பலசாலியல்ல

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா

0

பலசாலியல்ல....
வாழக் கிடைத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத்தனம் பற்றியவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படியாய் நிற்பவர்

பலசாலியல்ல....
வாழ்வின் கழிவுகளைக்
களையத் தெரியாதவர்

பலசாலியல்ல....
விட்டுக்கொடுப்பதோ
என்றோர் ஜம்பமடிப்பவர்

பலசாலியல்ல....
உயிராய் வந்ததை
உதறும் கர்வமுடையவர்

பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்

பலசாலியல்ல....
வாழத் தெரியாது
வீழ்வதில் பெருமையுடையவர்

பலசாலியல்ல....
சந்தேகங்களுக்கு
சந்தோசங்களை பலியிடுபவர்

பலசாலியல்ல....
முட்டாள்தனங்களையே
முறையென்று பற்றியவர்

பலசாலியல்ல
தொலைந்துபோவதே ஏதெனத் தெரியாது
சினம் கட்டிக் கூத்தாடுபவர்

பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்

பலசாலியல்ல
அன்புதரும் மெல்மனப் பிறப்பறியாது
வஞ்சந்தரும் மரணங்கள் நேசிப்பவர்

0

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா


8 comments:

Unknown said...

நல்ல கருத்துக்கள்! நண்பரே! அருமை!

சா இராமாநுசம்

mohamedali jinnah said...

அருமையான கவிதை தந்தமைக்கு வாழ்த்துகள் .
எழுதியதெல்லாம் உண்மை .பலபேர் வாழ்கையில் கணவன் மனைவிக்குள்லேயே விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் பலநாட்கள் தம்பதிக்குள் பேசாமல் இருந்ததனை நான் அறிந்திருக்கின்றேன். ரசத்தில் சிறிது அதிக உப்பு சேர்தமையால் கணவன் மனிவியை கோபமாக பேச அவள் வருத்தமடைந்து வாயடைத்துப்போய் அதில் இருவருக்கும் மவுன விரதமாக மாறி சில நாட்கள் ஓடியதும் உண்டு . வாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது, இழந்த மகிழ்வு இழந்ததுதான், அதற்க்கு முக்கிய காரணம் கோபதையும் தாபத்தையும் விட்டுக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வராமல் போனதுதான். தம்பதிகள் வாழ்வில் எக்காலமும் தனித்து படுக்கக் கூடாது அது கோபத்தினை முடிவுக்கு வரமுடியாமல் வாழ்வின் முடிவுக்கே வந்துவிடும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு'out of sight is out of heart'
"கோபக்காரனுக்கு புத்தி மட்டு" தாமதமான தீர்ப்பு தவறான தீர்ப்புக்கு வழி வகுக்கும்.

'முடிவுக்கு வா' அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்றி சார் !

PUTHIYAMAADHAVI said...

மிகவும் அற்புதமான வரிகள் புகாரி.

PUTHIYAMAADHAVI said...

மிகவும் அற்புதமான வரிகள் , வாழ்த்து சொல்ல முடியவில்லை புகாரி
வலியை உணர்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அண்ணன் நீங்க சொல்லியுள்ள அத்"துணைக்கும்"பலசாலியல்லர் மட்டுமல்ல பாக்கியசாலியும் அல்லர்.அளவான வார்தை கையாயாடளில் (வார்தை= நம்மூர் வழக்கில் விவாகரத்து)வாழ்கை கையாடல் செய்தவர்கள் இவர்கள். இவர்களின் சந்தோசங்களை இவர்களே திருடிக்கொண்டவர்கள்.வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அண்ணன் நீங்க சொல்லியுள்ள அத்"துணைக்கும்"பலசாலியல்லர் மட்டுமல்ல பாக்கியசாலியும் அல்லர்.அளவான வார்தை கையாயாடளில் (வார்தை= நம்மூர் வழக்கில் விவாகரத்து)வாழ்கை கையாடல் செய்தவர்கள் இவர்கள். இவர்களின் சந்தோசங்களை இவர்களே திருடிக்கொண்டவர்கள்.வாழ்த்துக்கள்.

Unknown said...

பாராட்டுக்களை அள்ளித் தூவிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி.

என்னைத் தேடி அன்புடன் புகாரிக்குள் வந்த சகோதரர் கிரவுன், நன்றிகள் பல. உங்கள் வரவு மகிழ்வினைத் தருகிறது.