உலகம்
எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் இதழில் வெளியான கவிதை இது. தமிழ்நாட்டின் மாநில அடையாளக்
கவிதையாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை இக்கவிதையைத் தேர்வு செய்து இந்தியில் மொழிபெயர்த்து வார்சிகி 86ல் வெளியிட்டது. இக்கவிதையை இந்தியில் மொழிபெயர்த்தவர் டெல்லி பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைப்
பேராசிரியராகப் பணியாற்றிய ஜமுனா.
இருந்தும் ஒரு
கவிதை நூல் வெளியிடும் எண்ணம் அன்று எனக்கு
வரவே இல்லை. நானொன்றும் அத்தனை பெரிய கவிஞன் இல்லை என்று நினைத்து ஒதுங்கிக்
கொள்வேன். தீபம் எஸ் திருமலை அவர்கள் என்மீது அன்புகொண்டு
நூலின் தொகுப்பு, அச்சு, வெளியீடு ஆகிய எல்லாம் தானே செய்வதாகவும் நான் ஒப்புதல் தந்தால் மட்டும் போதும் என்றும் என்னை ஊக்கப்படுத்தினார். ஆனாலும் என் மனம் உடன்படவில்லை.
கனடா வந்துதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. காரணம் இணையமும் ஈழத்தமிழர்களும்தான்.
இணையத்தில் என் கவிதைகளை வெளியிட்ட என். சொக்கனின் ’தினம் ஒரு கவிதை’, என்னை ஆஸ்தான
கவிஞராய் அங்கீகரித்த தமிழ் உலகம் மின்குழுமம், என் கவிதைகளை நேசித்த அகத்தியர் மின்குழுமம்
என்று பாலைவனத்தில் தவித்துக் காத்திருந்த என்னை கவிதைகளுக்குள்ளேயே வாழவைத்தப் பொற்காலத்தின்
தொடக்கம் அது.
என் மேடைத் தமிழும் கவிதைகளும் நேசத்துக்குரியவனவாகிப் போக நான்
கனடா வந்திறங்கிய தொடக்க காலத்தில் என்னை மேடைகள் பலவற்றிலும் பாசத்தோடு ஏற்றிய டொராண்டோ
வாழ் ஈழத்தமிழர்கள் -குறிப்பாக உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கவிநாயகர்
கந்தவனம், மற்றும் கீதவாணி வானொலி.
என் பழைய கவிதைகள் சிலவற்றையும் புதிய கவிதைகள் சிலவற்றையும் கோத்து வெளிச்ச அழைப்புகள் என்ற
என் முதல் கவிதை நூலை கனடாவில் வெளியிட்டேன். அந்நூலில் இரண்டாவது கவிதையாக இக்கவிதையைச் சேர்த்தேன்.
சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது
அழுங்கள்
நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்
பாடுங்கள்
அந்த மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன
பெருமூச்செறியுங்கள்
அவை காற்றினில்
காணாமல் போகின்றன
கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்
ஆனால்
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்
விருந்தளியுங்கள்
உங்கள் அறை அமர்க்களப்படுகிறது
கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே தென்படமாட்டார்கள்
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது
ஆனால்
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது
நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது
அழுங்கள்
நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்
பாடுங்கள்
அந்த மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன
பெருமூச்செறியுங்கள்
அவை காற்றினில்
காணாமல் போகின்றன
கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்
ஆனால்
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்
விருந்தளியுங்கள்
உங்கள் அறை அமர்க்களப்படுகிறது
கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே தென்படமாட்டார்கள்
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது
ஆனால்
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது
நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து
No comments:
Post a Comment