Percentage - விழுக்காடு என்பது சரியா?
நான் எப்போதுமே ஒரு சொல்லாக்கம் என்று வரும்போது, எங்கள் கிராமத்தில், தாத்தா பாட்டி பேச்சு வழக்கில் என்ன பயன்படுத்தப்பட்டது என்று ஞாபகப் படுத்தப் பார்ப்பேன் முதலில்.
போட்ட முதலில் கால்வாசி தேறினாலே பெருசு
முக்கால்வாசி
காலேஅரைக்காவாசி
காலேஅரைக்காவாசி
கொடுத்த கடன்ல நூத்துக்குப் பத்தாவது கிடைக்குமா?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்
நூற்றுக்கு அறுபது
Percentage, சதம், விழுக்காடு என்று எதையுமே பயன்படுத்தாமல்தான் பேசி வந்திருக்கிறார்கள். பொருள் சரியாகத்தான் வந்திருக்கிறது.
முக்கால்வாசி கால்வாசி அரைவாசி என்பதெல்லாம் 98வாசி என்று பயன்படுத்தத் தகுதியானவையா என்று தெரியவில்லை
பத்துவாசி என்றோ இருபதுவாசி என்றோ எவரும் என்றும் சொன்னதில்லை
பதிலாக
நூத்துக்கு நூறு, நூத்துக்கு எட்டு என்று பேசி இருக்கிறார்கள்
இனி விழுக்காடு பற்றி சிந்தித்தால், ஒரு புதிய சொல்லை ஆங்கிலத்தின் Percent போல பயன்படுத்த முயல்கிறோம். அறிமுகம் செய்கிறோம்.
விழுக்காடு என்பது நூற்றுக்கு எத்தனை என்பதைத்தான் சொல்கிறது.
பத்துக்கு எத்தனை என்று எப்படிச் சொல்வது?
அன்று கிராமத்தில், பத்துக்குப் பத்தும் தேறும் என்றார்கள். (அதாவது நூறு விழுக்காடு)
பத்துக்கு ஏழு தேறினால் பெரிது என்றார்கள். (70 விழுக்காடு)
இப்படியே பத்துக்கு ஐந்துக்கு ஐம்பதிற்கு என்று எல்லாவற்றுக்கும் பயன்படும் சொல் ஒன்று உண்டா?
நாம் ஆங்கில முறைப்படி நூறோடு மட்டுமே ஒப்பிட்டுச் சொல்வோம்.
ஆனால்,
கிராமத்தில் வெகு இயல்பாக எல்லாவற்றுக்கும் சொல்லிச் செல்வார்கள்.
குழப்பம் வந்ததே இல்லை
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment