நேற்றா நாளையா இன்றா

கடந்த காலம்
நினைக்க நினைக்க
கண்களில் கண்ணீரின்
திவலை

வரும் காலம்
எண்ண எண்ண
நெஞ்சினில் பயத்தின்
கவலை

இன்றுக்குள்
சிறகுகள் விரிக்க
உயிரில் இன்பத்தின்
ரகளை




இந்த வாழ்க்கையில்

சுவாரசியம் மிகுந்த
ஓர் உயிர்
உன்னுடனேயே இருந்துவிட்டால்
வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது அகலமாவது?

வெறுமையின்
நீள அகலங்களுக்கு
அகால மரணங்கள்

நிம்மதிக்கும்
பெருமகிச்சிக்கும்
படபடப் பிறப்புகள்

அவ்வளவுதான்
வேறொரு தத்துவதும்
இல்லை
இந்த வாழ்க்கையில்