புராதனக் கோட்டை

புத்தகம்
மூடிக்கிடக்கிறது

அது
காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

o

காற்றுச் சிறகுகளில்
குரல்களின் ஊர்வலங்கள்
வானொலியின்
வசீகரத் தேனலைகள்

நிற்கும்போதும் நடக்கும்போதும்
சமைக்கும்போதும் மட்டுமின்றி
படுத்துக்கிடக்கும்போதும்
காதுகளைக் கட்டி
இழுத்துக்கொண்டுபோக

வழியற்று கூடவே
கண்களும்
என்றோ புறப்பட்டுவிட்டன

புத்தகம்
மூடிக்கிடக்கிறது

அது
காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

o

ஆசைகளை அரைத்தள்ளி
வெறியேற்றி வீசியாடும்
ஆயிரத்தெட்டு
வீடியோ பூதங்களும்

ரிமோட் எனும்
அலாவுதீன் விளக்கும்

வண்ணவண்ணமாய்
வழிய வழிய

பெண்ணழகு மண்ணழகு பொன்னழகு
மயக்கிச் சாகடிக்கும்
காட்சியழகில்
அகலாத விழிகளாகிப்போக

புத்தகம்
மூடிக்கிடக்கிறது

அது
காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

o

எதைக்கேட்டாலும்
ஏழாயிரம் திசைகள் முட்டி

எழுபதாயிரம்
இடுகைகள் காட்டி

எழ முடியாமல்
இழுத்து வைத்திருக்கும்
இணைய முற்றம்
இனி என்னதான் மிச்சம்

நேரம் நெஞ்சம் நல்லநூல்
ஒன்றாவது தட்டுப்பட வேண்டாமா


புத்தகம்
மூடிக்கிடக்கிறது

அது
காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

o

கிராம மூதாட்டிகளின் காதில்
கனமாககத் தொங்கிக்கொண்டிருந்த
காதணியைத் தேடிப்போக
ஸ்மார்ட்போன் ஜீன்ஸ்களுக்குக்
காரணம்தான் ஏதும் உளதோ

கரையான் உண்டதுபோக
வெள்ளத்தில் சென்றதுபோக
எதிரிகள் எரித்ததுபோக
ஏதோ ஒருசில

அவையும் ஒரு வழியாய்
ஒலியும் ஒளியுமாய்
மடியில் வந்தபின்

மூச்சுமுட்டும்
நேரத்தொங்கல் நெரிசலில்
நாளை வாசிக்கலாம் என்ற
நெருடல் நினைப்பை மட்டும்
தொடர்ந்து தந்தவண்ணம்

புத்தகம்
மூடிக்கிடக்கிறது

அது
காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

வெள்ளைக்காரர்களும் வெறிநாய்களும்

வெள்ளைக்காரர்கள் ஒவ்வொரு நாட்டினுள்ளும் கள்ளம் புகுந்தார்கள்.

உண்மையான அமெரிக்கர்களை இந்தியர்கள் என்று அழைத்து அவர்களைக் கொன்று குவித்துவிட்டு தாங்களே அமெரிக்கர்கள் என்றார்கள்

உலக நாடுகளுக்கெல்லாம் வணிகம் என்ற பெயரில் உள்நுழைந்து கள்ளத்தனமாக நாடு பிடித்தார்கள்.

இன்று உலகம் ஒரு குடையின்கீழ் வருகிறது. அதற்குக் காரணம் கல்வியும் வேலைவாய்ப்புகளும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அங்கே புதிதாகக் குடிபுகுவோரின் தரத்தில் இருக்கிறது என்று கண்டுகொண்டது இந்த உலகு.

ஆகவே பல வெள்ளைக்கார நாடுகள் கீழத்தேச நாடுகளின் மக்களை குடிவரவேற்று வாழ்வு பெறுகிறது.

அமெரிக்காவில் மிக அதிகமான கல்விமான்களும் பெரும்பணியாளர்களும் இந்தியா சைனா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

கனடாவில் மிக அதிகமாக கிழக்குதேச மக்களையே காணலாம். அதன் வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது.

இப்படியாய் ஒரு நாட்டின் கொள்கை அமைக்கப்படும்போது சில வெறிநாய்கள் அவர்கள் ஊரிலேயே முளைக்கின்றன.

அந்த வெறிநாய்கள் குடிவரவாளர்களை வேட்டையாடப் பார்க்கின்றன.

குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் அவர்களுக்கு அடையாளம் காண்பதற்கும் வெறுப்பதற்கும் வசதியாக இருக்கிறது

அந்த வெறிநாய்களுக்கு ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு பப்பில் அவர்களோடு ஆடிப் பாடிச் சீரழியும் பெண்கள்தான் வேண்டும்.

ஒழுக்கம் நிறைந்த பெண்களை நாடு வரவேற்கும் ஆனால் வெறிநாய்களால் வரவேற்க முடியுமா?

ஆனால் அனைத்துக் காட்டிமிராண்டித் தனத்திற்கும் தீர்வு தரமான ஒழுக்கம்தான்.

ஆகவே சகோதரர்களே, ஒழுக்கம் வெல்லும் கவலையை விட்டு ஒழுக்கத்தையும் அறத்தையுமே கடைபிடித்து பெருவாழ்வு வாழுங்கள்

அன்புடன் புகாரி

வாட்சப்

WhatsApp என்பதைப் புலனம் என்கிறார்கள் சிலர். என்னாப்பு என்கிறார்கள் சிலர். வாடுசுஅப்பு என்கிறார்கள் சிலர் இப்படியாய் இன்னும் ஏராளம் பல்கிப் பெருகிச் செல்கின்றன
WhatsApp என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் இல்லை.
அது ஒரு நிறுவனத்தின் பெயர்.
செய்திகளைப் பகிர்வது அதன் சேவை.
அவ்வளவுதான்.
இதற்கான தமிழ்ச் சொல்லாக்கம் அவசியமற்றது
மைக்ரோ சாப்டுக்கு என்ன தமிழ்ச்சொல்லாக்கம் வைத்திருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. இதே வேலையாய் அலைகிறார்கள் சிலர்.
வாட்சப்பை நான் வாட்சப் என்றே அழைப்பேன்.
ஏன் என்கிறீர்களா? காரணம் இதோ...
Whats என்பது What's up என்ற ஆங்கிலக் கொச்சை வழக்கு
What’s up is an informal greeting (“Hey, buddy, what’s up?”),
இப்படி ஹே படி வாட்சப் என்று சொல்வது தமிழ் வழக்கப்படி
அண்ணே அண்ணாத்தே அண்ணாச்சி, டேய், பையா, எப்படி? என்ன புதினம்? என்பதுபோல ஊருக்கு ஊர் மாறும்.
App என்பது Application என்பதன் சுருக்கம்.
இனி ஜாலியாக ஒரு சொல்லாக்கம் பார்க்கமால் இதற்கு? https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)
Whats Wha's up இன் சுருக்கம்
அண் அண்ணாத்தேயின் சுருக்கம்
App Application னின் சுருக்கம்
நிர் நிரலியின் சுருக்கம்
அப்படீன்னா? அப்படியே வெள்ளைக்காரனை அடியொற்றி....
அண்நிர் என்று அழகாக அழைக்கலாமா https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)
WhatsApp என்றால் அண்நிர்
எப்புடீ ?? https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-) https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;-)