தோற்றுத்தான் போகிறோம்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்...

எங்கோ தூரத்திலல்ல
பக்கத்தில்தான்

விலகியவர்களாக அல்ல
நெருக்கமானவர்களாகத்தான்

காய்ச்சொல் ஈபவர்கள்களாக அல்ல
கனிமொழி குழைபவர்களாகத்தான்

வெறுப்பாடிக்கொண்டல்ல
உறவாடிக்கொண்டுதான்

நம் தோள் பற்றித்தான்
அணைத்தழைத்துச் செல்பவர்களாகத்தான்

அன்போடுதான்
அருகிலேயேதான்

நம்மோடுதான் இருக்கிறார்கள்
நமக்கான நம் எதிரிகள்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்....

ஏக்கங்களால் அபகரிக்கப்பட்டு
தவித்துத் தவித்து
நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்

நண்பர்களெல்லாம்
பயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்
அடையாளங்களற்று
உடைந்து கிடக்கிறார்கள்

தோற்றுத் தோற்றுப் போன
தொடர் களைப்பில்

5 comments:

mohamedali jinnah said...

உண்மை .உடைந்த மனம் திரும்பவும் துளிர் விடும். இறைவன் அருள் கிடைக்கும்.

mohamedali jinnah said...

தோற்றுத்தான் போகிறோம்

விடை இங்கே
http://seasonsnidur.blogspot.com/2010/07/blog-post_1104.html

அன்புடன் மலிக்கா said...

முற்றிலும் உண்மை ஆசான்

தோற்றுத்தான் போகிறோம்
இதுபோன்ற மனங்களிடம்

சிலவேளை
இமைக் காணாதூரத்திலிருக்கும் மனங்களிடமும்
அன்பைதந்து..

கலகலப்ரியா said...

அருமை..

||நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்||

:)

சேக்கனா M. நிஜாம் said...

அருமை !

சிந்திக்க தூண்டும் கவிதை

வாழ்த்துகள்...