அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
அவனும் இல்லை

4 comments:

Anonymous said...

நல்லா சொல்லி இருக்கீங்க புகாரி!

-சுரேஷ்பாபு

Anonymous said...

அன்பின் புகாரி,

அருமையான கவிதை. அழகு தமிழ் - எளிமைச் சொற்கள். பசியும் இல்லை அவனும் இல்லை, கருத்து பாராட்டத்தக்கது. வண்ணைத்தினை மாற்றிக் கொண்டே இருப்பவன் நிலைப்பதில்லை. கொள்கைப் பிடிப்புள்ளவனே நிலைத்திருப்பான். அருமை அருமை.

அன்புடன் ..... சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க !

mohamedali jinnah said...

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது நியதி .
பசி வர பல் இளிப்பதும் -உண்மை
அரபு தேசத்தில் நரியைக் காணோம் ,நாயைக் காணோம் ஆனால் பூனைகள் அதிகம்.. பூனையின் மாண்பு நன்றிகாட்டி மடியில் அமரும் .தெரியாதவர் தொல்லை கொடுத்தால் சீறிப் பாயும்.
கவிதையில் சொல்லப்பட்ட கருத்து அருமை