தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

கனவு.... காதல்
நளினம்... நாணம்
நட்பு... நேயம்
உறவு... ஊக்கம்
பரிவு... பாசம்
அகரம்... ஆதி
எளிமை... ஏற்றம்
எண்ணம்... ஏகம்

யாவும் யாவும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கருணை என்பினும் கடவுள் என்பினும் தீபம் தீபம்

உள்ளம்.... உயிர்
வளமை.... செழுமை
வண்ணம்... மின்னல்
தனிமை... இனிமை
மனிதம்... புனிதம்
மஞ்சள்... மாட்சி
பக்தி... பூஜை
மாண்பு... நோன்பு

யாவும் யாவும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

தீபமென்றால் ஒளி
ஆவளி என்றால் வரிசை
தீப.... ஆவளி... தீபாவளி

அழகு தீபங்களின்... அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்... இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி.... தீபாவளி

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்

இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

Comments

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்