நிலம் ஒரு பாகம்
உப்புக் கடல் மூன்று பாகம்
அதுதான் பூமி

இயற்கையின் படைப்பில்
கண்ணீர்தான்
அதிகம்

அந்தக் கண்ணீரில்
நீந்தக் கற்றுக்கொண்டால்
கனவுகளைச்
சுதந்திரமாய் விரிக்கலாம்
கண்களின் திரைகளில்

கண்ணீரில் நீந்தும்போது
கவலைகள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றன
வெற்றி கொள்ளும்
ஆனந்தங்கள்
முன்னுக்கு வருகின்றன

நம் கனவுகளில்
நாம் மேலும் மேலும்
முன்னேறிக்கொண்டே இருக்கிறோம்

கைகூடாக் கனவுகள்
கண்ணீரில் கரைந்துபோகின்றன

வசந்த வாழ்க்கை
நம் கைகளைப் பற்றிக்கொண்டு
கூடவே வருகிறது

ஒன்பது ஓட்டைகளால்
கழிவுகளை வெளியேற்றுகிறது உடல்
அதனால்தான்
அது ஆரோக்கியமாய் இருக்கிறது

கனவுக் கழிவுகளை மட்டும்
ஏன் சேகரித்துச் சாகிறது
இதயம்

இதயத்தின்
கோடி வாசல்களையும்
திறந்துவிடுவோம்

தொலைந்து போகட்டும்
தொலைந்தே போகட்டும்
கழிவுகள்

Comments

சரியாகச் சொன்னீர்கள்...

எதுவும் கடந்து போக வேண்டும்...
Sasi Kala said…
கனவுக் கழிவுகளை மட்டும்
ஏன்
சேகரித்துச் சாகிறாது
இதயம்?
நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி தான்.
ஆம். உண்மைதான் ! நல்லனவற்றை எல்லாம் மறந்து விடுகின்றது மனம். அல்லனவற்றை எல்லாம் மறக்க மறுக்கிறது. துன்பம் தொடர்கதையாகின்றது.
உண்மையை வெளிப்படுத்தும் நல்ல சிந்தனை. அருமையான கவிதைதான்.
வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்