அறிவியல் தமிழும் புதுச் சொல்லாக்கமும்
-------------------------------------------------------------------
தனியார்ப் பள்ளிகளில் தமிழ் அவசியமில்லையாம் தமிழ்நாட்டில்.
நான் ஊர் சென்றால் காணும் ஏராளமான இளைஞர்களுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரிந்திருக்கிறது. எழுதவும் வாசிக்கவும் தெரியவில்லை.
அவர்கள் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களும் ஒரு நூறைக் கூடத் தாண்டாது.
தமிழில் அவர்கள் ஓர் அறிவியல் கட்டுரையை வாசிக்கக்கூட வேண்டாம், அதை வாசிக்கக் கேட்டால் அவர்களால் ஒரு வார்த்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாய் இல்லை.
தமிழில் மொழிக்கூறுகளை ஊன்றிப் படிக்காவிட்டாலும் அறிவியல் பயிலவாவது அவர்கள் முன்வரவேண்டும். இல்லாமல் தமிழுக்கு வளர்ச்சி உண்டென்று நான் நம்ப மாட்டேன்.
ஆங்கிலத்தில் எனக்கு இலக்கியம் தெரியாது. ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் அறிவியல் கட்டுரைகளையும் வணிக, கணித, சரித்திர, பூகோளக் கட்டுரைகளையும் வாசிப்பதில் ஏதும் சிக்கலே இல்லை.
ஆனால் சில தமிழ் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினால், தங்குதடை இல்லாமல் வாசிப்பது இயலாததாக இருக்கிறது
சொல்லாய்வின் பல சொற்கள் நல்லவைதான் ஆனால் அவை தமிழறிஞர்களால் மட்டுமே உச்சரிக்கவும் மனனம் செய்யவும் ஏற்றதாக இருக்கின்றன.
அவ்வகைச் சொற்கள் இலக்கிய உலகில் அவசியமானவைதான். ஆனால் அறிவியல், கணிதம், வணிகம் போன்றவற்றின் துரித வளர்ச்சி உலகில் அவை தடையாகவே உள்ளன என்பதை மறுக்க முடியுமா?
அன்புடன் புகாரி

No comments: