ஐ-பேடில் அழகுதமிழ் செல்லினம்

முத்தழகா
முத்து நெடுமாறா
தமிழைக்
கணியுலகக் கன்னத்தில்
முத்து முத்து முத்தங்களாய்
முப்பொழுதும் பதிக்கும்
வித்தகா

மெல்லினம் வல்லினம்
இடையினம் காட்டும்
தமிழழகியின் மடியில்
சொக்கி விழுந்த நான்
இன்னமும்
எழுந்து கொள்ளவே இல்லை

அதற்குள்
உன் செல்லினத்திலும் விழுந்து
சிறைபட்டுப் போவதா?

அடடா
அந்த சிறைக்குள்தான்
எத்தனை எத்தனை லட்சங்களில்
வண்ண வண்ணச் சிறகுகள்?

செல்லினச் சுந்தரா
முத்தெழில் முத்து நெடுமாறா
உனக்கு இத்தமிழனின் நன்றிகள்
காலத்தால் காய்ந்துபோகாத
கோடி கோடிக் கணிப்பூங்கொத்துக்களாக

அன்புடன் புகாரி
20110312

3 comments:

mohamedali jinnah said...

கவின் தமிழில் கணினி வளர தங்களது சேவை காண மகிழ்கின்றேன். நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான வரிகள் நண்பரே!
அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."


"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Unknown said...

முத்தெழில் அர்த்தம் என்ன என்று கூறவும், நன்றி