மூன்று வயதில்
என்னை
என் தாயிடமிருந்து
பிரித்தார்கள

பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்கள்

அ எழுது என்றார்கள்
அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள்
ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள்
நான் அழுதுவிட்டேன்

முக்காடு போட்டுக்கொண்டு
சிரித்த முகத்துடன் இருக்கும்
என் அம்மாவைப் பார்த்தால்
’இ’ என்ற
உயிரெழுத்து போலவே இருக்கும்

Comments

உங்கள் துடிப்புகளோடு என் துடிப்புகள் மெட்டுக் கட்டுகின்றன
அ எழுதி அம்மாவுக்கு நிறைவான கவிதைகள்
ஆ எழுதி அம்மாவை தந்த அந்த ஆண்டவனுக்கு (அல்லாஹ்வுக்கு) நன்றி செய்யும் முகமாக தொழுது வருகிறீர்கள்
இ எழுதி இனிய கவிதைகளை தந்து இனிய மகிழ்வடைவது உங்கள் இன்பம்
அன்புடன்
முகம்மது அலி

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே