33 யாரோ ஒருவன்


வானம் உடைக்கும் உளியோடு
இந்த வையம் பிளக்கும் வாளோடு
யாரோ ஒருவன் வருகின்றான்
அவன் எழுதும்போதே வாழ்கின்றான்

4 comments:

cheena (சீனா) said...

வாழும் காலத்தில் பெரும்பாலான கவிஞர்கள் புகழ் பெறுவதில்லை. காலத்தை மாற்றும் கவிஞன் கவிதையிலேயே வாழ்வான் என்பது புகாரியின் கருத்தா ?

Anonymous said...

நண்பர் புகாரிக்கு,

கவிஞர் சேவியரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில் என்னை விசாரித்தமைகும்,பாராட்டியமைக்கும் முதற்கண் என் பணிவன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் .
கவிஞர் மு.மேத்தா சாகித்ய அகடெமி விருது பெற்ற பின் , கவிஞர் சேவியர் அதைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரையில் படித்தது.

"
எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன.
"
உங்கள் கவிதைப் படி எழுதும் போதே வாழ்ந்தால் அதை விட சிறப்பு வேறென்ன இருக்க முடியும் ?

நட்புடன்
குகன்

Unknown said...

ஆமாம் குகன்

நூலகளிட்டும் வாழவில்லை. விருதுகளை நோக்கியும் அவன் வாழவில்லை. எழுதும்போதுமட்டுமே கவிஞன் வாழ்கிறான். அப்படியான வாழ்க்கை வசப்படுவதைவிட மேலான பேறு வேறென்ன வாய்க்கமுடியும்?

நன்றி குகன்

கோகுலன் said...

நல்ல வரிகள் அன்புடன் புகாரி.. :))