Posts

Showing posts from July, 2017
* * * *

விபுலாநந்தர்

சுகந்தம் மொட்டுடைக்கும் சுகராகம் காற்றுடைக்கும்
வசந்தம் பனியுடைக்கும் வஞ்சிமுகம் துயருடைக்கும்
நீயுடைத்த நெருஞ்சிக்காடும் நெற்கள் கோத்தது
உன் தொண்டுடைத்தத் தமிழுலகம் அறிவாய்ப் பூத்தது

வானுடைக்கக் கையுயர்த்தி நாளும் நின்றவனே
உன் உயர்வெண்ணி  உழைப்பெண்ணி உள்ளமுமெண்ணி
என் உட்குளத்துப் பொற்குமிழ்கள் வண்ணஞ்சிதற
சிலுசிலுத்துப் படபடத்து உடையக் கண்டேனே

தங்கமாமுனியே தாரகைச்சுடரே
மயில்வாகனனே மாதமிழ்க்கோனே
விண்ணுடைத் தமிழே விபுலாநந்தா

உன் முதன்மைப் பற்றென்ன
தமிழா இசையா
துறவா தொண்டா
கல்வியா காருண்யமா
அறிவியலா அறவழியா
பக்தியா பரிவா
பன்மொழியா உன்மொழியா

இன்னும் இவைபோல் எத்தனை எத்தனை
முத்துக்களைக் கோத்தெடுத்தாய் வித்தகா

என்றால்... ஒற்றைச் சொல்லில் நானுனை
அழைப்பதுதான் எப்படி
மா மகிழ்வே... விபுல் ஆனந்தா...

தமிழிசைக் கருவூலம் பேரறிவுப் பெட்டகம்
யாழ்நூல் யாத்தவனே

சங்க இலக்கியம் தொட்டு
சந்து பொந்துகளிலெலாம் கையிட்டு
தீரா உழைப்பில் திரட்டிய இசை நூலை
யார்தான் செய்வார் நீதான் கோமான்

குறிஞ்சி மலர்பூக்க ஆகும் பன்னிரு ஆண்டுகளை
தமிழிசை மணம்பூக்கத் தாயெனத் தந்தவனே

பேராசிரியப் பெரும்பணியையும்
த…

கவியரங்கம் கனடா 150

* * * * *

கவியரங்கம் - கனடா 150 

கிழக்கே சில்லென்று அட்லாண்டிக்
மேற்கே சிலுசிலுப்பாய் பசிபிக்
இருபெருங் கடல்களுக்கு இடையில்
வடதுருவத்தின் மடியில்
அமெரிக்காவின் தலையில்
விண்வெள்ளி மகுடமாய்
ஜொலிஜொலிக்கும் வனப்பே

நுங்கும் நுரையும் பொங்கும்
நூற்றைம்பதே வருட இளமையே

உனக்குள்தான் எத்தனை எத்தனைச்
செழுமை வளமை இனிமை

வரம் தரும் தேவதை வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்கள்
வசந்தங்கள் தாலாட்ட யொவனம் ததும்ப
நனைந்து நனைந்து மிதக்கும் நந்தவனங்கள்

இலங்கைத் தீவையே
ஒரு கைக் குழந்தையாய் அள்ளி
கனடிய ஏரிக்குள் அப்படியே அமர்த்தி
தலையில் எண்ணையும் தேய்த்து
கொஞ்சம் நீச்சலும் அடிக்க வைத்து
குளிப்பாட்டி மகிழலாமோ என்பதுபோன்ற
மாபெரும் நன்னீர் ஏரிகள்

இவையெல்லாம் வெறும் புற அழகுகள்தாம்
கனடாவின் அக அழகோ
அந்த ஆகாயத்தையே
ஆகச் சிறியதாக்கும் பேரழகு

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை
உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே
எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே
மண்ணே புகலிடமே

கனடா நூற்றைம்பது

கிழக்கே
சில்லென்று அட்லாண்டிக் மேற்கே
சிலுசிலுப்பாய்ப் பசிபிக்
இருபெருங்
கடல்களுக்கு இடையில் வடதுருவத்தின் மடியில் அமெரிக்காவின் தலையில் விண்வெள்ளி மகுடமாய் தகதகக்கும் வனப்பே
நுங்கும் நுரையும் பொங்கும் நூற்றைம்பதே வருட
இளமையே
உனக்குள்தான்
எத்தனை எத்தனைச் செழுமை வளமை இனிமை
சொர்க்கம் உடைந்து
அதன் அத்தனை அழகும்
குப்புறக் கவிழ்ந்தோடும் வண்ணங்கள்

வசந்தங்கள்  இளமை ததும்பஅழகு ஊஞ்சல்கள்


வரம் தரும் தேவதை வாரி வாரி இறைத்த வைரமணித் தொட்டில்கள் வசந்தங்கள் தாலாட்ட யொவனம் ததும்ப நனைந்து நனைந்து மிதக்கும் நந்தவனங்கள்
இலங்கைத் தீவையே ஒரு கைக் குழந்தையாய் அள்ளி கனடிய ஏரிக்குள் அப்படியே அமர்த்தி தலையில் எண்ணையும் தேய்த்து கொஞ்சம் நீச்சலும் அடிக்க வைத்து குளிப்பாட்டி மகிழலாமோ என்பதுபோன்ற மாபெரும் நன்னீர் ஏரிகள்
இவையெல்லாம் வெறும் புற அழகுகள்தாம் கனடாவின் அக அழகோ அந்த ஆகாயத்தையே ஆகச் சிறியதாக்கும் பேரழகு
இன்னல் பிளந்தெடுக்க சுற்றும் இருளே வாழ்வாக கண்ணில் மனந்துடிக்க முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை உன்னில் அணைத்தவளே உயிரின் ஓலம் தணித்தவளே மண்ணே புகலிடமே என்றன் மற்றோர் தாய்மடியே
என்று பாடுகிறான் ஓர் அகதிய…