தெய்வம் மனிதன் கண்டு நெகிழ்ந்திடணும்
எல்லைக் கோடுகள் அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால் அழித்திடணும்
உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்
காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமைக் கட்டுகள் அறுந்து விழவேண்டும்
அழியும் அகிலம் தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்
காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்
காணும் உயிரைத் தழுவிடணும்
அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்
மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு நெகிழ்ந்திடணும்
9 comments:
புகாரி,
சீனா ஐயாவின் பதிவின் மூலம் உங்கள் தளம் வந்திருக்கிறேன்.
அருமையாய் எளிதான வார்த்தைகள். கவிதை ஒரு ஏக்கத்தை நம்மில் ஏற்படுத்துவது உறுதி. ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்றால் ஐயப்பாடே.
அன்பிற்கினிய சதங்கா,
உங்கள் வருகைக்கும் உங்கள் வருகையை வாரித்தந்த சீனாவுக்கும் நன்றிகள்.
ஏக்கம் வந்ததும் கனவு வந்துவிடும். கனவு வந்துவிட்டால் அது நிறைவேற வேண்டும் என்ற நினைப்பு வந்துவிடும். நினைப்பு நம்மைச் சும்மாவிடாது. சாத்தியப்படுத்திவிடும்!
கலாம் ஐயாவும் கனவுதானே காணச்சொன்னார். விழித்திருக்கும் கனவு.
கலாமின் தந்தை இவனொரு இந்தியக் குடியரசுத் தலைவனாவான் என்று நினைத்திருப்பாரா?
அந்த ரயில் வண்டியில் தூக்கியெறியப்பட்ட மோனந்தாஸ் கரம்சந்த் தான் இந்தியாவின் தேசத் தந்தையாவோம் என்று கனவாவது கண்டிருப்பாரா?
நல்லவை சாத்தியப்படும் என்று நம்புவோம். ஏனெனில் அவை சாத்தியப்படவேண்டும்.
தீக்குளித்த விதவை பொட்டுவைத்துப் பூவைத்து வாசல் கோலம் போடுகிறாள் இன்று. சாத்தியப்பட்டிருக்கிறதே சீர்திருத்தவாதிகளின், கவிஞர்களின் கனவுகள்.
என்னை இப்படி ஒரு நீண்ட மறுமொழி இடவைத்த உங்கள் மடலை நான் மனதாரப் பாராட்டுகிறேன் சதங்கா!
அன்புடன் புகாரி
அன்பின் நண்பரே புகாரி,
உங்கள் கவிதையின் அருமை பற்ற்றிக் கூறவும் இயலுமோ ?
அருமையான, அற்புதமான கவிதை
>>மதங்கள் யாவும்
இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு
தொழுதிடணும் >>
அன்புடன்
சக்தி
அத்தனையும் நடந்திட்டால்
அமைதி கிட்டும் மறுப்பில்லை
இறைவன் ஒருவனே
அவன் படைத்த மனிதனும் ஒன்றே.
ஒன்று இரண்டானது
ஆணும் பெண்ணும்
இரண்டிற்குப் பின் பிரிவினைகள்
எத்தனை எத்தனை!
படைத்திட்ட மனிதனையே
பதம்பார்க்கும் பிரிவினைகள்
மனித நேயம் எங்கே?
தெய்வம் தொழும் மனிதம்
கண்டிட வேணும்
புண்பட்ட இதயத்தை
கவிதையால் வருடுகின்றீர்
வாழ்க தமிழ்
வளர்க அன்பு
சீதாம்மா
எல்லைக் கோடுகள்
அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால்
அழித்திடணும்
:) அருமை
உலகை ஒற்றைப்
பூவாய்க் கண்டிடணும்
காற்றில் அலையும்
பறவைகளாய்
மனிதன் காலடி உலவும்
நிலைவேண்டும்
சிறுமை கட்டுகள்
அறுந்து விழவேண்டும்
ஒரளவு வந்திருக்கு. கனவு நிறைவேறணும்.
அழியும் அகிலம்
தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள்
நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும்
நிலம்வேண்டும்
காலை எழுந்து
பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு
திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று
எழுதிடணும்
:) எப்படி இப்படி ஒரு வீச்சு கவிதையில்.?
காணும் உயிரைத்
தழுவிடணும்
அன்புக் கவியால்
கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக்
கேட்டு களித்திடணும்
மதங்கள் யாவும்
இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு
தொழுதிடணும்
அற்புதம்.. நல்லென்ணம் படர்ந்துகொண்டே, வென்றுகொண்டே இருக்கட்டும்...
எல்லைக் கோடுகள்
அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால்
அழித்திடணும்
இந்த வரிகள் அருமை புகாரி .வாமன அவதாரத்திற்கு முன்பானது போல ...
நல்லா இருக்கு இந்த கற்பனை... காலை நடைப்பயிற்சி கோள்களிடையே ...
மதங்கள் ஒழியணும்ன்னு சொல்லாம இணையனும்ன்னு சொல்றீங்களே.. .நல்லா இருக்கு இந்த சிந்தனை.
மதங்கள் இணைஞ்சிட்டாலே ஒழிஞ்சாச்சின்னுதானே பொருள். இணைவது என்பது தனித்துவஙக்ளை இழக்காமல் நிகழாது. வெறுப்பை அகற்றாமல் நிகழாது. சமாதானம் கொள்ளாமல் நிகழாது. மதஙக்ளால் ஒருவருக்கும் ஒரு காயமும் இல்லை எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் எலோரும் சகோதர்கள் என்று ஆகிவிட்டால், ஒழிய வேண்டியது ஒழிஞ்சாச்சுதானே! மதம் ஒழிக என்று சொல்லும்போது அதன் உண்மையான பொருள் மதவெறி ஒழிக என்பதுதானே?
அன்புடன் புகாரி
அன்பின் புகாரி
அருமை அருமை - கவிதை அருமை
சிந்தனை மற்றும் சொற்கள் அருமை
ஒற்றைப்பூவாய் காணத் துடிக்கும் சின்னஞ்சிறுவன் தன் கால்களால் அழிக்கவேண்டுமாம்
எங்கும் செல்லும் சக்தி வேண்டுமாம்
எங்கும் அன்புப் பயிர்கள் நட வேண்டுமாம்
அந்திக் கவிதை எழுதி அன்புக் கவையால் கை குலுக்கி ட வேண்டுமாம்
ஒன்றே கடவுள் - ஒருவனே தேவன் - வேண்டுமாம்
அத்தனை ஆசைகளும் நிறைவேற நல்வாழ்த்துகள் நண்ப புகாரி
நட்புடன் ..... சீனா
Post a Comment