். என்தெய்வம்
தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக்
கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றைவிட உயர்ந்தது
என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது (கவிமாமணி இலந்தை அணிந்துரை)
கவித்துவத்தைக் காட்டக் கடினமான வார்த்தைகளைக் கட்டித் தழுவாது, எளிமையான சொற்களை எடுத்து, அவற்றுக்குள் கனதி
ஏற்றுகின்ற கலைஞனாக புகாரி விளங்குகின்றார். இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது (கவிநாயகர் கந்தவனம் வாழ்த்துரை)
தமிழால் அமைந்த கணினி மேடைக்கும் அதில் தமிழெடுத்து ஆடும் இணைய தேவதைக்கும் இந்நூல்
சமர்ப்பணம்.
நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது
தமிழ்ப்பற்று. வறுமை கிழித்துப்போட்ட குடும்பத்தின்
கடைசி ஆடையையேனும் தைத்தெடுத்து விடலாம் என்ற பதட்ட உணர்வுகளோடு மண்ணைப் பிரிந்த
தமிழர்கள், தமிழோடு
சேர்ந்திருக்கிறார்கள். (கவிஞர் புகாரி)
இணையச் சரித்திரத்திலேயே முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப்பட்ட நூல்.
Manimekalai
Pirasuram
Post Box 1477, 7 (old# 4) Thanikachalam Rd, T Nagar, T.
Nagar, Chennai, Tamil Nadu 600017, India
+91 44 2434 2926 manimekalai1@dataone.in manimekalaiprasuram@gmail.com www.tamilvanan.com
வெளிச்ச அழைப்புகள் 2002
உற்றதை உணர்ச்சியின்
உயிர்கெடாது வார்த்தெடுக்கும் வல்லமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும் வாய்த்திருக்கிறது.
புதுக்கவிதையின்
பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும்
ஆற்றலைப் புகாரி பெற்றிருக்கிறார்.
இந்த வெளிச்ச அழைப்புகள்
கவியுலகில் பிரகாசமான எதிர்காலத்தைக் கவிஞர் புகாரிக்குத் தரும் என்பதும் திண்ணம் (கவிப்பேரரசு வைரமுத்து
அணிந்துரை)
இந்தியத் தமிழரால் மேற்குலகில்
முதன்முதலில் வெளியான தமிழ்நூல்.
துரைசாமி நாடார் இராஜம்மாள்
விருது.
கனடா உதயனின் தங்கப்பதக்க கவிதை.
இந்திய அமைச்சரவைத் தேர்வில்
தமிழ்மாநில அடையாளக் கவிதை.
Manimekalai
Pirasuram
Post Box 1477, 7 (old# 4) Thanikachalam Rd, T Nagar, T.
Nagar, Chennai, Tamil Nadu 600017, India
+91 44 2434 2926 manimekalai1@dataone.in manimekalaiprasuram@gmail.com www.tamilvanan.com
No comments:
Post a Comment