நெல்லை சந்திப்பில் என் பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB



உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே 

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்

13 comments:

Yaathoramani.blogspot.com said...

கருத்துடன் கூடிய அருமையான பாடல்
கேட்டு மிகவும் ரசித்தேன்
தொடர்ந்து சிகரம் தொட வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி ரமணி சார்

Unknown said...

ம்..ம் நல்லாயிருக்கு

Unknown said...

தமிழ் மண ஓட்டுப்பட்டையை காணோமே அய்யா???

mohamedali jinnah said...

நீண்ட நாட்களாக உங்களைவிட நான் மிகவும் ஆர்வமுடன் விரும்பினேன். மிக்க மகிழ்வு ,வாழ்த்துகள் . தொடரட்டும்...

Unknown said...

நன்றி கரி காலன்

நன்றி நீடூரலி அண்ணா

cheena (சீனா) said...

அன்பின் புகாரி - நீண்ட நாட்களாகி விட்டன் - தொடர்பு கொண்டு - பாடல் அருமை - நல்வாழ்த்துகள் புகாரி - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

பின் தொடர்பதற்காக இம்மறுமொழி

Unknown said...

மீண்டும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி சீனா, நன்றி

மு.ஜெயக்குமார் said...

பாடல் மிகவும் அருமை. இது உங்கள் முதல் திரையிசைப் பாடலா? ( ஏனோ தெரியவில்லை, என் அருமைக் கவிக்கோ "செதுக்கிய" வரிகள் என் நினைவில் இந்நேரம் வருகிறது....LOL !)

வாழ்த்துக்கள்! சிகரங்கள் தொட!

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள பாட்டு...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

GIRIJAMANAALAN said...

தங்க்ள் கைவண்ண்த்தில் அருமையான வரிகள் புகாரி சார்! கேட்டு ரசிக்க ஆவலாயுள்ளேன்.

- கிரிஜா மணாளன்(கி.ம)

GIRIJAMANAALAN said...

தங்க்ள் கைவண்ண்த்தில் அருமையான வரிகள் புகாரி சார்! கேட்டு ரசிக்க ஆவலாயுள்ளேன்.

- கிரிஜா மணாளன்